பௌத்தம் - எனது புரிதலும்

 பௌத்தம்



கடவுள் அல்லது ஒரு ஒருமிய சக்தி உலகைத் தோற்றுவிக்கவில்லை என்பது பெளத்தத்தில்புத்தர் போதனைகளில் முக்கியமான ஒரு கொள்கை


(Shortcut - Remember - 4-8-12
4 - பேருண்மைகள்
8 - எண்வழிப்பாதை
12 - 
சார்புகளை (நிதானங்களை)

புத்தர் வரலாறு:

கௌதமரின் பிறப்பு மற்றும் இறப்பு ஆகிய காலங்கள் பற்றி நிச்சயமற்ற தன்மை நிலவுகிறது. இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தின் போது பெரும்பாலான வரலாற்றாளர்கள் கௌதமரின் வாழ்க்கையை அண். கி. மு. 563 முதல் கி. மு. 483 வரை என்று வரையறுத்தனர்

ஆரம்ப கால நூல்களில் உள்ள ஆதாரங்களின்படி சித்தார்த்த கௌதமர் சாக்ய இனத்தில் பிறந்தார். இந்த இனம் புவியியல் ரீதியாகவும் கலாச்சார ரீதியாகவும் கி. மு. 5 ஆம் நூற்றாண்டில் கிழக்கு இந்திய துணைக்கண்டத்தில் இருந்தது. இவரது பொதுவான பெயர் "சகமுனி" அல்லது "சாக்யமுனி" ("சாக்கியர்களின் முனிவர்"). அது ஒரு சிறிய குடியரசு அல்லது தன்னல குழுவாக இருந்தது. இவரது தந்தை தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர் அல்லது தன்னல குழுவின் தலைவராக இருந்தார். புத்த மத பாரம்பரியத்தின் படி கௌதமர் லும்பினி என்ற இடத்தில் பிறந்தார். அந்த இடம் தற்கால நேபாளத்தில் உள்ளது. சாக்ய தலைநகரான கபிலவஸ்துவில் வளர்க்கப்பட்டார். கபிலவஸ்து என்பது தற்கால நேபாளத்தில் உள்ள திலௌராகோட் அல்லது இந்தியாவில் உள்ள பிப்ரவா என கூறப்படுகிறது.






புத்தர் போன இடமெல்லாம் ஆயிரக்கணக்கான மக்கள் அவரை தரிசிக்கத் திரண்டு வந்தனர். அவருடைய உபதேசங்களைக் கேட்டனர். பலரும் அவரிடம் தீட்சை பெற்று புத்த மதத்தைத் தழுவித் துறவிகளாயினர்


புத்தர் உறைத்துச் சென்ற நான்கு பேருண்மைகள் என்பன என்ன:-

  1. வாழ்வின் அடிப்படையாக ‘துக்கம்’ தான் உள்ளது
  2. ஆசை’ யும் ‘பற்று’மே எல்லா துக்கங்களுக்கும் அடிப்படை 
  3. தன்னை மையமாகக் கொண்ட நோக்குஆசை அதன் விளைவான துக்கம் எல்லாம் நீக்கப்படக் கூடியவையே
  4. மனம்வாக்குகாயம் ஆகியவற்றின் அடிப்படியிலான எண்வழிப்பாதை (அஷ்டாங்க மார்க்கம்) மூலம் ‘சரியானவாழ்வை’ வாழும் யாரும் துக்கத்தை வெல்ல முடியும்


எண்வழிப்பாதை :

  1. நன்னம்பிக்கை
  2. நல்லெண்ணம்
  3. நல்வாக்கு
  4. நற்செயல்
  5. நல்வாழ்வு
  6. நன்முயற்சி
  7. நற்சிந்தனை
  8. நல்ல தியானம்


மாநாடுகள் : 


பிக்கு சங்கத்தை ஏற்படுத்தினார்துறவிகளாகிய பிக்குகளும் பிக்குணிகளும் ஒழுக வேண்டிய முறைகளை வகுத்தார்.


முதல் மாநாடு இராஜகிருகத்தில் நடைபெற்றதுஇதற்கு தலைமை தாங்கியவர் மகாகசபர் ஆவார்நடத்திய அரசர் அஜாதசத்ரு ஆவார்


இரண்டாவது மாநாடு வைசாலியில் நடைபெற்றதுஇதற்கு தலைமை தாங்கியவர் சபகாமி ஆவார்இதனை நடத்தியவர் காலசோகன் ஆவார்


மூன்றாவது மாநாடு பாடலிபுத்திரத்தில் நடைபெற்றதுஇதற்கு தலைமை தாங்கியவர் மொகாலி புத்ததிசா ஆவார்இதனை நடத்தியவர் அசோகர் ஆவார்இம்மாநாட்டில் திரிபிடகம் இறுதிவடிவம் பெற்றது.

