#வாசித்தவை
முனைவர் ரா. பூங்குன்றன் தமிழ்நாடு அரசின் தொல்லியல் துறையில் இருபத்தொன்பது ஆண்டுகள் பணியாற்றி உதவி இயக்குநராகப் பணி நிறைவுபெற்றவர். ஐயா அவர்களின் "தொல்குடி வேளிர் வேந்தர்" என்ற நூலிற்கு தமிழக அரசின் சிறந்த நூலிற்கான விருது வழங்கப்பட்டுள்ளது. முனைவர் அவர்கள் எழதிய “வேளிர் வரலாறு” புத்தகத்தை வாசிக்கும் வாய்ப்பு எனக்கு கிட்டியது. வேளிரின் வரலாற்றைப்பற்றி சங்க இலக்கியத்தில் கிடைக்கும் தரவுகளை தொல்லியல் சான்றுகளுடன் ஒப்பிட்டுப் பார்த்து எழுதப் பட்ட ஆய்வுகள் இந்த நூலில் விரிவாக முனைவர் எடுத்துரைக்கிறார். “வேள்” என்ற சொல்லும் “புகழ் பெற்று விளங்குவோர்” என்ற பொருளைத் தருகிறது. வேளிச்சம் என்னும் சொல் ஓளி என்னும் பொருளிலேயே என்று எடுத்துரைக்கிறார்.
தமிழகத்தில் “தலைமைத்துவத்தின் பரிணாம வளர்ச்சியும்”, தமிழ் கூறும் நல்லுலகில் வாழ்ந்த வேளிரின் வாழ்க்கை முறைப்பற்றி சங்க இலக்கியத்தில் கிடைக்கும் தரவுகளை வைத்து விளக்குகிறார் :-
* தொல் குடிதலைவன் -> வேளிர் -> வேந்தர்கள்
(தொல் பழங்காலம் 2000BC -> சங்க காலம் முடியும் வரை 300CE)
- தொல் குடிதலைவன்:- தொல் பழங்காலத்தில் வேட்டை பிரதான தொழிலாக இருந்த பொழுது குடிதலைவன் இரத்த உறவின் அடிப்படையில் அக்குடியின் தலைவனாக உருவானான். குறிஞ்சி நில மக்கள் நாகரிகத்தின் தொடக்கக் கட்டத்தில் இருந்தார்கள். ஆண்கள் வேட்டையாடினார்கள், பெண்கள் அவரை, சாமை, தினை முதலியன பயிர் செய்தார்கள். வேட்டையாடும் தொழிலால் நாடோடியாகத் திரிந்த மக்கள் இனம் நிலைகொள்ளப் பெண்கள் உழைப்பு காரணமாயிற்று. ஆரம்ப நாகரிகம் பெண்கள் வளர்த்த நாகரிகமே
- வேளிர்:- குறிப்பிட்ட நிலப்பரப்பு அ. ஊர் “வேள்” ஒருவனது கட்டுப் பாட்டில் இருந்துள்ளது, அவ்விடத்தில் வாழ்ந்த குடிகள் இரத்த உறவுடையோராகவும் விளங்கினர். பல சிறுகுடிகள் இனைந்து வேளிர் தலைவன் உருவானான். தொல்குடிகளின் இரத்த உறவினால் உருவான தலைவனே “வேள்”. இதனால் இருவருக்கும் இடையிலான உறவு உறுதியானதாய் இருந்தது. குடிகளில் ஓளிமிக்க ஒருவன் மக்களால் தலைவனாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. சங்க காலத்திற்கு முன்னறே மற்றும் சங்க காலத்தின் போதும் வேளிர் நிலைபெற்றனர்.
