பிராமண போஜனமும் சட்டிச் சோறும்

 பிராமண போஜனமும் சட்டிச் சோறும்

(இடைக்காலத் தமிழகத்தில் வைதீகமும் சாதி உருவாக்கமும்)

ஆசிரியர்பேராசிரியர் சிவசுப்பிரமணியன்





மிக அருமையான புத்தகம்அவசியம் வாங்கி வாசிக்கவும்❤️🙏

ஒவ்வொரு வரியிலும்ஒவ்வொரு கட்டுரையிலும் எண்ணற்ற பல தகவல்களை ஆசிரியர் அவர்கள் தந்துள்ளார்கீழே கொடுக்கப்பட்டுள்ள ஒன்பது கட்டுரைகளின் தொகுப்பே இந்த நூல்.


👉 பிராமண போஜனம் :- இது மூன்று வகையில் நிகழ்த்தப்பட்டதுநாள்தோறும்அமாவாசையன்று மற்றும் கோவில்திருநாட்களின் போதுபிராமண போஜனத்திற்கான செலவுத் தொகையை நிலம்பொன்பணம் ஆகிய வடிவங்களில் காணிக்கையாக வழங்கினார்கள்அதற்கான செலவுகளை வைப்பு தொகை போல முன்னமே செலுத்திஅதிலிருந்துகிடைத்த பயனை பிராமண போஜனத்திற்காக செலவிட்டார்கள் மேலும்,“பிரமதேயம்சதுர்வேதிமங்கலம்அகரம்” போன்ற பிராமணர் குடியிருப்புகள் மன்னர்களால் உருவாக்கப்பட்டதுகோவிலுக்கு விளக்கு ஏற்றவும் எண்ணற்றதானங்கள் வழங்கப்பட்டதுஇவ்வனைத்தும் பிராமணர்கள் சபை கண்காணித்ததுஇது பற்றி ஆசிரியர் தனது கருத்தாக , "இம்முதலீடு இவ்வுலக வாழ்வுக்கும் பயன்தராத முதலீடாக அமைந்ததுஆதாயம் எதுவும் தராத இயங்கா முதலீடாக (dead_capitalஅமைந்துசமூக வளர்ச்சிக்கு எந்த உதவியும் செய்யவில்லை " என தெரிவித்துள்ளார்


👉 சட்டிச்சோறு :- கல்வெட்டுகளில்,1. எச்சோறு 2. புள்ளிச்சோறு 3. திங்கட்சோறு 4. வரிச்சோறு 5. வெட்டிச்சோறு6நிசதிச்சோறு 7. சட்டிச்சோறு என பல்வேறு அடை மொழிகளில்  சோறு பற்றி குறிப்பிடப்பட்டுள்ளதுஇதில் சட்டிச்சோறு ஊதியமாகவும் கொடைப்பொருளாகவும் வழங்கப்பட்டதுகோவில் பணியாளர்கள்தேசாந்திரிகள்சிவனடியார் ஆகியோருக்கு சட்டிச்சோறு வழங்கப்பட்டது. “சொக்கனுக்கு சட்டியளவு” என்ற சொலவடை இன்றும் வழக்கில் உள்ளது.


👉 நந்தா விளக்கு :- இடைவிடாது எரியும் விளக்கே நந்தா விளக்குநந்நா விளக்குக்காக 1. பொன் தானம் 2. நிலதானம் 3. பசுஎருமைஆடு தானமாக வழங்கப்பட்டதுஇதில் மூன்றாவது முறை பரவலாக இருந்தது. நந்தா விளக்கை பராமரிப்பவர்கள் மேற்கொள்பவர்களை இடையர்கள் என்றும், “விளக்கு குடிமக்கள்திருநந்தா விளக்குக் குடிகள்” என்ற பெயர் பெற்றனர். “மன்றாடிகள்” என்ற பட்டமும் உண்டுசாவா மூவா பேராடுகள் என்றால் ‘சாவினாலோ மூப்பினாலோ எண்ணிக்கைகுறையாத ஆடுகள் என்று பொருள்ஆடுகள் குறைந்தாலும் குட்டிகளைக் கொண்டு கோவிலுக்கு செலுத்த வேண்டிய நெய்யை தவறாமல் செலுத்த வேண்டும்.


👉 நெய்யளவும் முதலிடும்:- நந்தா விளக்கு எரிக்க நாள் ஒன்றுக்கு “உழக்கு நெய்” செலவாகியுள்ளதுஇந்நெய்யைப்பெற “90 ஆடுகள்” தேவைப்பட்டுள்ளன (தெ...6..எண்கள் 22,23). பாதி நேரம் எரியும் விளக்குக்கு “ஆழாக்குநெய்” தேவைப்பட்டுள்ளனஇந்நெய்யைப் பெற “45 ஆடுகள்” தேவைப்பட்டுள்ளன


👉🏿 கணம்புல்ல நாயனார் என்பவர் சிவபக்தியும் பெருஞ்செல்வமும் உடையவராய் விளங்கினார்.“மெய்ப்பொருளாவது திருவடியே” எனும் கொள்கையினரான இவர் செல்வப்பயன் “திருவிளக்கெரித்தலே” என்று எண்ணி திருவிளக்குப் பணிசெய்து வாயாரப் பாடி வழிபட்டு வந்தார்நெடுநாட்களாக இப்பணி செய்துவந்த நாயனார்க்குத் திருவருளாலேவறுமை” வந்தெய்தியதுஅதனால் ஊரைவிட்டு நீங்கித் தில்லையை அடைந்து தம் வீடு முதலியவற்றை விற்று விளக்கேற்றி” வந்தார்அவரிடமிருந்த பொருள் யாவும் ஒழிந்து போகும் நிலை நேர்ந்ததுதமது உடல் முயற்சியினால் அறுந்து கொண்டு வந்த “கணம்புல்லினை” விலைப்படுத்தி அப்பொருளினால் “நெய்” பெற்று விளக்கெரித்து வந்தார்அதனால் அவருக்கு கணம்புல்லர் என்று பெயராயிற்றார்.


