தமிழர் பண்பாடும் தத்துவமும்

தமிழர் பண்பாடும் தத்துவமும்
நாவானமாமலை




இந்நூல்பண்பாடு என்றும்தத்துவம் என்றும் இரண்டு பிரிவுகளையுடையது

தத்துவம்:- 
உலக தத்துவத்தை இருவகையாகப் பிரிக்கலாம்
  1. பொருள் முதல் வாதம் (லோகாயதா)
  2. கருத்து முதல் வாதம் (ஆன்மீகம்)
இவையிரண்டும் நேர்முரணான கண்ணொட்டங்கள்.

லோகாயதா:- பிரபஞ்ச் பொருள் கலவையினால், பேரண்டம், விண்மீன், உலகம், மனிதன் மற்றும் பிற உயிரினங்கள் தோன்றினபின்னர்மனிதன் கடவுளை படைத்தான்கடவுள்ஆன்மாமறுபிறப்புசொர்க்கம்நரகம்எல்லாம் மனிதனின் கற்பனையேலோகாயதா என்பது விஞ்ஞான ரீதியில் வாதத்தை முன்வைக்கிறது. காட்சிப் பிரமாணத்தின் (verifiable) மூலமே அறிவு பெற முடியும் என் கூறுகிறது. 

ஆன்மீகம்:- கடவுள், புருஷ் முதலில் தோன்றியது. கடவுள் தான் பேரண்டம், விண்மீன், உலகம், மனிதன் மற்றும் பிற உயிரினங்கள் என அத்தனையும் படைத்தார்ஆன்மீகம் என்பது அனுமானம்/கற்பனை/நம்பிக்கை ரீதியில் வாதத்தை முன்வைக்கிறது. அனுமானப் பிராமணம் முலம் தத்துவத்தை விளக்கமளிக்கும்

தத்துவம் தோன்றிய காலத்திலிருந்தேவெவ்வேறு காலக் கட்டங்களில் வெவ்வேறு வகையான பொருள்முதல்வாதக் கோட்பாடுகள் வழக்கிலிருந்திருக்கின்றன.

பைந்தமிழ் இலக்கியத்தில் காணப்படும் லோகாயதா தத்துவங்கள்/சிந்தனைகள் சில:-

நிலம் தீ நீர் வளி விசும்பொடு ஐந்தும்
கலந்த மயக்கம் உலகம்

        -தொல்காப்பியர் - பொருளதிகார மரபியல் 635

மண் திணிந்த நிலனும்
நிலம் ஏந்திய விசும்பும்
விசும்பு தைவரு வளியும்
வளித் தலைஇய தீயும்
தீ முரணிய நீரும் என்றாங்கு
ஐம்பெரும் பூதத்து இயற்கை

         - புறநானூறு 2, அடி 1-6

பாங்குறும் உலோகாயதமே பௌத்தம் 
சாங்கியம் நையாயிகம் வைசேடிகம் 
மீமாம்சம் ஆம் சமயம்சு
”      
        மணிமேகலை 27:78-30

தமிழின் ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்றான மணிமேகலையில்சமயக் கணக்கர் காதை பகுதியில்பூதவாதிகள் கருத்து இடம்பெற்றுள்ளது

உயிரொடும் கூட்டிய உணர்வுடையப் பூதமும்,
உயிரில்லாத உணர்வில்லா பூதமும்,
அவ்வப் பூத வழிஅவை பிறக்கும்
மெய்வகை இதுவே வேறுரை விகற்பமும்
உண்மைப் பொருளும் உலோகாயதன் உணர்வே

விளக்கம்:- அத்தனை பூதங்களும் உணர்வுயில்லாதவையேஅவற்றின் சேர்க்கையினால் பொருள் உண்டாவதை போலஉயிரும் என்ற உணர்வு உண்டாயிற்று என்பது உலோகாயதர் கொள்கை.
ஆன்மா என்று ஒன்றை ஏற்றுக்கொள்ளவில்லைஇந்த உடல் அழியும் பொது உடலின் உணர்வுகளும் இத்துடன் அழிந்துவிடுகிறது

