சோகௌரா (Sohgaura) செப்புத் தகடு என்பது பிராமி எழுத்தில் பிராகிருத மொழியில் எழுதப்பட்ட இந்திய செப்புத் தகடு ஆகும். இது இந்தியாவின் உத்தரபிரதேச மாநிலத்தில் கோரக்பூர் மாவட்டத்தில் கோரக்பூருக்கு தென்கிழக்கே சுமார் 20 கிமீ தொலைவில் ரப்தி ஆற்றின் கரையில் உள்ள சோகௌரா என்ற கிராமத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. இதுவரை அறியப்பட்ட மிகப் பழமையான இந்திய செப்புத் தகடு இதுவாகும். (கிமு 3ஆம் நூற்றாண்டு)
தொல்பொருள் ஆய்வாளர் ‘ரேமண்ட் ஆல்சின்’ இது அசோகர் காலத்தைச் சேர்ந்தது என்று நம்புகிறார், மேலும் இதுபிற்கால செப்புத் தகடுகளின் முன்னோடியாகக் கருதுகிறார்.
தட்டின் உரை பின்வருமாறு மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. பஞ்சத்தை எதிர்த்துப் போராட இரண்டு தானியக்கிடங்குகள் (கோஸ்தாகரா) நிறுவப்பட்டதைக் குறிப்பிடுகிறது
Sāvatiyānam Mahāma(ttā)nam sāsane Mānavāsītika-
ḍasilimate Ussagāme va ete duve koṭṭhāgālāni
tina-yavāni maṃthulloca-chammā-dāma-bhālakān(i)va
laṃ kayiyati atiyāyikāya no gahi(ta)vvāya
மணவாசி என்ற சந்திப்பில்,
இந்த இரண்டு சேமிப்புக் கிடங்குகளும் தயார் செய்யப்பட்டுள்ளன.
தியாவணி, மதுரா மற்றும் சஞ்சுவில் இருந்து ஏராளமான பண்டங்களின்/பொருட்கள் வைப்பதற்காக..
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
No comments:
Post a Comment