“வச்சிர நந்தி” என்னும் சமணத் துறவி கி.பி 470ல் திரமிள சங்கம் (தமிழ்/திராவிட சங்கம்) நிறுவினார்


சமணர்களின் தமிழ்ப் பணி

பிற சமயத்தினர் தமிழ் மொழிக்குச் செய்த பணிகளைக் காட்டிலும் சமண சமயத்தார் தமிழ் மொழிக்குச் செய்த தொண்டுகள் மிக அதிகம்அச் சமயத்தார் சங்கம் வைத்தும்புதிய இலக்கணஇலக்கிய நூல்களை எழுதியும் தமிழ் மொழியின் வளர்ச்சியில் ஈடுபட்டனர்.


திரமிள சங்கம்:- பாண்டியர்கள் சங்கம் வைத்துத் தமிழ் வளர்த்தனர் என்றசெய்தி அனைவரும் அறிந்த ஒன்றாகும்ஆனால் சமணர்களும் சங்கம் வைத்துத் தமிழ் வளர்த்தனர் என்பது பலருக்குப் புதிய செய்தியாக இருக்கும்சமணத் துறவிகள் திரமிள சங்கம் (தமிழ சங்கம்என்ற ஒன்றை உருவாக்கித் தமிழ்ப்பணி ஆற்றினர்இச்சங்கத்தைத் திராவிட சங்கம் என்றும் கூறுவர்பழங்காலத்தில் சமணத் துறவிகளின் கூட்டம் அதிகமாக இருந்ததுஅதனால் சமணசங்கமானது நந்திகணம்சேனகணம்சிம்மகணம்தேவகணம் என்று நான்காகப் பிரிக்கப்பட்டதுசங்கத்தைச்(கூட்டத்தைசைனர்கள் கணம் என்றும் கூறுவர்கணம் என்றாலும் சங்கம் என்றாலும் ஒன்றேஇதில் நந்தி கணம் புகழ்மிக்கதுஇந்த நந்தி கணத்தை இரண்டாகப் பிரித்துப் புதிய பிரிவுக்குத் திராவிட கணம் என்று பெயரிட்டுகி.பி. 470இல் மதுரையில் வச்சிர நந்தி நிறுவினார்வச்சிரநந்தி நிறுவிய இச் சங்கமும் பாண்டியர்கள் அமைத்த தமிழ்ச்சங்கமும் ஒன்று என்றும்வேறு என்றும் இருவேறு கருத்துகள் தமிழ் இலக்கிய வரலாற்றில் நிலவி வருகின்றனஅக்காலகட்டத்தில் மதுரையானது களப்பிரியர்கள் ஆட்சியின்கீழ் இருந்தது.

மயிலை சீனிவேங்கடசாமி சொல்கிறார்:

சமண சமயத்தை வளர்ப்பதற்காக வச்சிரநந்தி அமைத்த திரமிள சங்கத்தையும் சங்க காலத்தில் பாண்டியர் தமிழ்மொழியை வளர்க்க அமைத்த தமிழ்ச் சங்கத்தையும் ஒன்று என்று கருதுவது தவறுஇந்த இரண்டு சங்கங்களும்வெவ்வேறு காலத்தில் வெவ்வேறு காரணத்துக்காக அமைக்கப்பட்ட சங்கங்கள்இரண்டையும் ஒன்றாக இணைத்துக்கூறுவது வரலாறு அறியாதவரின் தவறான கூற்றாகும்.” (களப்பிரர் ஆட்சியில் தமிழகம்.)


மைசூர் நாட்டுச் சாசனம் ஒன்று இவ்வாறு கூறுகிறது;

ஸ்ரீமத் திரமிள ஸங்கேஸ்மிம் நந்தி ஸங்கேஸ்தி அருங்களா அன்வயோ பாதி நிஸ்ஸேஷ ஸாஸ்த்ர வாராஸி பாரகைவ

வச்சிரநந்தி என்பவர் விக்கிரம ஆண்டு 526 இல் (கி.பி. 470 இல்திராவிட சங்கத்தை ஏற்படுத்தினார் என்று தர்சனசாரம் என்னும் நூலில் தேவசேனர் என்பவர் எழுதியிருக்கிறார் என்று கூறுவர்


தமிழம்தான் வச்சிரநந்தி போன்ற பிற மொழியாளரால் திரமிளம் என்று சொல்லப்பட்டது என்பதற்குப் பெரிய விளக்கம் தேவையில்லை



தாய்மொழி வழித் தமிழ்ப் பணி

தமிழகம் வந்த வேற்றுச் சமயத்தினர் அனைவரும் தங்கள் மதக் கருத்துகளைத் தமிழகத்தில் புகுத்த முனைந்தனர்இவர்கள் தமிழ் மொழியில் பேசவும் எழுதவும் கற்றுக் கொண்டனர்தமிழர்களின் தாய் மொழியான தமிழ் மொழி மூலம் அவரவர் தத்தம் சமயக் கருத்துகளை எடுத்துக் கூறினர்இப்பணியில் மிகவும் கண்ணும் கருத்துமாக இருந்து செயல்பட்டவர்கள் சமணர்களும் பௌத்தர்களும் ஆவர்.





No comments:

Post a Comment