- ஆநிரை கவர்தல் மற்றும் பாதுகாத்தல், கனிம வளங்கள் சார்ந்த வணிகம், பகைமை போன்ற பல காரணங்களால் சங்கம் மறையும் காலத்தில் வேளிருக்குள் பல போர்கள் நடந்தது (உதாரணம்)
- நெடுஞ்சேழியன் vs எவ்வி
- நெடுங்கிள்ளி vs நலங்கிள்ளி
- மூசிக நாடு vs சேர நாடு
- திருமுடிக்காரி (காரி/மலையமான்) vs அதியமான்
- அதியமான் vs தொண்டைமான்
- வெண்ணிப் போர் (கரிகால் சோழன் vs பெருஞ் சேரலாதன் + பாண்டிய மன்னன் + பதினொரு வேளிர்)
- வேந்தர்கள்:- ஆற்றோரங்களில் ‘உழவுப் பயன்’ மூலம் தலை சிறந்த நாகரிகம் தலையெடுத்தது. அது வளர்ச்சியுறவே தேவைக்கு எஞ்சிய தானியங்கள் கிடைத்தன. ‘நிலவுடைமை’ சமுதாயம் தோன்றியது. அதனோடு ‘வர்க்கப் பிரிவினையும்’ தோன்றியது. நில உடைமையாளர் அரசியல் ஆதிக்கம் பெற்றனர். குறிஞ்சி நிலத்தாரையும், முல்லை நிலத்தாரையும், போராலும், உறவு முறையாலும் தங்கள் வசப்படுத்தினார்கள். முல்லை நாகரிகம் தோன்றி நிலை கொண்டிருந்தது. வேந்தர் முடியரசுகள் நிலைப்பெற்றன. விவசாயம், மருத நாகரிகத்தின் பெரும் வளர்ச்சி, யவனருடன் பெரும் வணிகம், வடக்கத்திய கலாச்சார தாக்கம், அதித செல்லம், பேராசை, புகழ் மயக்கம், பிற சமய தாக்கம் போன்ற காரணங்களால் ஒரு வேளிர் பிற வேளிர்களுடன் இனைத்தோ, பிற வேளிரை அழித்தோ அல்லது அடக்கி இறுதியாக “வேந்தர்கள்” உருவாகினர். வேந்தன், மருத நிலத்தின் தலைவன்.
கொற்கையில் ஆட்சி புறிந்த ‘நெடுஞ்தேர்ச்செழியன்’ பெரும் வணிகம், செல்வம், படைபலம் காரணமாக ‘அகுதை’ பாண்டியன் ஆட்சி செய்த ‘மதுரை’ மீதும், பிற வேளிர்களுடன் போருக்கு சென்றனர். அதைபோல, உறையூர் பகுதிகளில் ஆட்சி புரிந்த சோழர்களும் பெரும் வணிகம், செல்வம், படைபலம் காரணமாக தஞ்சை மீதும், பிற வேளிர்களுடன் போருக்கு சென்றனர்.
- வேந்தன் தலைவனாக வந்தபிறகு தமிழ் சமுகத்தில் “வர்க்கப் பிரிவினை” பெரிதும் ஊக்கிவிக்கப்பட்டது அ. பின்பற்றபடுகிறது. பிற்காலங்களில், பல குடிகளும் / வேளிர்களுக்கு இடையில் உள்ளடக்கிய நாட்டில் இரத்த உறவு இல்லாத வேந்தன் தலைவனாக உருவானான். வேந்தர்களைப் பற்றி சில புலவர்கள் பாடும் பொது ‘வம்பவேந்தன்’ என்றே கூறிப்புடுகின்றனர்
காலப்போக்கில், வேளிர் மற்றும் மூவேந்தர்கள் பிற குடிகளிடம் அங்கீகாரம் பெறுவதற்காக அவர்களை பற்றி புனைக்கதைகள் உருவாக்கப்பட்டன. பின்னர் மன்னர்கள் கடவுளுக்கு இனையாகவும் போற்றப்பட்டனர். அதியமான்கள் தேவலோகத்திலிருந்து கரும்பினைக் கொண்டு வந்த கதைகள், தொண்டைமான் மாயோன் வழித்தோன்றல் என்பது போல பல புனைக்கதைகள் உருவாக்கப்பட்டன
மேலும் பல தரவுகள் இந்நூலிலேயே இடம்பெற்றுள்ளன வரலாற்று மாணவர்களும் ஆய்வாளர்களுக்கும் இந்நூல் பேருதவியாக இருக்கும்
| முனைவர் ரா. பூங்குன்றன் |
தமிழ் வாழ்க
No comments:
Post a Comment