முனைவர் திரு. கண்ணபிரான் இரவிசங்கர் அவர்கள் எழுதிய “அறியப்படாத தமிழ்மொழி”யின் புத்தகத்தை தமிழ் கூறும் நல்லுலகத்தில் வாழும் மக்கள் அனைவரும் வாசித்து பயன்பெற வேண்டிய ஒரு அரிய புத்தகம். நம் மரபில்/பண்பாட்டில் பலப்பல நூற்றாண்டுகளாக, நம்மை அறியாமல் “பொய்யென்றே தெரியாமல் பழகிவிட்ட பொய்கள்” பற்றி முனைவர் எடுத்துரைத்து அவற்றின் மெய்த்தன்மையை விளக்கிகூறுகிறார்.
“கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே..”பாடலின் ஏன் அவ்வாறு கூறினார்கள் என்று தெளிவாக எடுத்துரைக்கிறார்.
‘புலால் மறுத்தல்’ = ‘துறவு இயலில்’ வருகிறது; ‘புதல்வரைப் பெறுதல்’ = ‘இல்லறவியல்’ வருகிறது.
மேலும், ஆறுபடையா?? அல்லது ஆற்றுப்படையா?? ;
தமிழில், மொத்தம் 6 அவ்வையார்கள் இருந்துள்ளனர் என்றும், அவர்கள் வாழ்ந்த காலத்தையும் அழகாக பட்டியல் இடுகிறார்.
தமிழ் மொழி மறைப்பு, தமிழ் தெய்வ மறைப்பு, தமிழ் பண்பாடு மறைப்பு முதலியன எவ்வாறு நிகழ்ந்தது/நிகழ்கின்றது, அதன் நோக்கம் என்ன? என்பதையும் விளக்கமாக கூறுகிறார்;
தொல்காப்பியம் மற்றும் சம்ஸ்கிருத நூல்களில் இருந்து பல உதாரணங்களை மேற்கோள்காட்டுகிறார்.
நம்மை அறியாமல் பல நூற்றாண்டுகளாக தமிழில் சேர்ந்த பழைய கசடுகளைக் அறிவதற்கு இந்த நூல் முயல்கிறது. யாவரும் அறிந்து கொள்ளும் வகையில் எளிமை தமிழில் வாசகர்களிடம் பேசும் புத்தகமாக வடிவமைத்துள்ளார்.
நன்றி
பொய்யா விளக்கே விளக்கு”
🙏🙏🙏🙏🙏🙏🙏
தமிழ் வாழ்க
No comments:
Post a Comment