29,500 ஆண்டுகள் பழமையான தாய்தெய்வச் சிலை

Venus of Willendorf (29,500 ஆண்டுகள் பழமையான தாய்தெய்வச் சிலை)

உலக வரலாற்றில் தொல்லியல் அகழ்காய்வுகள் நமக்குக் கொடுத்திருக்கும் அளப்பறிய கண்டுபிடிப்புகளில் தாய் தெய்வ சிற்பங்களும் அடங்குகின்றன.

மனித குலம் இயல்பாகவே குழந்தைப் பிறப்பைப் பார்த்து அதிசயித்தது, ஆச்சரியப்பட்டது.  குழந்தை பிறப்பை ஏற்படுத்தக் கூடிய பெண் உடலைக் கடவுளாக உருவாக்கி வைத்து வழிபடும் மரபு பண்டைய மனித மனதில் எழுந்தது. அதன் வெளிப்பாடே தாய் தெய்வ வடிவங்கள்.

இன்று உலகின் சில நாடுகளில் அகழாய்வுகளில் தாய் தெய்வச் சிலைகள் கிடைத்துள்ளன. இவை பெரும்பாலும் விலங்குகளின் தந்தம், எலும்பு, கல் போன்றவற்றால் உருவாக்கப்படுபவை. 




ஆஸ்திரியாவின் தலைநகரான வியன்னாவில் உள்ள Natural History Museum Vienna அருங்காட்சியகத்தில் ஆஸ்திரியாவில் அகழாய்வில் கண்டுபிடிக்கப்பட்ட தாய்தெய்வச் சிலை பாதுகாக்கப்படுகிறது. Venus of Willendorf என அழைக்கப்படும் இந்தத் தாய்தெய்வச் சிலை 29,500 ஆண்டுகள் பழமையானது.  இச்சிலை ஆகஸ்டு 7, 1908ஆம் ஆண்டு அகழாய்வில் கண்டுபிடிக்கப்பட்டது. 

11.1 செ.மீ உயரம் கொண்டது இச்சிலை. Oolitic limestone எனப்படும் ஒரு வகை சுன்னாம்புக்கல்லைக் கொண்டு உருவாக்கப்பட்டது.  ஆஸ்திரியாவின் வில்லெண்டோர்ஃப் மலையடிவாரத்தில் தொல்லியல் அறிஞர்கள் ஜொசப் சோம்பதி (Josef Szombathy),  ஹூகோ ஓபெமாயர்( Hugo Obermaier) தலைமையில் நிகழ்த்தப்பட்ட ஆகழாய்வில்  அக்குழுவில் இருந்த யோகான் வேரான் (Johann Veran) அவர்களால் இச்சிலை கண்டுபிடிக்கப்பட்டது. வியன்னா அருங்காட்சியகத்தில் இந்தத் தாய்தெய்வச் சிலை ஒரு தனி அறையில் கண்ணாடி பெட்டிக்குள் வைக்கப்பட்டு முழுமையாக இச்சிலையைக் காணக் கூடிய வகையில் வைக்கப்பட்டுள்ளது.  


இந்தியவின் பழமையான செப்புத் தகடு

சோகௌரா (Sohgaura) செப்புத் தகடு என்பது பிராமி எழுத்தில் பிராகிருத மொழியில் எழுதப்பட்ட இந்திய செப்புத் தகடு ஆகும்இது இந்தியாவின் உத்தரபிரதேச மாநிலத்தில் கோரக்பூர் மாவட்டத்தில் கோரக்பூருக்கு தென்கிழக்கே சுமார் 20 கிமீ தொலைவில் ரப்தி ஆற்றின் கரையில் உள்ள சோகௌரா என்ற கிராமத்தில் கண்டுபிடிக்கப்பட்டதுஇதுவரை அறியப்பட்ட மிகப் பழமையான இந்திய செப்புத் தகடு இதுவாகும். (கிமு 3ஆம் நூற்றாண்டு)





தொல்பொருள் ஆய்வாளர் ‘ரேமண்ட் ஆல்சின்’ இது அசோகர் காலத்தைச் சேர்ந்தது என்று நம்புகிறார்மேலும் இதுபிற்கால செப்புத் தகடுகளின் முன்னோடியாகக் கருதுகிறார்.


