Venus of Willendorf (29,500 ஆண்டுகள் பழமையான தாய்தெய்வச் சிலை)
உலக வரலாற்றில் தொல்லியல் அகழ்காய்வுகள் நமக்குக் கொடுத்திருக்கும் அளப்பறிய கண்டுபிடிப்புகளில் தாய் தெய்வ சிற்பங்களும் அடங்குகின்றன.
மனித குலம் இயல்பாகவே குழந்தைப் பிறப்பைப் பார்த்து அதிசயித்தது, ஆச்சரியப்பட்டது. குழந்தை பிறப்பை ஏற்படுத்தக் கூடிய பெண் உடலைக் கடவுளாக உருவாக்கி வைத்து வழிபடும் மரபு பண்டைய மனித மனதில் எழுந்தது. அதன் வெளிப்பாடே தாய் தெய்வ வடிவங்கள்.
இன்று உலகின் சில நாடுகளில் அகழாய்வுகளில் தாய் தெய்வச் சிலைகள் கிடைத்துள்ளன. இவை பெரும்பாலும் விலங்குகளின் தந்தம், எலும்பு, கல் போன்றவற்றால் உருவாக்கப்படுபவை.
ஆஸ்திரியாவின் தலைநகரான வியன்னாவில் உள்ள Natural History Museum Vienna அருங்காட்சியகத்தில் ஆஸ்திரியாவில் அகழாய்வில் கண்டுபிடிக்கப்பட்ட தாய்தெய்வச் சிலை பாதுகாக்கப்படுகிறது. Venus of Willendorf என அழைக்கப்படும் இந்தத் தாய்தெய்வச் சிலை 29,500 ஆண்டுகள் பழமையானது. இச்சிலை ஆகஸ்டு 7, 1908ஆம் ஆண்டு அகழாய்வில் கண்டுபிடிக்கப்பட்டது.
11.1 செ.மீ உயரம் கொண்டது இச்சிலை. Oolitic limestone எனப்படும் ஒரு வகை சுன்னாம்புக்கல்லைக் கொண்டு உருவாக்கப்பட்டது. ஆஸ்திரியாவின் வில்லெண்டோர்ஃப் மலையடிவாரத்தில் தொல்லியல் அறிஞர்கள் ஜொசப் சோம்பதி (Josef Szombathy), ஹூகோ ஓபெமாயர்( Hugo Obermaier) தலைமையில் நிகழ்த்தப்பட்ட ஆகழாய்வில் அக்குழுவில் இருந்த யோகான் வேரான் (Johann Veran) அவர்களால் இச்சிலை கண்டுபிடிக்கப்பட்டது. வியன்னா அருங்காட்சியகத்தில் இந்தத் தாய்தெய்வச் சிலை ஒரு தனி அறையில் கண்ணாடி பெட்டிக்குள் வைக்கப்பட்டு முழுமையாக இச்சிலையைக் காணக் கூடிய வகையில் வைக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment