அறநெறிச்சாரம்

அறநெறிச்சாரம் என்பது ஒரு தமிழ் நீதி நூல். அறத்தின் வழியைப் பிழிந்து சாரமாகத் தருவதால் இப்பெயர் ஏற்பட்டது. 13ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்நூல் முனைப்பாடியார் என்னும் சமண முனிவர் ஒருவரால் இயற்றப்பட்டது. இதில் 226 வெண்பாக்கள் உள்ளன. முனைப்பாடியார் தொண்டை மண்டல கெடிலம் ஆறு அருகில் உள்ள திருமுனைப்பாடியில் வாழ்ந்த புலவர் எனத் தெரிகிறது. 




பலகற்றோம் யாமென்று தற்புகழ வேண்டா

அலர்கதிர் ஞாயிற்றைக் கைக்குடையும் காக்கும்

சிலகற்றார் கண்ணும் உளவாம் பலகற்றார்க்

கச்சாணி யன்னதோர் சொல்.” - 44 


விளக்கம்:-

சூரியனை கையில் இருக்கும் சிறிய குடை மறைக்கும். யாம் பல நூல்கள் கற்றோம் என்று தன்னைத் தானே புகழ்ந்து கொள்ளலாகாது. 

பல நூல்களையும் ஆராய்ந்து அறிந்தவர்களுக்கும் அச்சாணி போன்ற இன்றியமையாத உறுதிச் சொல் சில நூல்களைப் பயின்றாரிடத்து இருப்பதும் உண்டு


                      🙏🙏🙏🙏🙏🙏🙏


Bao-jia System (பாஜியா அமைப்பு)

 Bao-jia System (பாஜியா அமைப்பு)




சீனாவில் 13-வது நூற்றாண்டில் மக்களை ஒழுங்குபடுத்தவும், சட்ட ஒழுங்கை பராமரிக்கவும், வரி வசூலிக்கவும் உருவாக்கப்பட்ட ஒரு அமைப்பு தான் “பாஜியா” அமைப்பு. சீனாவில் 13ம் நூற்றாண்டடில் ஆட்சி புரிந்து மீங் (Ming) மன்னர் இதை நடைமுறை கொண்டு வந்தார். 


இந்த முறைப்படி 10 குடும்பங்களை ஒன்றிணைத்து உருவாக்கப்பட்டது "ஜியா" என்றும். 100 ஜியாக்களை உள்ளடக்கியது ஒரு "பா" என்றும் உருவாக்கப்பட்டது. இந்த "பா" அமைப்பின் மூத்த உறுப்பினர்கள் தலைவராக கருதப்பட்டனர். மூத்த உறுப்பினர்கள் அனைவரையும் ஒருங்கிணைந்து செயல்பட உதவியது. இந்தப் 'பா' அமைப்புக்குள் யார் தவறு செய்தாலும், இந்தப் 'பா' அமைப்பில் உள்ள மற்றவர்களும் பாதிப்புக்கு உள்ளாகலாம். வரி வசூலிப்பதற்கும், சட்ட ஒழுங்கை நிலை நிறுத்தவும் இது பெரிதும் உதவியது. சீன அரசாங்கம் ஒவ்வொரு 'பா'வுக்கும் இவ்வளவு வரி என்று நிர்ணயித்தது. அந்த வரியை வசூல் செய்வது அந்தப் அமைப்பில் இருந்த மூத்த உறுப்பினர்களின் கடமையாக்கப்பட்டது. மூத்த உறுப்பினர்கள் மற்ற குடும்ப உறுப்பினர்களை நன்றாக தெரிந்து வைத்திருந்ததால், வரி வசூலிப்பது வரி விதிப்பது தங்களுக்குள் எளிதாக நடந்தது. அரசாங்கம் ஒவ்வொரு ஊருக்கும் ஒரு ஊழியரை நியமிக்காமல் "பா" அமைப்பின் மூத்த உறுப்பினர்களிடமிருந்து வரி வசூலிக்கப்பட்டது. 



நீதிதேவன் மயக்கம் - பேரறிஞர் அண்ணா

நீதிதேவன் மயக்கம்” - பேரறிஞர் அண்ணா




அறம் அற்ற, பொறுப்பற்ற, சுயநலம் மிக்க, ஒரு சாராரின் நலன் கருதி இயற்றப்பட்ட இதிகாசமும், எழுதப்பட்ட வரலாறும் நம் மக்கள் மீது பக்தி என்ற போர்வையில் அடிமைத்தனத்தை திணித்தது. இப்படிப்பட்ட திணிப்புகளை மறு விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்ற பகுத்தறிவின் வெளிப்பாடே பேரறிஞர் அண்ணாவின் “நீதிதேவன் மயக்கம்” என்ற நாடகம்.


அண்ணாவின் நீதிதேவன் மயக்கத்தில் வரும் பாத்திரங்கள் இராவணன், கம்பர், இராமன், சீதை, அகலிகை, அக்கினி, துரோணர், விசுவாமித்திரர், பரசுராமன், வால்மீகி, துரோணர், கோட்புலி நாயனார், ஆகியோர் நடத்திய மனித நேயமற்றவன் கொடுமைகள் அனைத்தும் சமயச் சார்பான நூல்களில் ஞாயம் கற்பிக்கப்பட்டுப் பாராட்டப்படுகின்றன. அவர்கள் வன்கொடுமையை மேற்கொள்ள எந்தவிதமான காரணமும் இல்லை. சான்றாகத் துரோணர் ஏகலைவனின் கட்டை விரலை வாங்கியது. தன் கட்டை விரலை வெட்டிக் கொடுக்கும் அளவிற்கு ‘ஏகலைவன்’ எந்தத் தவறும் செய்யவில்லை.


கோட்புலி நாயனார்’ பதுக்கி வைத்திருந்த நெல் மூட்டைகளைப் பஞ்சம் பசியால் வாடிய ஏழை மக்கள் எடுத்துச் சென்றனர். அதன் காரணமாகவே அனைவரும் வெட்டிச் சாய்க்கப்பட்டனர். ஒரு பச்சிளம் குழந்தைகூட துண்டு துண்டாக வெட்டப்பட்டு படுகொலை செய்யப்பட்டது. இத்தகு கொடுமைகள் கடவுளின் பெயரால், சாதியின் பெயரால் ஞாயம் கற்பிக்கப்பட்டன. ஆனால் சீதையைச் சிறையெடுக்க இராவணனுக்கு ஒரு காரணம் இருந்தது. தன் தங்கையின் உடலுறுப்புகளைச் சிதைத்த கொடுமையே அக்காரணம். ஆனால் இரக்கமற்ற காரியத்தை செய்த ஆரிய திறவிகள் தேவர்களாகப்பட்டனர், இறக்கமற்ற அவர்களின் செயல்கள் ‘பக்தியின்’ பெயரால் புனிதமாக்கப்பட்டு நியாயமாக்கப்படுகிறது. 


இராமாயணம் - மகாபாரதம் எனும் இதிகாசங்கள் இன ஒடுக்கலை - சுரண்டலை - ஞாயப்படுத்த அமைந்தவை என்பதில் ஐயமில்லை.


                         🙏🙏🙏🙏🙏🙏🙏🙏