👉 குற்றமும் தண்டிக்கும் முறையும்:- “மண்கலம் உடைத்து வெண்கலம் எடுத்து” போன்ற பல கல்வெட்டுகள் குறிப்புகளை ஆசிரியர் இந்நூலில் விவரிக்கிறார்.


👉 கோவில் திருட்டுக்கள் ( கல்வெட்டு ஆதாரத்துடன் ):- 


உதாரணம் 1:(1152AD)

நாகை மாவட்டம் பந்தநல்லூர் பசுபதீஸ்வரர் கோவில் கல்வெட்டில் கருவூலத்தில் இருந்த தங்கத்தை திருடிய சிவபிராமணனர்கள் பற்றி கூறிகிறதுஇது கண்டுபிடிக்கப்பட்டவுடன் அவர்களது பூசை செய்யும் உரிமை பறிக்கப்பட்டது


உதாரணம் 2: (1099AD) 

திருப்பனந்தாளில் வெட்டப்பட்ட கல்வெட்டில் இரு சிவபிராமணனர்கள் பூசைப்பொருட்களையும் அணிகலன்களையும் திருடியது மூன்றுமுறை கண்டு பிடிக்கப்பட்டுள்ளதுஆனால் என்ன தண்டனை என்று குறிப்பிடவில்லை.


உதாரணம் 3: (1255AD) 

குடுமியான்மலை மேலக்கோவில் பாறையில் உள்ள குடைவரை கோவில் கல்வெட்டில் கோவில் பணத்தை திருடியவர்களை “பழுக்க காய்ச்சிய இரும்பைக் கையில்” எடுத்து தாம் குற்றம் அற்றவர்கள் என்று நிரூபிக்க கட்டளையிட்டனர்

குற்றத்தின் தன்மையைக் கணக்கில் எடுக்காமல்குற்றம் செய்தவனின் சாதி - பொருளியல்சமூகத்தகுதி ஆகியனவற்றை அடிப்படையாகக் கொண்டே நீதி வழங்கப்பட்டமை இக்கல்வெட்டால் வெளிப்படுகிறது.

மேலும் பல கோவில் திருட்டுக்களை கல்வெட்டு ஆதாரத்துடன் ஆசிரியர் இந்தூலில் தந்துள்ளார்.


👉 திருமடைப்பள்ளியும் கருப்புகட்டியும்:- கோவிலில் சமையல் நடக்கும் இடத்தை “திருமடைப்பள்ளி” என்று கூறுவர்இந்த கட்டுரை ஆரம்ப காலங்களில் கோவில் உணவுகள்படையல் போன்றவற்றில் பயன்படுத்தப்பட்ட பனையில் இருந்து தயாரிக்கப்படும் கருப்புக்கட்டி (பனைவெல்லம்இடைக்காலத்தில் பயன்பாட்டில் இருந்து நீக்கப்பட்டமை குறித்து விளக்குகிறது


👉 பதவி எப்படி சாதியானது:- என்ற கட்டுரை ஆரம்பத்தில் ‘முதலிபிள்ளை’ என்பன பதவிப் பெயர்களாக பயன்படுத்தப்பட்டு பின்பு அவை தனிச்சாதி அடையாளங்களாக மாறிய தன்மையை விளக்குகிறது

கள்ளர்மறவர்கனத்ததோர் அகமடியர்

மெள்ள மெள்ள வந்து வெள்ளாளரானார்” 

என்ற பழமொழி சான்றாக கூறப்பட்டுள்ளது


👉 கல்வெட்டுகளில் காப்புரை (ஓம்படைக்கிளவி):- என்ற கட்டுரை கல்வெட்டுகளின் இறுதியில் அமையும் ஓம்படைக்கிளவியில் கூறப்பட்டிருக்கும் விடயங்களையும் அவற்றின் தன்மைகளையும் அதில் இழிவாக பயன்படுத்தப்பட்ட சாதிகள் குறித்த செய்திகளையும் பதிவு செய்கிறது.


மேலும் சில புத்தகங்கள் வாசிக்க:-

❤️👉 “தமிழகத்தில் சாதி உருவாக்கமும் சமூக மாற்றமும் (800-1500)” -  நொபொரு கராஷிமாசுப்பராயலு.

❤️👉 Castes and Tribes of South India: Edgar Thurston

தென்னிந்தியக் குலங்களும் குடிகளும்எட்கர் தர்ஸ்டன்

(தமிழாக்கம்முனைவர் ரத்னம்)


                  🙏🙏🙏🙏🙏🙏🙏


No comments:

Post a Comment