  

நான்காவது மாநாடு காஷ்மீரில் உள்ள குந்தல் வனத்தில் நடைபெற்றது.தலைமை தாங்கியவர் வசுமித்ரராவார்இதனை நடத்தியவர் கனிஷ்கர் ஆவார்கனிஷ்கர் காலத்தில் புத்த சமயம் இரண்டு பிரிவுகளாக பிரிந்தது 


பௌத்த மதத்தில்பிற்காலத்திலே பிளவுகள் ஏற்பட்டுப் பிரிவுகள் உண்டாயினபுத்தர் வீடுபேறடைந்து நூற்றுப்பத்தாண்டுகளுக்குப் பின்னர்பிக்கு சங்கத்தில் புதிதாகத் தோன்றிய சில பழக்க வழக்கங்களைக் கண்டிக்கும் பொருட்டுவைசாலி நகரத்தில் 700 பிக்குகள் மாநாடு கூடி எட்டுத் திங்கள் வரை ஆராய்ந்துபுதிய வழக்கங்களைக் கூடாதென்று தடுத்தார்கள்கண்டிக்கப்பட்ட 10,000 பிக்குகள் ஒருங்கு சேர்ந்து தனிப் பிரிவாகப் பிரிந்து போயினர் என்று தீபவம்சம் என்னும் நூல் கூறுகிறதுபுத்தருடைய பழைய கொள்கைகளைப் பின்பற்றிவரும் பௌத்த மதத்துக்குத் தேரவாத பௌத்தம் என்றும், (இதற்கு ஹீனயானம் என்று தவறாகப் பெயர் வழங்குகிறதுபுத்தர்காலத்தில் இல்லாத புதிய கொள்கைகளைக் கொண்ட பௌத்த மதத்திற்கு மகாயான பௌத்தம் என்றும் பெயர்கள் வழங்குகின்றனஅவ்விரு பெரும்பிரிவுகளிலும் அநேக உட்பிரிவுகள் உண்டு.


சங்கம் பிளவுக்கு முக்கிய காரணம்

பாலி மொழிப் பிடகங்கள் எளிமையான ஒழுக்க முறையையும் தத்துவத்தையும் போதித்தனஆனால்புத்தருக்கு முன்னரே இந்தியாவில் வேத சமயம் இருந்ததுவேத சமயம் மனித ஆசைகளை நிறையேற்ற அதில் நிறைய சக்திமிக்க கடவுள் கதைகளை உருவாக்கிவைத்தனர்வேத சமயத்தேடு பேட்டியிட பௌத்தத்திலும் புத்தரை சக்திமிகு தெய்வப்பிறவியாக காட்ட ஒரு தரப்பினர் முற்ப்பட்டனர். 23 புத்தருக்கு பின் வரலாற்று புத்தர் தோன்றினார் என்று கூறினர்புத்தருக்குமுன்பிறவி கதைகளை தோற்றுவித்தனர்இதை ஜதககதைகள் என்று கூறினர்இந்த மாற்றத்தை தேரவாதிகள் ஏற்க மறுத்தனர்.  


பௌத்தத்தில் இரண்டு முக்கிய பிரிவுகள்

  • தேரவாத பௌத்தம் - உருவ வழிபாடு இல்லைகொள்கை நடைமுறை மட்டுமே

“யாருடைய அருளும் முயற்சியும் நாம் விடுதலை பெற நமக்கு உதவாதுவழிகாட்ட மட்டும் புத்தரால் முடியுமேயன்றிநமது முன்னேற்றத்திற்கும் நிர்வாணத்திற்கும் நாமேதான் பொறுப்பாவோம்

  • மகாயான பௌத்தம் - புத்தரை கடவுளாக கொண்டு வழிபட்டவர்கள்

புத்தர் தெய்வத்தன்மையுடையவராவும் அவரிடம் சரண்டைந்து நாம் உதவி பெறலாம் என்றும் கூறினர்


அசோகரும் தேரவாத பௌத்தம் பின்பற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.


ஆகவேதேரவாத பௌத்த பிக்குகள் ஒருங்குகூடிஆதிக்கொள்கைக்குப் புறம்பான புதிய கொள்கைகள் திரிபிடகத்தில் நுழையாதபடி போற்ற வேண்டும் என்னும் கருத்தோடுஅதுவரையும் எழுதாமறையாக இருந்த திரிபிடகத்தை நூல் வடிவமாக எழுதினார்கள்.