ஆரம்பகால இலக்கியத்தில் பெரும்பான்மையான பாடல்களில் கருப் பொருள்கள் உலகியல் வாழ்க்கை பற்றியதுதான்அகம்புறம் வாழ்க்கை பற்றிதான் தமிழனின் சிந்தனையில் இருந்ததுசொர்கம்நரகம் பற்றி சிந்தனை இல்லாமல் இவ்வுலகில் அறம்பொருள்இன்பத்தோடு வாழ்வதையே இலட்சியமாக கொண்டிருந்தனர்
இம்மையில் செய்கின்ற செயல்களுக்கான பயனும் இந்த பிறவியிலேயே கிடைத்துவிடுகிறதுஆகையால்இம்மையில்செய்த வினைப்பயன் (கர்ம காரியம்மறுமையில் (அடுத்த பிறவியில்அனுபவிப்போம் என்பது பொய் என்பது லோகாயதம் கூறுவதாக மணிமேகலை முலம் அறிய முடிகிறது

சங்ககாலம் என்பதே தமிழகத்தில் ஒரு மாறுதல் நிலையைக் குறிப்பதாகும். “அது இனக்குழு வாழ்க்கை அழிந்து நிலவுடைமையாக மலரும் காலக் கட்டத்தைக் குறிக்கிறது.” 
இந்த மாறுதல் பிற்காலப்புலவரிடம் நன்கு காணலாம்.
பிற்காலப் புலவர்கள்இந்த உலகம் துன்பம் மயமானது என்றும் இறைவன்தான் பிறவா வரம் தந்து விடுபேறு அருள்வார் என்று மக்களிடம் பரப்பினர்மேலோகத்தில் (சொர்கம்இறைவன் உங்களுக்கு இன்பம் அருள்வார் என்று பரப்பினர்
லோகாயதம் நன்னெறி அற்றவர் பின்பற்றுவது என்ற தவறான கூற்று வேண்டும் என்றே மதவாதிகளால் பரப்பப்பட்டதுஇறைவனை சரணடைந்தால் தான் உலகவாழ்வில் முக்தி கிடைக்கும் என்று பரப்பினர்இறைவணக்கம்தான் ஒழுக்கமான நெறி என்று போதித்தனர்
இந்திய தத்திவ வரலாற்றில் பழைய கொள்கைகளுக்கு மாறான கொள்கைகளை, பழைய கொள்கைகளைக் கூறும் உரை நூல்களில் சேர்த்து விடுவார்கள். 


