Showing posts with label தொல்லியல். Show all posts
Showing posts with label தொல்லியல். Show all posts

OLDEST CAVE PAINTING

OLDEST CAVE PAINTING FOUND IN SULAWESI, INDONESIA.



                          🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏


வரலாற்றில் பதிவான முதல் மனிதனின் பெயர் எது?!

வரலாற்றில் பதிவான முதல் மனிதனின் பெயர்


குஷிம் (Kushim)


மெசொப்பொத்தேமியாவில் (Mesopotamia) உள்ள உரூக் (uruk) என்னும் இடத்தில் கண்டெடுக்கப்பட்ட இந்த களிமண் பலகைகள் (Clay tablets) குறிப்பிடப்பட்டுள்ள பெயர்தான் வரலாற்றில் பதிவான முதல் மனிதனின் பெயர். 





இந்த பெயர் ஒரு தனிநபரின் பெயரா அல்லது அலுவலக உரிமையாளரின் பெயரா அல்லது பொதுவான தலைப்பு அல்லது ஒரு நிறுவனத்தைக் குறிக்கிறதா என்பது நிச்சயமற்றது.


ஆனால் இந்தப் பெயர் சுமார் கிமு 3000 ஆண்டுகள் முன்பு எழுதப்பட்ட களிமண் பலகைகளில் பொறிப்பட்டுள்ளது. அதில் "29,086 அளவு பார்லி 37 மாதங்கள் குஷிம்" என்று எழுதப்பட்டுள்ளது. இதை "குஷிம்" என்பவர்கை யெழுத்திட்டதாக விளக்கலாம்.


வரலாற்றில் நமக்குத் தெரிந்த முதல் நபரின் பெயர் ஒரு ராஜாவோ அல்லது ஒரு போர்வீரனோ அல்லது ஒருவேளை பிரபல அறிஞரோ அல்லது கடவுளின் பெயரோ அல்ல..இந்த  குஷிம் என்பவர் ஒரு கணக்காளர் (accountant) என்பது மட்டும் தெளிவு. 

கு-ஷிம் (KUS-HIM)



7,000 ஆண்டுகளுக்கு மேலான கணக்கியல் பதிவுகள் மெசொப்பொத்தேமியாவில் (Mesopotamia ) கண்டுபிடிக்கப்பட்டுள்ளன, மேலும் பண்டைய மெசபடோமியாவின் ஆவணங்கள் செலவுகள் மற்றும் பெறப்பட்ட மற்றும் வர்த்தகம் செய்யப்பட்ட பொருட்களின் பட்டியல்களைக் காட்டுகின்றன.


                   🙏🙏🙏🙏🙏🙏🙏🙏


கோழி நடுகல்

காலம்:- கி.பி. 3-4 ஆம் நூற்றாண்டு

இடம்:- விழுப்புரம் பொதுப்பணித் துறை அலுவலகம்



  1. முகையூரு மேற்சே, 
  2. ரிகு யாடிக, 
  3. ருகிய கோழி

முகையூர் மேற்சேரிக்கு; யாடி கருகிய கோழி


விளக்கம்:- 

“முகையூரில் மேல் சேரி என்னும் இடத்தில், சண்டையிட்டு இறந்த கோழி”





ஆதியில் நம் வழிபாட்டு முறைகள் நடுகல்லில் இருந்தே தோன்றின என்கிறது வரலாறு. நடுகல், கந்து எனும் கல்தூண் தொடங்கிய நம் வழிபாடுகள். சிந்துச் சமவெளி நாகரிகத்தில் போர்ச் சேவல்களைச் சிறப்பிக்கும் சான்றுகள் உள்ளதுபோல் தமிழகத்திலும் பல சான்றுகள் உண்டு. அவற்றில் ஒன்று அரசலாபுரம் கோழி நடுகல்.


கி.பி. 3-4 ஆம் நூற்றாண்டு முதல், தமிழ் பிராமி எழுத்து முறையிலிருந்து பிரிந்து வட்டெழுத்து முறையாக மாறத்தொடங்கியது. இந்த காலகட்டத்தில் எழுதப்பட்ட கோழிக்கான நடுகல்.