பிடகம் என்றால் கூடை என்று பொருள்எனவேதிரிபிடகம் என்றால்மூன்று கூடை என்று பொருள்படும்அதாவது மூன்று தொகுப்பு என்பது கருத்துபிடகத்தை பிடக்கு என்று தேவாரம் கூறுகிறது

  1. விநய பிடகம்
  2. சுத்த பிடகம்
  3. அபிதம்ம பிடகம்


தேரவாத பௌத்தத் தத்துவம் குறிப்புகள்:-


பன்னிரண்டு நிதானங்களை


பௌத்தமதத் தத்துவம் பன்னிரண்டு நிதானங்களை    உடையது. (நிதானம் = காரணம்=சார்பு). பன்னிரண்டு நிதானங்களைத் தமிழில் சீத்தலைச் சாத்தனார் தமது மணிமேகலை என்னும் நூலிலே கீழ்க்கண்டவாறு தமிழ்ப் பெயரால் கூறுகிறார்:-

  1. பேதமை 
  2. செய்கை
  3. உணர்வு
  4. அருவுரு
  5. வாயில்
  6. ஊறு
  7. நுகர்வு
  8. வேட்கை
  9. பற்று
  10. பவம்
  11. தோற்றம்
  12. வினைப்பயன்.


 இப்பன்னிரு சார்புகளின் தன்மைகளைச் சாத்தனார் மணிமேகலை 30 ஆம் காதையில் விளக்கியுள்ளார்இச்சார்புகளினாலே பிறப்பு இறப்பு உண்டாகின்றனசார்புகளை அறுத்தால்பிறப்பு இறப்பு நீங்கி நிர்வாண மோட்சம் எனப்படும் வீடு பேற்றினை அடையலாம்இச் சார்புகளை அறுத்து வீடு பெறுவதே பௌத்தர்களின் நிர்வாணமோட்சமாகும்


இந்தச் சார்புகளை (நிதானங்களை) ஊழின் வட்டம் அல்லது ஊழ் மண்டிலம் என்பர்



இப்படத்தில் மூன்று காலம்குற்றம்வினை,
பயன்
 ஆகியவை காட்டப்பட்டுள்ளன.

  • இறந்த காலம்எதிர்காலம் ஆகிய இரண்டு வட்டங்கள் மிகக் குறுகியவை
  • நிகழ்காலம் என்ற வட்டம் மிகப் பெரியது.
  • இறந்த காலமும்எதிர் காலமும் நம் கையில் இல்லை.

நிகழ்காலம் மட்டுமே நம்கையில் உள்ளதுஎனவேநிகழ்காலச் செயல்களில் நாம் கவனமாக ஈடுபட வேண்டும்


இறந்த காலத்தில் ஓர் உயிர் செய்கின்ற செயல்களின்
அடிப்படையில் (பேதைமைசெய்கைஉயிர்களின் (உணர்வுஅருவுருவாயில்ஊறுநுகர்வுவேட்கைபற்றுகருமத்தொகுதிஅமைகின்றன.


உயிர்களின் நிகழ்காலத்தின் செயற்பாடுகளுக்கு ஏற்பவே
எதிர்காலத் தோற்றம்வினைப்பயன் ஆகியவை ஏற்படுகின்றனஎனவேஉலக உயிர்களின் இன்ப துன்பங்களுக்கு நிகழ்காலச் செயற்பாடுகள் பெரிதும் காரணமாகின்றனஅதனால் பரிநிர்வாணம் (வீடுபேறுபெற இப்பன்னிருசார்புகளிலிருந்து உயிர்கள் விடுபட வேண்டும்மேலே காட்டிய படங்களும் உலக உயிர்கள் வாழ்க்கைச்சக்கரத்தில் சிக்கிச் சுழலுவதைச் சுட்டிக் காட்டும் வகையில் அமைந்துள்ளன


இவ்வாறு துன்பத்திற்குக் (பிறப்பிற்குகாரணமான பன்னிரண்டு சார்புகளையும் கூறிய பின்னர் இத்துன்பத்தில் இருந்து விடுதலை பெற சாத்தனார் மணிமேகலையில் கூறுவது காண்க:


"பேதைமை சார்வாச் செய்கை யாகும் 

செய்கை சார்வா உணர்ச்சி யாகும் 

உணர்ச்சி சார்வா அருவுரு வாகும் 

அருவுரு சார்வா வாயி லாகும் 

வாயில் சார்வா ஊறா கும்மே 

ஊறு சார்ந்து நுகர்ச்சி யாகும் 

நுகர்ச்சி சார்ந்து வேட்கை யாகும் 

வேட்கை சார்ந்து பற்றா கும்மே 

பற்றிற் றோன்றும் கருமத் தொகுதி 

கருமத் தொகுதி காரணமாக 

வருமே ஏனை வழிமுறைத் தோற்றம் 

தோற்றஞ் சார்பின் மூப்புப் பிணி சாக்காடு 

அவலம் அரற்றுக் கவலை கையாறெனத் 

தவலில் துன்பந் தலைவரும் என்ப. " 

