“நீதிதேவன் மயக்கம்” - பேரறிஞர் அண்ணா
அறம் அற்ற, பொறுப்பற்ற, சுயநலம் மிக்க, ஒரு சாராரின் நலன் கருதி இயற்றப்பட்ட இதிகாசமும், எழுதப்பட்ட வரலாறும் நம் மக்கள் மீது பக்தி என்ற போர்வையில் அடிமைத்தனத்தை திணித்தது. இப்படிப்பட்ட திணிப்புகளை மறு விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்ற பகுத்தறிவின் வெளிப்பாடே பேரறிஞர் அண்ணாவின் “நீதிதேவன் மயக்கம்” என்ற நாடகம்.
அண்ணாவின் நீதிதேவன் மயக்கத்தில் வரும் பாத்திரங்கள் இராவணன், கம்பர், இராமன், சீதை, அகலிகை, அக்கினி, துரோணர், விசுவாமித்திரர், பரசுராமன், வால்மீகி, துரோணர், கோட்புலி நாயனார், ஆகியோர் நடத்திய மனித நேயமற்றவன் கொடுமைகள் அனைத்தும் சமயச் சார்பான நூல்களில் ஞாயம் கற்பிக்கப்பட்டுப் பாராட்டப்படுகின்றன. அவர்கள் வன்கொடுமையை மேற்கொள்ள எந்தவிதமான காரணமும் இல்லை. சான்றாகத் துரோணர் ஏகலைவனின் கட்டை விரலை வாங்கியது. தன் கட்டை விரலை வெட்டிக் கொடுக்கும் அளவிற்கு ‘ஏகலைவன்’ எந்தத் தவறும் செய்யவில்லை.
‘கோட்புலி நாயனார்’ பதுக்கி வைத்திருந்த நெல் மூட்டைகளைப் பஞ்சம் பசியால் வாடிய ஏழை மக்கள் எடுத்துச் சென்றனர். அதன் காரணமாகவே அனைவரும் வெட்டிச் சாய்க்கப்பட்டனர். ஒரு பச்சிளம் குழந்தைகூட துண்டு துண்டாக வெட்டப்பட்டு படுகொலை செய்யப்பட்டது. இத்தகு கொடுமைகள் கடவுளின் பெயரால், சாதியின் பெயரால் ஞாயம் கற்பிக்கப்பட்டன. ஆனால் சீதையைச் சிறையெடுக்க இராவணனுக்கு ஒரு காரணம் இருந்தது. தன் தங்கையின் உடலுறுப்புகளைச் சிதைத்த கொடுமையே அக்காரணம். ஆனால் இரக்கமற்ற காரியத்தை செய்த ஆரிய திறவிகள் தேவர்களாகப்பட்டனர், இறக்கமற்ற அவர்களின் செயல்கள் ‘பக்தியின்’ பெயரால் புனிதமாக்கப்பட்டு நியாயமாக்கப்படுகிறது.
இராமாயணம் - மகாபாரதம் எனும் இதிகாசங்கள் இன ஒடுக்கலை - சுரண்டலை - ஞாயப்படுத்த அமைந்தவை என்பதில் ஐயமில்லை.
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