                        🙏🙏🙏🙏🙏🙏🙏🙏



பழுவேட்டரையர் தேடி - பயணக் கட்டுரை

 கீழையூர்மேலப்பழுவூர்கீழப்பழுவூர்:-  



    இந்த கிராமத்தின் பழைய பெயர் மன்னுபெரும்பழுவூர் என இருந்ததுசோழ மன்னர்களுக்கும் “பழுவேட்டரைய” அரசர்களுக்கும் நெருங்கிய தொடர்பு இருந்ததுமுதலாம் ஆதித்த சோழன் காலம் முதல் முதலாம் இராஜேந்திர சோழன் காலம் வரை சோழ மன்னர்களுடன் பழுவேட்டரையர்கள் தொடர்பு கொண்டு விளங்கியதை வரலாற்றுச்சான்றுகளுடன் அறிய முடிகிறதுபழுவேட்டரைய அரசர்கள் ஆட்சி செய்த ஊர் “பழுவூர்”.










கல்வெட்டுகள்:- 

** முதலாம் ராஜராஜ சோழனது காலத்தில் அவருடைய தேவியும்பழுவேட்டரையர் மகளுமான நக்கன் பஞ்சவன்மாதேவி வேண்டுகோளுக்கிணங்கிநெல் தானமாக அளித்த செய்தி கூறப்படுகிறது

** இங்குள்ள கல்வெட்டுகளில் பழமையானது ஆதித்த சோழனது கல்வெட்டுகள்இதில் இடம்பெற்றுள்ள பழுவூர்மரபின் முதல் இரு மன்னர்களான குமரன் கண்டனையும்குமரன் மறவனும் இக்கோயில் எடுப்பிக்க காரணமாகஇருந்தவர்கள்

** பழவேட்டரையன் கைக்கோள மாதேவன் ரணமுகராமன் ஆகியோரின் பெயர்கள் இங்குள்ள கல்வெட்டுகளில்காணப்படுகின்றன


இந்தப் கல்வெட்டுகளை காலவரிசைப்படி கி.பி 881 முதல் கி.பி 1020 வரை பழுவூரை ஆண்ட மன்னர்களைக்கீழ்க்கண்டவாறு வரிசைப் படுத்தலாம்.


1. குமரன் கண்டன்

2. குமரன் மறவன்

3. கண்டன் அமுதன்

4. மறவன் கண்டன்

5. கண்டன் சத்ருபயங்கரன்

6. கண்டன் சுந்தரசோழன்

7. கண்டன் மறவன்


IMG_2459.jpeg


மூத்த சகோதரர்கள் குமரன் கண்டன்குமரன் மறவன் சுந்தரசோழர் காலத்தில் வாழ்ந்தவர்கள். 'பெரியபழுவேட்டரையரையும்', 'சின்னப் பழுவேட்டரைய்ராகவும்’ இருக்காலம்



சாக்கை கூத்து:-

** கீழப்பழுவூர் ஆலந்துறையார் கோவிலில் கூத்துக் கல்வெட்டு உள்ளன.

**தமிழ்நாட்டின் “சாக்கைக் கூத்துக்கான” ஆரம்பகால கல்வெட்டுக் குறிப்பு (கி.பி. 979) கீழ்பழுவூரில் உள்ள  ஆலந்துறையார் கோவிலில் உள்ளது


காமரசவல்லி கல்வெட்டு:- 

**சுந்தரசோழனால் (கி.பி.957-974) அவன் ஆட்சி காலத்தில் கி.பி.962ம் ஆண்டில் கட்டப்பட்டதாக கல்வெட்டுகுறிப்பிடுகின்றது.

**சக்கைக் கூத்து நடத்திபொன்னும் நிலமும் பரிசாகப் பெற்றார்சாக்கை மாராயன் விக்ரமசோழன் காமரசவல்லிகோயிலில் மூன்று நாட்கள் சக்கைக் கூத்தை நிகழ்த்தியதாக முதலாம் ராஜேந்திரன் காலக் கல்வெட்டு (1041CE) மூலம் அறிகிறோம்


                          🙏🙏🙏🙏🙏🙏🙏





மனித கால்தடம்


 10,000 ஆண்டுகளுக்கு முன்புஒரு பெண் அல்லது இளைஞன் குழந்தையை சுமந்து கொண்டுகுறைந்தபட்சம் பலமணி நேரங்களுக்குப் கழித்து 2 பயணங்களைச் செய்தான்



இப்போது நியூ மெக்சிகோவின் ஒயிட் சாண்ட்ஸ் தேசியப் பூங்காவில் (New Mexico’s White Sand National Park) உள்ள அவர்களின் பாதையில் 1.5 கிமீ நீளம் மற்றும் 400 க்கும் மேற்பட்ட மனித அச்சிட்டுகள் உள்ளன.