பண்பாடு:- 

இந்த நூல் சமூக பண்பாட்டு மானிடவியல் (Cultural anthropology) பற்றி பல உதாரணங்களுடனும்தெளிவான விளக்கங்களுடனும் எடுத்துரைக்கிறதுஇது பண்பாடு இணைப்பின் கூற்றாக முருகன்-ஸகந்தன் இணைப்பு பற்றி ஆசிரியர் கூறும் முக்கியமான கூறுகள்:-
  • முருகனை போன்ற போர் தெய்வத்தை உலகமெங்கும் உள்ள பண்டைய வேட்டை இனக்குழு மக்கள் வழிப்பட்டுவந்தனர்
  • பழைய கற்காலம் :- புராதான இனக்குழு இரத்த உறவுமுறை கொண்டதாகும்கற்களை ஆயுதமாக பயன்படுத்தினர் மற்றும் வில்அம்புமரக்கலம்நார்த்துணிகளை பயன்படுத்தினர்வேட்டையாடுதல்உணவை சேகரித்தல் மட்டும் பிரதான தொழிலாக இருந்ததுஒவ்வொரு இனக்குழுவுக்கும் ஒரு குலக்குறி (totem) இருந்ததுபெண்கள் இனக்குழுவின் வளமைக்கு காரணம் என்பதாலும்பெண்ணுக்கு தெய்வீக சக்திஇருப்பதாக எண்ணி ‘தாய்-தெய்வ’ வழிபாடு வந்திருக்க வேண்டும்
  • புதிய கற்காலம் (Neolithic- 8000 - 4500 BC) பானை செய்ய அறிந்தனர்தாழிகள் தானியங்கள் சேகரிக்கவும்மரண சடங்குகளிலும் முக்கியத்துவம் அடைந்ததுகால்நடை வளர்ப்புபுராதன விவசாயம் முக்கிய தொழிலாகவும் இருந்ததுஉணவு உற்பத்தி உபரிக்கு வழிவகுத்ததுஉணவு உபரி கைவினை கலைஞர்களை உக்குவித்ததுபிற இனக்குழுயுடன் பரிவர்தனை செய்தனர்இப்போழுது பிரமலமாக இருக்கும் எந்த தெய்வமும் அப்பொழுது வழிபாட்டில் இல்லைபண்டைய காலத்து மக்கள் மரம்மலைவிலங்குஆறு முதலியன வணங்கிவந்தனர்
  • இனக்குழு இணைப்புஉழவின் முலமாக மருத நாகரிக வளர்ச்சியடைந்ததுஉழவு தொழிலில் கால்நடை தான்செல்வம்அதனால் அநீரை கவர்தல்மீட்டல் போர்கள் நடந்து கொண்டே இருந்ததுபோர் தெய்வமாக தமிழக மக்கள் “கொற்றவையை தான் வணங்கினர்இது தாய்-தெய்வ வழிபாட்டு முறை
  • உலோக காலம்சமூக மாற்றம் காரணமாகவும்கலைகளின் வளர்ச்சி காரணமாகவும்பல இனக்குழுக்களின் வர்த்தக தொடர்பு காரணமாகவும்மரம்/கந்து வழிபாடு இருந்து வேல் வழிபாடாக மாறியது.
  • சங்க காலம்தமிழகத்தில் சுமார் 300 BC பிறகு வரலாற்றுக் காலம் தொடங்கியதுசங்ககாலம் தமிழகத்தில் ஒரு மாறுதல் நிலையைக் குறிப்பதாகும். “அது இனக்குழு வாழ்க்கை அழிந்து நிலவுடைமையாக மலரும் காலக்கட்டத்தைக் குறிக்கிறது.” தாய்-வழி தெய்வ வழிபாட்டில் இருந்து தந்தை-வழி தெய்வ வழிபாட்டுக்கு மாறியபொழுதுபோர் கடவுளாக இருந்த ‘கொற்றவையின் இடத்தை ‘முருகன்’ பெருகிறான். “வெற்றிவெல்போர்க் கொற்றவை சிறுவ!”. என்று வர்ணிக்கபடுகிறான்இக்காலத்தில் ‘கொற்றவை’; ‘பழையோள்’ ஆகிவிட்டால்இனக்குழு இணைப்பு காரணமாககுறிஞ்சி மக்களின் செழுமை குறியான வள்ளி(வள்ளிக்கிழங்குபோர்க்கடவுள் முருகனுக்கு மனைவியாக கருதினர். (பி.கு வள்ளிக்கிழங்கு தோண்டும் இடத்தில் கண்டெடுக்கப்பட்டால் வள்ளி என்று ஒரு கதை உண்டுஇப்படிப்பட்ட கதைகள் பல இனக்குழுவிடம் உண்டுசீதா பூமியிலிருந்து பிறந்தார் கதையும் உண்டு)
  • ஆரியர்களின் பிரதான கடவுள் இந்திரன்வேத காலத்திலும்ஆரண்யக காலத்திலும் (Aranyaka -Forest Book ~ 700 BC), சந்தோக்ய உபநிஷத்த்திலும் (Chandoya Upanishad - 600 BC) “ஸ்கந்தனும்” “சண்முகமும்” பற்றியகுறிப்புகள் ஒருசில இடங்களில் கிடைக்கிறது
  • வேதகாலத்திற்கு பிறகுஅதுவரை ஆரிய பிரதான கடவுள் இருந்த இந்திரன்அக்னிவருணன் போன்ற ஆரியதெய்வங்கள் புகழ் மங்கிபுதிய இளமையான போர் கடவுளுக்கு கங்கை நாகரிக மக்களிடையே முக்கியத்துவம் பெறுவதை காணலாம்ஆரிய-திராவிட கலப்பும் ஒரு காரணம்புதிய கடவுள்கள் பழைய கடவுளின் பிள்ளையாகவோமருமகனாகவோ உறவுமுறை உருவாக்கப்பட்டதுசண்முகம் -> “அக்னி-சுவாஹாவின் புத்திரனாகவும்இந்திரனின் மருமகனாகவும் கதைகள் உருவாக்கப்பட்டது
  • சமூக மாறுதலுக்கு கிரேக்க படையெடுப்பும்வணிகமும் ஒரு முக்கிய காரணம் என்றால் அது மிகையாகாது. 300-400BC பிறகு இந்திய பண்பாட்டில் பல மாறுதல் நிகழ்கிறதுகிரேக்க கடவுள் ‘டையோனிசஸ்’ (Dionysusஒரு விவசாயம் மற்றும் போர் கடவுள்நாகார்சுனகொண்டா (Nagarjunakondaஎன்ற ஊரில் “டையோனிசஸின்” (Dionysus) சிலை உள்ளது.
Dionysus