தட்டின் உரை பின்வருமாறு மொழிபெயர்க்கப்பட்டுள்ளதுபஞ்சத்தை எதிர்த்துப் போராட இரண்டு தானியக்கிடங்குகள் (கோஸ்தாகராநிறுவப்பட்டதைக் குறிப்பிடுகிறது


Sāvatiyānam Mahāma(ttā)nam sāsane Mānavāsītika-
ḍasilimate Ussagāme va ete duve koṭṭhāgālāni
tina-yavāni maṃthulloca-chammā-dāma-bhālakān(i)va
laṃ kayiyati atiyāyikāya no gahi(ta)vvāya


மணவாசி என்ற சந்திப்பில்,

இந்த இரண்டு சேமிப்புக் கிடங்குகளும் தயார் செய்யப்பட்டுள்ளன.

தியாவணிமதுரா மற்றும் சஞ்சுவில் இருந்து ஏராளமான பண்டங்களின்/பொருட்கள் வைப்பதற்காக..


                 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏



ரொசெட்டா கல் (Rosetta Stone)

ரொசெட்டா கல் (Rosetta Stone) என்பதுகல்வெட்டின் ஒரே பக்கத்தில் இரு மொழிகளில் எழுதப்பட்டிருக்கும் கல்வெட்டுகளை குறிக்கும்இப்பொழுதுஎகிப்தில் இதை ‘ரஷித் கல்’ என்று அழைக்கப்படுகிறது





ஒரே பத்தியை பட எழுத்தையும்(hieroglyphic) உள்ளடக்கிய இரண்டு எகிப்திய எழுத்துமுறைகளிலும்கிரேக்கமொழியிலும் எழுதிய ஒரு கல்வெட்டு ஆகும்இது கி.மு 196 ஆம் ஆண்டில் வெட்டப்பட்டது.





இக் கல்லின் ஒப்பீட்டு மொழிபெயர்ப்பானதுமுன்னர் வாசித்து அறியப்படாத படஎழுத்துக்களை வாசித்து அறிவதற்கு உதவியதுஇக் கல்வெட்டுபலவித வரி நீக்கங்கள் பற்றியும்கோயில்களில் சிலைகள் அமைப்பது தொடர்பான விதிமுறைகளையும் கொண்ட ஒரு ஆணையாகும்இது ஐந்தாம் தொலெமியினால் (Ptolemy Vவெளியிடப்பட்டதுஐந்தாம் தாலமிஎகிப்தை கிமு 204 முதல் கிமு 180 முடிய 24 ஆண்டுகள் ஆட்சி செய்தார்.


1799 ஆம் ஆண்டில் எகிப்தின் மத்தியதரைக் கடற்கரைத் துறைமுகமான ரொசெட்டாவில்பிரெஞ்சுக்காரரால் கண்டுபிடிக்கப்பட்டதுஇது 1822 ஆம் ஆண்டில் ஜேன்-பிராங்கோயிஸ் சம்போலியன் (Jean-François Champollion) என்பவரால் வாசித்து மொழிபெயர்க்கப்பட்டது. 


அப்படியான இருமொழிக் கல்வெட்டு ஒன்று ஆப்கானிஸ்தானத்தின் காந்தகாருக்கு அருகில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதுஅசோகரின் காந்தார கல்வெட்டு (Kandahar Bilingual Rock Inscriptionஎன்பது மௌரியப் பேரரசின் பேரரசர் அசோகரால் சுமார் கி.மு 260 இல் கிரேக்க மற்றும் அராமேய மொழிகளில் பாறையில் செதுக்கப்பட்ட பிரபலமான இருமொழி கல்வெட்டு அரசாணை ஆகும்ஒரே மொழியை ஆட்சிமொழியாக்காமல் தனது ஆணைகளை இருமொழிகளில் பொறித்திருக்கிறார்.


                      🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