                  🙏🙏🙏🙏🙏🙏🙏




தமிழி் கல்வெட்டு் - மதுரை



 தமிழி் கல்வெட்டு் - மதுரை பயணத்தில் 

👉 மாங்குளம்
 
👉 அரிட்டாபட்டி
 
👉 கருங்காலக்குடி் மற்றும் 
 
👉 கீழவளவு  
ஆகிய இடங்களில் உள்ள தமிழி கல்வெட்டுகளை பார்வையிட்டோம் ❤️❤️❤️


மாங்குளம்:-  


மதுரை மாவட்டம் மேலூர் வட்டத்தில் உள்ளது மாங்குளம்இங்குள்ள கிமு.3 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த தமிழி” கல்வெட்டுக்கள் 1882ல் ராபர்ட் சீவல் (Robert_Sewellஎன்பவரால் கண்டுபிடிக்கப்பட்டதுமாங்குளத்தில் மொத்தம் 6 தமிழி கல்வெட்டுக்கள் காணப்படுகின்றன.





👉 தமிழி கல்வெட்டு் 1:-

   𑀓𑀡𑀺𑀬𑁆       𑀦𑀢𑁆𑀢𑀺𑀬𑁆         𑀓𑁄𑁆𑀝𑀺𑀬𑁆           𑀅𑀯𑀷𑁆

“கணிய் நந்திய் கொடிய் அவன்”

விளக்கம்:-

          (பின்வரும் நீண்ட கல்வெட்டை 2) “கணி நத்தி” என்பவன் பொறித்துக் கொடுத்துள்ளான்.




  

👉தமிழி கல்வெட்டு 2:-

     கணிய் நந்த அஸிரிய்இ குவ் அன்கே தம்மம்

       இத்தாஅ நெடுஞ்சழியன் பணஅன் கடல்அன்

       வழுத்திய் கொட்டுபித்தஅ பளிஇய்

விளக்கம்:

      கணி நந்தஶ்ரீ குவன் என்பவருக்கு நெடுஞ்செழியனின்” அலுவலனாக விளங்கிய கடலன் வழுதி என்பவன் இப்பள்ளியை (கற்படுக்கையைஉருவாக்கிக் கொடுத்தான்.



𑀓𑀡𑀺𑀬𑁆(கணிய்) 𑀦𑀦𑁆𑀢𑀸 (நந்த) 𑀅𑀲𑀭𑀺𑀬𑁆𑀇 (அஸரிய்இ) 𑀓𑀼𑀯𑁆 (குவ்) 𑀅𑀷𑁆𑀓𑁂 (அன்கே) 𑀢𑀫𑁆𑀫𑀫𑁆 (தம்மம்) 𑀇𑀢𑁆𑀢𑀸𑀅 (இத்தாஅ) 𑀦𑁂𑁆𑀝𑀼𑀜𑁆𑀘𑀵𑀺𑀬𑀷𑁆 (நெடுஞ்சழியன்) 𑀧𑀡𑀅𑀷𑁆 (பணஅன்) 𑀓𑀝𑀮𑁆𑀅𑀷𑁆 (கடல்அன்) 𑀯𑀵𑀼𑀢𑁆𑀢𑀺𑀬𑁆 (வழுத்திய்) 𑀓𑁄𑁆𑀝𑁆𑀝𑀼𑀧𑀺𑀢𑁆𑀢𑀅 (கொட்டுபித்தஅ ) 𑀧𑀴𑀺𑀇𑀬𑁆 (பளிஇய்)



👉தமிழி கல்வெட்டு 3:-

                         சந்திரிதன் கொடுபித்தோன்

விளக்கம்:

     இந்த உறைவிடத்தை சந்தரிதன் என்பவன் அமைத்துக் கொடுத்தான்





👉தமிழி கல்வெட்டு 4:-

                       வெள்அறை நிகமதோர் கொடிஓர்

விளக்கம்:-      இந்தப் பாறையைக் கொட்டிக் கொடுத்தவர் வெள் அறை என்னும் ஊரிலுள்ள “வணிகக் குழுக்கள்” ஆவர்.


👉 தமிழி கல்வெட்டு 5:-

      கணிஇ நதஸிரிய் குவ…. வெள் அறைய் நிகமது காவிதிஇய்

     காழிதிக அந்தை அஸூதன் பிணஉ கொடுபிதோன்

விளக்கம்:-

 கணி நந்தஶ்ரீ குவ(ன்என்பவருக்கு வெள்ளறை என்ற கிராமத்தைச் சார்ந்த உழவு சம்பந்தமான வணிகம் செய்யும்காழிதிக அந்தை அஸூதன் இந்த உறைவிடத்தை அமைத்துக் கொடுத்தான்




👉தமிழி கல்வெட்டு 6:-

     கணிய் நந்தஸிரிய் குஅன் தமம் ஈதா நெடுஞ்சழியன்

ஸாலகன் இளஞ்சடிகன் தந்தைய் சடிகன் சேஇய் பளிய்

விளக்கம்:-

கணி நந்தஶ்ரீ குவன் என்பவருக்கு நெடுஞ்செழியனின் சகலையான இளஞ்சடிகன் என்பவனின் தந்தை சடிகன் என்பவன் இந்தப் பள்ளியை (உறைவிடத்தைஅமைத்துக் கொடுத்தான்.