(மணிமேகலை 30-ஆம் காதை 103-116)


விளக்கம்


"பேதைமை மீளச் செய்கை மீளும்

செய்கை மீள உணர்ச்சி மீளும்

உணர்ச்சி மீள அருவுரு மீளும்

அருவுரு மீள வாயில் மீளும் 

வாயில் மீள ஊறும் மீளும் 

ஊறு மீள நுகர்ச்சி மீளும் 

நுகர்ச்சி மீள வேட்கை மீளும

வேட்கை மீளப் பற்று மீளும் 

பற்று மீளக் கருமத் தொகுதி 

மீளும்கருமத் தொகுதி மீளத்

தோற்றம் மீளும்தோற்றம் மீளப்

பிறப்பு மீளும்பிறப்புப் பிணி மூப்புச்

சாக்கா டவலம் அரற்றுக் கவலை

கையா றென்றிக் கடையில் துன்பம்

எல்லாம் மீளும். " (மணிமேகலை 30-ஆம் காதை 119-133)

புத்தகத்தில் வேதனா விடப்பட்டுள்ளது.


மேலும் திருக்குறளில் வரும் என்னவேன்றால்
அறத்துப்பால் அதிகாரம்: மெய்யுணர்தல்

சார்புணர்ந்து சார்பு கெடஒழுகின் மற்றழித்துச்

சார்தரா சார்தரும் நோய். (குறள் - 359)


எல்லாப் பொருள்களுக்கும் இடமாகிய மெய்ப்பொருளை உணர்ந்து பற்றின்றி வாழ்ந்தால், பற்ற வரும் துன்பங்கள் ஒழுக்க உணர்வை அழி்த்துப் பற்ற மாட்டா



மேலும் சில முக்கிய குறிப்புகள்:-

  • திரிபீடகத்திற்கு உரை எழுதிய 12 பௌத்த அறிஞர்களில் ஒன்பது அறிஞர்கள் தமிழர்கள் என்றுரைக்கிறார்
  • தர்க்கவியலின் தந்தை என்று அழைக்கப்படும் திக்நாதர் (தின்னாகர்செங்கல்பட்டு அருகில் உள்ள சிங்கபெருமாள் கோவில் என்ற ஊரில் பிறந்த பௌத்த அறிஞர்
  • சீனா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் பின்பற்றும் தியானம் மற்றும் பயிலும் தற்காப்பு கலையை கற்றுகொடுத்தவர் காஞ்சிவரத்தில் பிறந்த போதி தருமன்
  • ஆண் பெண் என பாலின வேறுபாடோ
  • பிறப்பு வேற்றுமையோ பாராமல் மக்கள் அனைவரும் சமம் என்றுரைத்தது பௌத்தம்.
  • புத்தரின் போதனைகள் ஒழுக்கமும் அறிவும் நிறைந்தவையாக இருந்தது,  மக்கள் மொழியில் கற்பிக்கப்பட்டது
  • உயிரினங்கள் பலியிடுதலை தடுத்தது.
  • சங்கங்கள் அமைத்து கல்விமருத்துவம் அளித்தது
  • இன்று தமிழர்கள் பின்பற்றும் பல சடங்குகள் பௌத்தம் சார்ந்தவையேஆனால் அவற்றில்  அறிவுக்கு பொருந்தாத இழிவான பல கற்பனை கதைகளை கற்பித்து திருத்தியமைக்கப்பட்டு பின்பற்றப்படுகிறது 

புத்தரின் போதனைகளின் சில:-

👉“நீ கேள்விப்படும் விடயங்கள் 
அனைத்தையும் ஆராயாமல் 
உண்மை என்று நம்ப கூடாது. 
காதில் கேட்பதற்காகவே 
ஒரு விடயத்தை உண்மை 
என்று நம்பத் தேவையில்லை.”

👉“தனது சிந்தனையில் 
தெளிவு உள்ள 
மனிதனிடம் அச்சம் 
என்பது சிறிதும் 
இருப்பதில்லை”

புத்தம் சரணம் கச்சாமி!

தம்மம் சரணம் கச்சாமி

சங்கம் சரணம் கச்சாமி

     புத்தரை சரணமாக அடைந்தனர்

     புத்தரின் போதனைகளான தர்ம நெறிகளைச் சரணமாக அடைந்தனர்.

      புத்திரின் கொள்கைகளைக் கடைப்பிடிப்போரின் சங்கத்தைச் சரணமாக அடைந்தனர்.


                      🙏🙏🙏🙏🙏🙏🙏🙏





No comments:

Post a Comment