ரொசெட்டா கல் (Rosetta Stone) என்பது, கல்வெட்டின் ஒரே பக்கத்தில் இரு மொழிகளில் எழுதப்பட்டிருக்கும் கல்வெட்டுகளை குறிக்கும். இப்பொழுது, எகிப்தில் இதை ‘ரஷித் கல்’ என்று அழைக்கப்படுகிறது
ஒரே பத்தியை பட எழுத்தையும்(hieroglyphic) உள்ளடக்கிய இரண்டு எகிப்திய எழுத்துமுறைகளிலும், கிரேக்கமொழியிலும் எழுதிய ஒரு கல்வெட்டு ஆகும். இது கி.மு 196 ஆம் ஆண்டில் வெட்டப்பட்டது.
இக் கல்லின் ஒப்பீட்டு மொழிபெயர்ப்பானது, முன்னர் வாசித்து அறியப்படாத படஎழுத்துக்களை வாசித்து அறிவதற்கு உதவியது. இக் கல்வெட்டு, பலவித வரி நீக்கங்கள் பற்றியும், கோயில்களில் சிலைகள் அமைப்பது தொடர்பான விதிமுறைகளையும் கொண்ட ஒரு ஆணையாகும். இது ஐந்தாம் தொலெமியினால் (Ptolemy V) வெளியிடப்பட்டது. ஐந்தாம் தாலமி, எகிப்தை கிமு 204 முதல் கிமு 180 முடிய 24 ஆண்டுகள் ஆட்சி செய்தார்.
1799 ஆம் ஆண்டில் எகிப்தின் மத்தியதரைக் கடற்கரைத் துறைமுகமான ரொசெட்டாவில், பிரெஞ்சுக்காரரால் கண்டுபிடிக்கப்பட்டது. இது 1822 ஆம் ஆண்டில் ஜேன்-பிராங்கோயிஸ் சம்போலியன் (Jean-François Champollion) என்பவரால் வாசித்து மொழிபெயர்க்கப்பட்டது.
அப்படியான இருமொழிக் கல்வெட்டு ஒன்று ஆப்கானிஸ்தானத்தின் காந்தகாருக்கு அருகில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அசோகரின் காந்தார கல்வெட்டு (Kandahar Bilingual Rock Inscription) என்பது மௌரியப் பேரரசின் பேரரசர் அசோகரால் சுமார் கி.மு 260 இல் கிரேக்க மற்றும் அராமேய மொழிகளில் பாறையில் செதுக்கப்பட்ட பிரபலமான இருமொழி கல்வெட்டு அரசாணை ஆகும். ஒரே மொழியை ஆட்சிமொழியாக்காமல் தனது ஆணைகளை இருமொழிகளில் பொறித்திருக்கிறார்.
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
No comments:
Post a Comment