Showing posts with label பயணம். Show all posts
Showing posts with label பயணம். Show all posts

Hatshepsut (ஆட்செப்சுட்டு) - எகிப்தின் பெண்ணரசி

 Hatshepsut (ஆட்செப்சுட்டு)


இவர் வரலாற்றில் உறுதிப்படுத்தப்பட்ட இரண்டாம்  பெண்ணரசி ஆவார். 






இவர் பார்வோன் முதலாம் தூத்மோசின் மகளும் (Thutmose I) இரண்டாம் தூத்மோசின் பட்டத்தரசியும்  (Thutmose II) மூன்றாம் தூத்மோஸ்சின் பெரியம்மா  (Thutmose III) ஆவார்


ஆட்செப்சுட்டு தனது ஒன்றுவிட்ட சகோதரரான துட்மோஸ் IIயை மணந்தார். துட்மோஸ் II இறந்தபோது, ​​ஆட்செப்சுட்டு தனது வளர்ப்பு மகனான துட்மோஸ் III க்கு ஆட்சியாளராக ஆனார், இறுதியில் இருவரும் எகிப்தின் ஆட்சியாளர்களாக ஆனார்கள்.


இவரது கல்லறை கோவில் தேர் எல் பகாரியில் (Deir el-Bahari) உள்ளது.








ஆட்செப்சுட்டின் ஆட்சி அடிப்படையில் அமைதியான ஒன்றாக இருந்தது, மேலும் அவரது வெளியுறவுக் கொள்கை போரை விட வர்த்தகத்தை அடிப்படையாகக் கொண்டது. மறுசீரமைப்பு மற்றும் கட்டிடம் முக்கிய அரச கடமைகளாக இருந்தன, மேலும் அவர் விரிவான கட்டிட திட்டங்களை மேற்கொண்டார், அதாவது தேசிய கடவுளான அமோன்-ரேயின் (Amon-Ra) கோவில்களில்; கர்னாக் (Karnak) கோவில் வளாகம்; மற்றும் டேர் அல்-பஹ்ரி (Deir el-Bahari) கோவிலில் தனக்கான இறுதி நினைவுச்சின்னம் எழுப்பினார்.

அமோன் சூரியக் கடவுளான ரேவுடன் இணைக்கப்பட்டு, எகிப்தின் மிக சக்திவாய்ந்த தெய்வமான அமோன்-ரே ஆனார்.


ஆட்செப்சுட்டின் மரணத்திற்குப் பிறகு, வரலாற்றுப் பதிவுகளிலிருந்து அவளது அடையாளத்தை அழிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன, இது பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு அவர் மீண்டும் கண்டுபிடிக்கப்பட்டது.



"Now my heart turns to and fro, in thinking what will the people say, those who shall see my monument in after years, and shall speak of what I have done." - Inscription from Hatshepsut's temple


பயணம் தொடரும்..



அக்கெதென் - ஏகத்துவம் சமய மாற்றம்

 Akhenaten (அக்கெதென்) - Amenhotep IV




புது எகிப்து இராச்சியத்தை (கிமு 1351–1334) 17 ஆண்டுகள் ஆண்ட 18-ஆம் வம்சத்தின் 9-ஆம் பாரோன் ஆவார். இவரது பட்டத்து இராணி Nefertiti (நெஃபர்டீட்டீ) அழகும், அறிவும் நிரம்பியவள்.

பண்டைய எகிப்தின் முதலாம் பெண் அரசி நெஃபர்டீட்டீ ஆவார்

இவரது எட்டு மகன்களின் ஒருவர்தான் பாரோன் Tutankhamun (துட்டன்காமூன்) 


Tutankhamun (துட்டன்காமூன்) 

(கிமு 1341 – கிமு 1323) இவர் தனது 8ஆவது அல்லது 9ஆவது வயதிலேயே பாரோன் ஆனார். அக்கெதென் மறைவிற்குப் பின் அவரது மகன் துட்டன்காமூன் எகிப்தின் அரியணை ஏறினார். பதவியேற்று கிட்டத்தட்ட 9 ஆண்டுகள் மட்டுமே உயிரோடு இருந்தார். 













