Meluhha - Indus Valley Civilization |
மெலுக்கா Meluhha சுமேரியர்கள் சிந்துசம வெளியை (IVC) மெலுக்கா என்றே கூறிப்பிட்டனர் என்று கூறுகின்றனர்.
ரொமிலா தாபர், அஸ்கோ பர்போலாவின் கூற்றுப்படி சிந்துசமவெளியை தொல் திராவிட மொழிச் சொல்லான மெலுகா (மேல்+அகம்=மேட்டு நிலம்) மேட்டுநிலம் என்று பொருள் என்று கூறினார்.
அக்காடியப் பேரரசு Akkadian Empire ஆட்சிக் காலம் கிமு 2334 முதல் 2154 வரை மெசொப்பொத்தேமியாவின் முதலாவது செமிட்டிக் மொழி பேசும் பேரரசு ஆகும்.
சுமேரியாவின் அக்காடிய பேரரசு (Akkad) சிந்துசமவெளியின் மெலுகா பகுதியிலிருந்து பொருட்களை ஏற்றிக் கொண்டு வணிகக் கப்பல்கள் சுமேரியாவிற்கு பாரசீக வளைகுடா வழியாக வரும் என உருளை முத்திரை குறித்துள்ளார்
மெலுக்காவை குறிப்பிடும் சுமேரிய உருளை முத்திரை |
அக்காடியப் பேரரசுவின் உருளை முத்திரையில் மெலுக்கா நாட்டைப் பற்றி குறித்துள்ளது.
சுமேரியா குறிப்புகளில் வரும் மெலுகா கி. மு 1750 வரை காணப்படுகிறது.
ஆரியர் வருகையினால் சிந்துசமவெளி அழிந்த பிறகு இந்த குறிப்பு சுமேரியாவில் மறைந்து விடுகிறது. பிறகு கிமு 600 மீண்டும் குறிப்பு காணமுடிகிறது. ஆனால் இப்பொழுது மெலுகா எத்தியோப்பியா என்று குறிப்பு வருகிறது. ஆனால் இடையில் 1000 ஆண்டுகள் கடந்துவிட்டது.மெலுக்கா கிட்டத்தட்ட புராண நினைவுகளுக்குள் சென்றது. பெயரின் மறு உருவாக்கம் ஒரு பணக்கார மற்றும் தொலைதூர நிலத்தின் கலாச்சார நினைவகத்தை பிரதிபலிக்கும்.
மெலுக்கா என்பது சிந்து சமவெளி நாகரிகத்தின் சுமேரியப் பெயர் என்று பெரும்பாலான அறிஞர்கள் கூறுகின்றனர்.
சுமேரியப் ஆரம்பகால நூல்கள் (கி.மு. 2200) மெலுகா கிழக்கில் இருப்பதாகக் குறிப்பிடுகிறது, இது சிந்து சமவெளியைக் குறிக்கிறது.
ஈராகில் சிந்து சமவெளி முத்திரைகள் காணப்படுவதால் மெசபடோமியாவில் சிந்து சமவெளி மக்களின் வர்த்தக குடியேற்றம் இருந்திருக்க வேண்டும். அதேபோல, மெசபடோமியா மக்களின் பரஸ்பர குடியேற்றங்களால், சுமேரிய முத்திரைகள், சிந்து சமவெளியிலும் காணப்படுகின்றன.
Compass-Bird |
மெசொப்பொத்தேமியாவிற்கும் சிந்து மக்களுக்கும் இடையேயான வர்த்தக வழிகள் முக்கியமாக இருந்தவை க டல் வழி வணிகம்தான். சிந்து மக்கள் நிலத்திற்கு அருகாமையிலே கடலில் பயணம் செய்துனர். கடல் பயணத்தில் நிலத்தின் பார்வை இழந்தால் அருகிலுள்ள நிலத்தை அடையாளம் காண பறவைகளைப் பயன்படுத்தினர்.
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
தமிழ் வாழ்க
No comments:
Post a Comment