  • 100 BC - Post Indo-Greek empire - Kushan and Yoddheya Republic - இப்பகுதிகளில் “கிரேக்க மொழிபிரதான மொழியாக இருந்ததுஇவர்கள் வெளியிட்ட நாணயங்களில் ஸகந்தன் (Skando-Komaro)/விசாகன்(Bizago) உருவங்கள் காணப்படுகிறது.
  • நீர்ப்பெயற்று” சங்ககாலத் துறைமுகங்களில் ஒன்றுஇப்பொழுது சாளுவாண்குப்பம் என்று அழைக்கப்படுகிறதுஇக்காலக் கடன்மல்லை (மாமல்லபுரம்நீர்ப்பெயற்று என்னும் துறைமுகம் என அறிஞர்கள்கருதுகின்றனர். (SopatmaPeriplus of the Erythraean Sea). சாளுவாண்குப்பத்தில் சங்ககால முருகன் கோவிலில் கிடைத்த சுடுமண் பாண்டத்தில் “குரவைக் கூத்து” சித்தரிக்கப்பட்டுள்ளது. குரவைக் கூத்தாடும் என்பது ஒருவரை ஒருவர் தழுவியாடும் வழக்கம் உண்டுகூத்தில் ஆடும் ஆடவரும் பெண்டிரும் இரண்டிரண்டு பேராகத் தழுவி ஆடுவர். இவ்வகைக் குரவையினை இலக்கியங்கள் தழூஉ எனவகைப்படுத்துகின்றனஇருவராகத் தழுவி ஆடும் போது ஆடியபடியே தழுவும் தமது இணையை மாற்றுவர்ஒரே இணையோடு இறுதிவரை ஆடுவதில்லை ஆட்டத்தின் போக்கில் பிணைகள் மாறிக்கொண்டேயிருக்கும். இதனைப் 'பல் பிணைத் தழீஇஎனத் திருமுருகாற்றுப்படை குறிப்பிடுகின்றதுதமிழகத்தில் பல இனக்குழுமற்றும் பண்பாடு இணைப்பினால் இவ்வாறு இருந்த முருகன் வழிபாடுஆரியர்களின் ஆதிக்கத்தால் மேலும் மாற தோடங்கியது.
  • 500 CE காளிதாசன் எழுதிய ‘குமாரசம்பவம்’ (“The Birth of the War God”) கதையில் சிவன்-பார்வதியின் இளையகுமாரனாக பரிணாம வளர்ச்சி பெற்றார்.
  • தமிழகத்திலேயே தோன்றிய பல தெய்வ கருத்துக்கள்வடநாட்டில் தோன்றிய கதைகளோடு இணைப்பு பெற்று ஒன்றுப்படுவதை பரிபாடலில் உள்ள முருகனைப் பற்றி செய்திகளில் தெரிகிறது
  • பல்லவர்களின் ஆட்சிகாலத்தில் வட இந்திய ஸகந்தன் வழிபாடு இங்கே முருகனாக சித்தரிக்கப்பட்டது