அக்கெதெனின் monotheism (ஏகத்துவம்) மதத்தை உருவாக்கனார்

Aten (ஏடன்) ஆரம்பத்தில் சூரியக் கடவுளான Ra(ராவின்) வெளிப்பாடாகக் கருதப்பட்டது, ஆனால் பின்னர் Atenism (ஏடெனிசம்) எனப்படும் ஒரு கடவுளை மட்டும் வணங்கும் மதத்தின்(monotheism) மையக் மாறியது, பிந்தைய வாழ்க்கையை விட பூமியில் உள்ள வாழ்க்கையை வலியுறுத்தியது.


மேலும் தொடரும்..

எகிப்து பயண குறிப்புகள்

 இரா (Ra), இரண்டாம் ராமேசஸ் மற்றும் செக்மெத் பற்றிய குறிப்பிகள்


On the right is “Ptah”

Center is “Ramesses II”

On the left is “Sekhmet”


இரா (Ra):- தலையில் கதிரவ தகடும் வல்லூற்றின் தலையும் கொண்ட இரா எனும் சூரியக் கடவுள்.






மேலும் இரா எனும் சூரியக் கடவுளுடன் அமூன் (Amun) கடவுளை இணைத்து அமூன்-ரா (Amun-Ra) எனும் புதிய கடவுள் வழிபாடு தொடங்கியது.


கிமு 16 முதல் 11-ஆம் நூற்றாண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் பண்டைய எகிப்தில் சுயம்புவாகத் தோன்றிய அமூன் - இரா கடவுள் வணக்க முறை செழித்தோங்கியது. பிரபஞ்சத்தின் படைப்புப் கடவுளான அமூன் - இரா வழிபாட்டை எகிப்தியர்கள் பயபக்தியுடன் மேற்கொண்டனர்.


செக்மெத் (Sekhmet):- இது ஒரு பெண் தெய்வம். இவர் கதிரவக் கடவுள் இராவின் மகள் ஆவார். போர் மற்றும் மருத்துவம் சார்ந்த தெய்வம். இத்தெய்வம் எகிப்திய பார்வோன்களின் பாதுகாவலராகவும், போரில் அவர்களை வழிநடத்திச் செல்பவராகவும் கருதப்படுகிற போர்க் கடவுள்


தாவ் அல்லது பிதா (Ptah) பண்டைய எகிப்தின் சமயத்தில் கூறப்படும் படைப்புக் கடவுள் ஆவர். இவர் பெரும்பாலும் பச்சை நிறத் தோல் மற்றும் தாடியுடன் மூன்று சின்னங்கள் பொருந்திய செங்கோலை கையில் ஏந்தியபடி காட்சியளிக்கிறார். மூன்று சின்னங்களில் 1. சக்தி 2. வாழ்வு 3. நிலைத்தன்மை குறிக்கிறது.



Ramesses 2





இரண்டாம் ராமேசஸ் கிமு 1279–1213 புது எகிப்திய இராச்சியத்தை ஆண்ட 19வது வம்சத்தின் முன்றாவது பார்வோன் ஆவார். மொத்தம் 66 ஆண்டுகள் இரண்டு மாதங்கள் எகிப்தின் மன்னராக ஆட்சிபுரிந்தார். இவரது தந்தை முதலாம் சேத்தி (Sethos I) அவர். 


இரண்டாம் ராமேசஸின் மனைவின் பெயர் நெபர்தரி (Nefertari). Valley of Queens (ராணிகளின் சமவெளியில்) இவரது பெரிய கல்லறை மிகவும் அழகிய முறையில் நிறுவப்பட்டுள்ளது. 


