#படித்ததில்_பிடித்தது
தொலைந்துபோன பண்டைய தொல்குடி மக்களின் வாழ்க்கைமுறை மற்றும் போரினால் ஏற்படும் பேரிழப்பு பற்றியது. கையறுநிலை நிலையில் அவ்வையார் “அதியமான் நெடுமான் அஞ்சி” பற்றி பாடியது. (புறம் - 235)
“சிறிய கள் பெறினும், எமக்கு ஈய்வும் மன்னே!
பெரிய கள் பெறினே, யாம் பாடத், தான் மகிழ்ந்து உண்ணும் மன்னே!
சிறு சோறு ஆயினும், நனிபல கலந்தன் மன்னே!
பெருஞ்சோறு ஆயினும், நனிபல கலந்தன் மன்னே!
என்பொடு தடிபடு வழியெல்லாம், எமக்கு ஈய்வும் மன்னே!
அம்பொடு வேல்நுழை வழியெல்லாம் தான்நிற்கும் மன்னே!
நரந்தம்பூ நாறும் தன் கையால், புலவு நாறும் என்தலை தைவரும்! மன்னே!
அருந்தலை இரும்பாணர் அகன்மண்டை துளைத்துஉறுவி,
இரப்போர் புன்கண் பாவை சோர,
அஞ்சோல் நுண்தேர்ச்சிப் புலவர் நாவில்
சென்று வீழ்ந்தன்று, அவன்
அருநிறந்து இயக்கிய வேலே!
இனிப், பாடுநரும் இல்லை; படுநருக்கு ஈகுநரும் இல்லை;
பனித்துறைப் பகன்றை நறைக் கொள் மாமலர்
சூடாது வைகியாங்குப், பிறர்க்கு ஓன்று
ஈயாது வீயும் உயிர்தவப் பலவே!
பெரிய கள் பெறினே, யாம் பாடத், தான் மகிழ்ந்து உண்ணும் மன்னே!
சிறு சோறு ஆயினும், நனிபல கலந்தன் மன்னே!
பெருஞ்சோறு ஆயினும், நனிபல கலந்தன் மன்னே!
என்பொடு தடிபடு வழியெல்லாம், எமக்கு ஈய்வும் மன்னே!
அம்பொடு வேல்நுழை வழியெல்லாம் தான்நிற்கும் மன்னே!
நரந்தம்பூ நாறும் தன் கையால், புலவு நாறும் என்தலை தைவரும்! மன்னே!
அருந்தலை இரும்பாணர் அகன்மண்டை துளைத்துஉறுவி,
இரப்போர் புன்கண் பாவை சோர,
அஞ்சோல் நுண்தேர்ச்சிப் புலவர் நாவில்
சென்று வீழ்ந்தன்று, அவன்
அருநிறந்து இயக்கிய வேலே!
இனிப், பாடுநரும் இல்லை; படுநருக்கு ஈகுநரும் இல்லை;
பனித்துறைப் பகன்றை நறைக் கொள் மாமலர்
சூடாது வைகியாங்குப், பிறர்க்கு ஓன்று
ஈயாது வீயும் உயிர்தவப் பலவே!
விளக்கம்:
சிறிதளவு கள் கிடைக்குமானால் அதனை முழுமையாக எனக்கு உண்ணக் கொடுத்துவிடுவான்.
அது தீர்ந்துபோன பின்னர் பெருமளவு கள் கிடைக்குமாயின் வேண்டிய அளவு எனக்குக் கொடுத்து நான் உண்டு பாடக் கேட்டுக்கொண்டே அவனும் பருகுவான்.ஆனால் சிறிதளவே உணவு இருக்குமாயினும் அதனை அனைவருக்கும் பங்கிட்டுத் தந்து தானும் உடனிருந்து உண்பான். பெருஞ்சோறு வழங்கினும் நன்றாகப் பலரும் உண்ணுமாறு வழங்குவான்.ஆனால் எலும்பும் தசையுமாகிய உணவு கிடைக்கும்போது எனக்குக் கொடுத்துவிடுவான். அம்பும் வேலும் பாயும் இடங்களிலெல்லாம் அவன் என்னை ஒதுக்கிவிட்டு முன்சென்று நிற்பான். நரந்தம்பூ நாறும் தன் கையால் புலால்நாற்றம் அடிக்கும் என் தலையைக் கோதித் தடவுவான்.அவன் நெஞ்சில் வேல் பாய்ந்தது.
உண்மையில் அது அவன் நெஞ்சில் பாயவில்லை.அரிய இசைத்திறம் கொண்ட பாணர் உண்ணும் மண்டை என்னும் உண்கலத்தைத் துளைத்துக்கொண்டு, இரந்துண்டு வாழ்பவர் அனைவருடைய கையையும் துளைத்துக்கொண்டு, பிறரைக் காப்பாற்றிப் புரக்கும் பொருமக்கள் எல்லாருடைய கண்களின் பாவை மழுங்க (அழுதழுது பார்வை மங்க), அரிய சொற்களில் தேர்ச்சி பெற்றுப் பாடும் புலவர்களின் நாவில் சென்று பாய்ந்துள்ளது. இப்படிப்பட்ட ஆசாக (துணைவனாக) இருந்த எந்தை (என் தலைவன்) இப்போது எங்கே இருக்கிறானோ?
ஆதலால்,
இனிப்,
பாடுபவர்களும் இல்லை.
பாடுபவர்களுக்கு ஏதாவது ஒன்றையேனும் தருபவர்களும் இல்லை.
பனிக்காலத்தில் பூக்கும் பகன்றைப் பூ யாரும் சூடாமல் தரையில் கிடப்பது போல, கொடுப்பவர் யாருமின்றிச் சாகும் உயிர் மிகப் பலவாக இருக்கும்.
விறலி-woman who sings and dances
தமிழ் வாழ்க🙏
No comments:
Post a Comment