குலக்குறியாக (Totem) மாற்றம்/இணைப்பு



வேட்டையாடும் மனிதர்கள் அவர்களின் சிந்தனை விளங்குகளை பற்றி இருப்பது இயல்புஅவ்விலங்குகளை ஆதிமனிதன் பாறை ஓவியமாக தீட்டினான்விலங்குகளை பல இனக்குழு மக்கள் குலக்குறியாக (totem) வைத்தனர்பல இனக்குழுவுக்கு மரங்கள்செடுகள்பூக்களும் குலக்குறியாக (totem) இருந்ததுஇலக்குறியை வணங்கவும் செய்தனர்கற்பனை மற்றும் கலை வளர்ச்சியினால் இந்த மிருக குலக்குறிக்கு மனித உடலும் பொறுத்தப்பட்டதுஇதை “anthropomorphic conception” என்று கூறுவார்கள்

உதாரணமாக Löwenmensch Figurine (Lion-man of the Hohlenstein-Stade-Germany) 35,000 – 40,000 ஆண்டுகள் பழமையானவை. இந்தியவில் நந்திஅனுமன்கருடன் என்று பல உதாரணங்கள் கூறலாம்ஒரு இனக்குழு மற்றொரு இனக்குழுயுடன் போரிடும் பொழுதுதோற்ற இனக்குழுவின் இனக்குறியை தங்கள் இனக்குறிக்கு கிழே வைத்தனர்.காயானை குலக்குறி கொண்ட இனக்குழுஎலியை குலக்குறி கொண்ட இனக்குழுவை வென்றபொழுதுயானையை மேலேயும் எலியை கிழேயும் குறியிடாக காண்பித்தனர்மேலும்சேவல் இனக்குழுமயில் மற்றும் பாம்பு இனக்குழுவை வென்றபொழுது சேவல் மேலேயும்மயில் மற்றும் பாம்பு கிழேயும் குறியிடாக காண்பித்தனர்இந்த இனக்குழு மக்கள் சமயம்/வழிபாட்டால் ஒன்றினைத்தபோதுஅந்த கடவுள்கள் இந்த இனக்குறியிட்டை பெற்றுக்கொண்டது.  


புனைகதைகள்: 
புதிய கற்காலம் (Neolithic- 8000 - 4500 BC). கால்நடை வளர்ப்புபுராதன விவசாயம் தோன்றியதுஅக்காலத்தில்இனக்குழு மக்கள் இயற்கையை கண்டு அஞ்சினர்இந்த பயத்தை போக்க மந்திர சடங்குகளை(Customs, Rituals and Magic) செய்தனர்இச்சடங்குகள் அவர்களுக்கு மழைஉணவுபிறப்புஇறப்புவேட்டைகால்நடைபாதுகாப்புசெழிப்பு ஆகியவற்றைத் தரும் என்று கருதினர்இவை ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொறு சடங்குசெய்தனர் மற்றும் கடவுளை வழிப்பட்டனர்
அவர்களுக்கு புரியாத இயற்கை சக்தியை கடவுள் அல்லது அணங்குதான் காரணம் என்று வழிபட்டனர்பலி கொடுத்து தெய்வத்தை சந்தபடுத்தலாம் என நம்பினர்கடவுள்கள் பற்றி அக்கால மனிதர்கள் பல புனைகதைகள் உருவாக்கினர்
கதைகளில் மிகப் பழமையானது “The Epic of Gilgamesh”. பாபிலோனிய மற்றும் கிரேக்க கதைகளும் மிகப்பழையானவைஇதற்கடுத்து யூதர்களின் “யெகோவா” (Jehovah) இக்கதைகளின் பரிணாம வளர்ச்சி பைபிள் கதைகளில்காணலாம்