இரண்டாம் ராமேசஸ் பண்டைய எகிப்தின் மிகவும் வெற்றிகரமான பாரோக்களில் ஒருவராக பரவலாகக் கருதப்படுகிறார், 15 க்கும் பேற்ப்பட்ட போர்களை வழிநடத்தினார். இவை அனைத்தும் வெற்றிகளுக்கு வழிவகுத்தன, கடேஷ் போரைத் (Battle of Kadesh) தவிர, இது பொதுவாக வெற்றி தோல்வி இல்லாம் முடிந்ததாக கருதப்படுகிறது.


தன் அட்சிகாலத்தில் மொத்தம் 14 சேத் திருவிழாக்களை கொண்டடிய பெருமை இவருக்கு உண்டு. 


சேத் திருவிழா (Sed festival) பார்வோனின் 30 ஆண்டு ஆட்சிக் கால நிறைவிற்காகவும், பின்னர் ஒவ்வொரு 3 அல்லது 4 ஆண்டுகளுக்கு ஒரு முறையும் மன்னரின் ஆட்சிக் காலத்தைப் போற்றும் வகையிலும், மன்னருக்கு நல்ல உடல் நலத்தையும் வேண்டியும் அமூன் மற்றும் இரா கடவுளர்களுக்கு படையல் விருந்து மற்றும் ஊர்வலத்துடன் சிறப்பிக்க கொண்டாடப்பட்டது. பண்டைய எகிப்தியர்களின் ஓநாய்க் கடவுளான சேத் பெயரால் இத்திருவிழா பெயர் பெற்றது





அவரது மரணத்திற்குப் பிறகு, அவர் Valley of Kings (கிங்ஸ் பள்ளத்தாக்கில்) உள்ள ஒரு கல்லறையில் (KV7) அடக்கம் செய்யப்பட்டார். அங்கு 1881 இல் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டது. ராமேசஸின் மம்மி இப்போது கெய்ரோ நகரில் அமைந்துள்ள எகிப்திய நாகரிகத்தின் தேசிய அருங்காட்சியகத்தில் (National Museum of Egyptian Civilization(NMEC)) காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.


மேலும் தொடரும்…


 

கோழி நடுகல்

காலம்:- கி.பி. 3-4 ஆம் நூற்றாண்டு

இடம்:- விழுப்புரம் பொதுப்பணித் துறை அலுவலகம்



  1. முகையூரு மேற்சே, 
  2. ரிகு யாடிக, 
  3. ருகிய கோழி

முகையூர் மேற்சேரிக்கு; யாடி கருகிய கோழி


விளக்கம்:- 

“முகையூரில் மேல் சேரி என்னும் இடத்தில், சண்டையிட்டு இறந்த கோழி”





ஆதியில் நம் வழிபாட்டு முறைகள் நடுகல்லில் இருந்தே தோன்றின என்கிறது வரலாறு. நடுகல், கந்து எனும் கல்தூண் தொடங்கிய நம் வழிபாடுகள். சிந்துச் சமவெளி நாகரிகத்தில் போர்ச் சேவல்களைச் சிறப்பிக்கும் சான்றுகள் உள்ளதுபோல் தமிழகத்திலும் பல சான்றுகள் உண்டு. அவற்றில் ஒன்று அரசலாபுரம் கோழி நடுகல்.


கி.பி. 3-4 ஆம் நூற்றாண்டு முதல், தமிழ் பிராமி எழுத்து முறையிலிருந்து பிரிந்து வட்டெழுத்து முறையாக மாறத்தொடங்கியது. இந்த காலகட்டத்தில் எழுதப்பட்ட கோழிக்கான நடுகல்.


