பேதைமை (Ignorance)




மணிமேகலை கூறும் பேதைமை:-


 பேதைமை என்பது யாதென வினவின் 

ஒதிய இவற்றை உணரா மயங்கி

இயற்படு பொருளால் கண்டது மறந்து

முயல்கோடு உண்டுஎனக் கேட்டது தெளிதல்


விளக்கம்:-

பேதைமை என்பது அறியாமை. அதாவது, உண்மையை உணராமல் அதன் இயல்புகளை அறியாமல் மயங்குதல். இயற்கையாக உள்ளனவற்றிலும் கண்டதை மறுத்து, முயலுக்குக் கொம்பு உண்டெனப் பிறர் கூறும் பொய்களை மெய்யென நம்புதல்




அய்யன் கூறும் பேதைமை:-


குறள் 834:-

ஓதி உணர்ந்தும் பிறர்க்குரைத்தும் தானடங்காப்
பேதையின் பேதையார் இல்


சாலமன் பாப்பையா விளக்கம்:

படித்தும்படித்தவற்றை உணர்ந்தும்மற்றவர்க்குச் சொல்லியும்அவற்றின்படி வாழாதவரைக் காட்டிலும் அறிவற்றவர் வேறு இல்லை.

 

   🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏



No comments:

Post a Comment