எங்கலஸ் (Friedrich Engelsகூறுவது போல் “…சமயம், கடவுள் என்ற கருத்துக்கள், இனக்குழு சமுதாயத்தில் இருக்கவில்லை. சடங்காச்சாரத் தொகுப்பே (Rituals) சமயத்திற்கு முன்னர் இருந்தது. இனக்குழுக்களிலுருந்து நாடுகள் அரசுகளும் தோன்றின. சட்டமும் அரசியலும் தோன்றின. இவற்றோடு மனிதர் மனதில் மனிதரைப் பற்றிய விகாரமான பிரதிபலிப்பு (Fantastic reflection) தோன்றியது. இது தான் “சமயம்” என்பது.” 
இதை “anthropomorphic conception” என்று கூறுவார்கள்.



பண்டைய தமிழ் மக்களின் தெய்வ நம்பிக்கை:- ஆதிச்சநல்லூர்பொருநைகீழடியில் எந்தவித வழிபாடு தொடர்பான பொருட்களும் கிடைக்கவில்லை என்பதை வைத்துக் கொண்டு தமிழர்கள் அனைவரும் கடவுள் நம்பிக்கையற்ற பகுத்தறிவுவாதிகளாய் இருந்தார்கள் என்று சொல்லிவிட முடியாதுவீட்டிலோஇல்லை கோயில்களிலோ கடவுள் சிலைகளையும்ஓவியங்களையும் வைத்து வணங்கும் முறை அன்று இல்லாமல் இருந்திருக்கலாம்நடுகல் வழிபாடுகொல்லிப்பாவை வழிபாடுகொற்றவை வழிபாடுபூத வழிபாடுபேய் வழிபாடுவேல் வழிபாடுஇயற்கை வழிபாடு போன்றவை இருந்ததாகத் தெரிகின்றதுஒருவேளை இந்த வழிபாடுகள் ஆதிச்சநல்லூர்/கீழடி காலத்திலும் நிலவி இருக்கலாம்ஆனால் தமிழர்கள் இதைச் சிலை வடிவம் இந்தத் தெய்வங்களுக்கு உருவம் கொடுக்கவில்லை என்பது தெளிவாகத் தெரிகின்றதுபின்னர் வந்த தெய்வங்களானதொல்காப்பியம் காலத்தில் குறிப்பிடும் மாயோன்சேயோன்வேந்தன்வருணன் ஆகியவைஇந்த நான்கு நிலக் கடவுள்களுக்குக் கூட கோயில்கள் இருந்தன என்று சொல்லப்படவில்லைகோயில் என்ற அமைப்பு பெரும்பாலும் நிறுவன சமயங்களின் தோற்றத்தை ஒட்டி எழுந்ததாகவே ஆராய்ச்சியாளர்கள் சொல்கின்றார்கள்.


அத்திரம்பாக்கம் மனிதனின் குகை பொருட்கள் 385,000 (± 64,000) ஆண்டுகள் முற்ப்பட்டது.

பீம்பேட்கா(Bhimbetka) ஏறத்தாழ 30,000 ஆண்டுகள் பழைமையான கற்கால பாறை ஓவியங்களும் கண்டறியப்பட்டுள்ளனவிலங்கு ஓவியத்தை தவிர கடவுள் சிந்தனைகான ஓவியங்கள் எதுவும் கிடைக்கவில்லைமக்களது சமுதாய வளர்ச்சிக்கேற்ப நம்பிக்கைகள் தோன்றுகிறது


சமுதாயத்தில் ஏற்படும் மாறுதல்களுக்கேற்ப நம்பிக்கையும் மாறுகிறது. காலத்திற்கேற்ப பற்ப்பல தெய்வ கதைகள் பரிணாம வளர்ச்சி பெற ஆரம்பித்தது.




No comments:

Post a Comment