                        🙏🙏🙏🙏🙏🙏🙏🙏



பழுவேட்டரையர் தேடி - பயணக் கட்டுரை

 கீழையூர்மேலப்பழுவூர்கீழப்பழுவூர்:-  



    இந்த கிராமத்தின் பழைய பெயர் மன்னுபெரும்பழுவூர் என இருந்ததுசோழ மன்னர்களுக்கும் “பழுவேட்டரைய” அரசர்களுக்கும் நெருங்கிய தொடர்பு இருந்ததுமுதலாம் ஆதித்த சோழன் காலம் முதல் முதலாம் இராஜேந்திர சோழன் காலம் வரை சோழ மன்னர்களுடன் பழுவேட்டரையர்கள் தொடர்பு கொண்டு விளங்கியதை வரலாற்றுச்சான்றுகளுடன் அறிய முடிகிறதுபழுவேட்டரைய அரசர்கள் ஆட்சி செய்த ஊர் “பழுவூர்”.










கல்வெட்டுகள்:- 

** முதலாம் ராஜராஜ சோழனது காலத்தில் அவருடைய தேவியும்பழுவேட்டரையர் மகளுமான நக்கன் பஞ்சவன்மாதேவி வேண்டுகோளுக்கிணங்கிநெல் தானமாக அளித்த செய்தி கூறப்படுகிறது

** இங்குள்ள கல்வெட்டுகளில் பழமையானது ஆதித்த சோழனது கல்வெட்டுகள்இதில் இடம்பெற்றுள்ள பழுவூர்மரபின் முதல் இரு மன்னர்களான குமரன் கண்டனையும்குமரன் மறவனும் இக்கோயில் எடுப்பிக்க காரணமாகஇருந்தவர்கள்

** பழவேட்டரையன் கைக்கோள மாதேவன் ரணமுகராமன் ஆகியோரின் பெயர்கள் இங்குள்ள கல்வெட்டுகளில்காணப்படுகின்றன


இந்தப் கல்வெட்டுகளை காலவரிசைப்படி கி.பி 881 முதல் கி.பி 1020 வரை பழுவூரை ஆண்ட மன்னர்களைக்கீழ்க்கண்டவாறு வரிசைப் படுத்தலாம்.


1. குமரன் கண்டன்

2. குமரன் மறவன்

3. கண்டன் அமுதன்

4. மறவன் கண்டன்

5. கண்டன் சத்ருபயங்கரன்

6. கண்டன் சுந்தரசோழன்

7. கண்டன் மறவன்


IMG_2459.jpeg


மூத்த சகோதரர்கள் குமரன் கண்டன்குமரன் மறவன் சுந்தரசோழர் காலத்தில் வாழ்ந்தவர்கள். 'பெரியபழுவேட்டரையரையும்', 'சின்னப் பழுவேட்டரைய்ராகவும்’ இருக்காலம்



சாக்கை கூத்து:-

** கீழப்பழுவூர் ஆலந்துறையார் கோவிலில் கூத்துக் கல்வெட்டு உள்ளன.

**தமிழ்நாட்டின் “சாக்கைக் கூத்துக்கான” ஆரம்பகால கல்வெட்டுக் குறிப்பு (கி.பி. 979) கீழ்பழுவூரில் உள்ள  ஆலந்துறையார் கோவிலில் உள்ளது


காமரசவல்லி கல்வெட்டு:- 

**சுந்தரசோழனால் (கி.பி.957-974) அவன் ஆட்சி காலத்தில் கி.பி.962ம் ஆண்டில் கட்டப்பட்டதாக கல்வெட்டுகுறிப்பிடுகின்றது.

**சக்கைக் கூத்து நடத்திபொன்னும் நிலமும் பரிசாகப் பெற்றார்சாக்கை மாராயன் விக்ரமசோழன் காமரசவல்லிகோயிலில் மூன்று நாட்கள் சக்கைக் கூத்தை நிகழ்த்தியதாக முதலாம் ராஜேந்திரன் காலக் கல்வெட்டு (1041CE) மூலம் அறிகிறோம்


                          🙏🙏🙏🙏🙏🙏🙏