அரிட்டாபட்டி:-


 சமண தீர்த்தங்கரர்களில் 22வது தீர்த்தங்கரரான “நேமிநாதர்” என்பவருக்கு “அரிட்டநேமி” என்ற பெயர் இருந்ததனால் ‘அரிட்டாபட்டி’ என்று பெயர் வந்ததாகக் கூறுகின்றனர்


அரிட்டாபட்டியில்

👉 கி.மு 3-2 ஆம் நூற்றாண்டை சேர்ந்த “தமிழி” கல்வெட்டுகள் உள்ளன


👉 தமிழி கல்வெட்டு:-

    1. “நெல்வெளி இயசிழிவன் அதினன் வெளியன் முழாகை கொடுபிதொன்

    2. “இலஞ்கிய எளம்பேராதன் மகன் எமயவன் இவ்முழுஉகை கொடுபிதவன்


விளக்கம்:-          1. திருநெல்வேலியைச் சேர்ந்த செழியன் அதினன் ஒலியன் கொடுப்பித்த சமணப்பள்ளி

  2. இலஞ்சியைச் சேர்ந்த இளம்பேராதன் கொடுப்பித்த நல்முலாகை.

என்று கி.மு 3-2ஆம் நூற்றாண்டின் “தமிழி” கல்வெட்டு கூறுகிறது


👉 சமண புடைப்பு சிற்றங்கள் உள்ளன

👉 கிபி 8ஆம் நூற்றாண்டை சேர்ந்த கல்வெட்டுகளும் மற்றும் குடைவரை கோவில்களும் உள்ளது.

👉கிபி 10ஆம் நூற்றாண்டை சேர்ந்த ‘வட்டேழுத்து’ கல்வெட்டுகள் உள்ளன

👉 அரிட்டாபட்டி பகுதி தற்போது தமிழ்நாட்டின் “முதல் பல்லுயிர் பாதுகாப்பு மண்டலமாக” Nov’22யில் தமிழக அரசுஅறிவித்துள்ளது.❤️🙏


கருங்காலக்குடி:-

              மதுரை திருச்சி புறவழிச்சாலையில் அமைந்துள்ள ஊர் கருங்காலக்குடிஇங்குள்ள “தமிழி” கல்வெட்டு கி.பி. 1 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது


👉>5000 ஆண்டுகளுக்கு முந்தைய பாறை ஓவியங்களும்

👉 2000 ஆண்டுகளுக்கு முந்தைய தமிழிக் கல்வெட்டும் கற்படுக்கைகளும்

👉 1000 ஆண்டுகளுக்கு முந்தைய சமண முனிவரின் சிற்பமும் வட்டெழுத்துக் கல்வெட்டும் உள்ள கருங்காலக்குடிதொன்மையின் சின்னமாக விளங்குகிறது.

👉தமிழி கல்வெட்டு:-

      ஏழையூர் அரிதின் பளிய்

விளக்கம்:

        ஏழையூர் எனும் ஊரைச்சேர்ந்த அரிதி என்பவர் இப்பள்ளியை அமைத்துக் கொடுத்தவர் என்பது இதன்பொருளாகும்.

👉 பாறையின் மற்றொரு பகுதியில் பெருங்கற்காலத்தைச் சேர்ந்த “பாறை ஓவியங்களும்” கண்டறியப்பட்டுள்ளன.









கீழவளவு:-

        மதுரை மாவட்டத்தில் மேலூரிலிருந்து திருப்பத்தூர் செல்லும் சாலையில் கீழவளவு எனும் ஊர் அமைந்துள்ளது

👉 இங்கு கிமு.3ம் நூற்றாண்டைச் சேர்ந்த தமிழி கல்வெட்டுக்களையும் 

👉 கி.பி 9- 10ம் நூற்றாண்டைச் சேர்ந்த சமண சிற்பங்களையும் உள்ளன.


தமிழி கல்வெட்டு:-

        உப(அன் தொண்டி(வோன் கொடு பளிஇ

விளக்கம்:

         உபாசன் தொண்டி இலவோன் கொடுத்த பள்ளி என்பது இக்கல்வெட்டின் பொருள்இடவலமாக வெட்டப்பட்டகல்வெட்டு.





                    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