தீர்க்கதரிசி

 #வாசித்தவை



கலீல் கிப்ரான்( Kahlil Gibran ) - தீர்க்கதரிசி (“The Prophet'') என்னும் மிகச் சிறந்த நூலின் தமிழாக்கத்தின் இருந்து சில குறிப்புகள்.

* என் விழிப்பே என் ஆழ்ந்த உறக்கத்தின் கனவு.

* அன்பே அன்புக்கு போதுமானது.

* குழந்தைகள்

   உங்கள் குழந்தைகள் உங்கள் குழந்தைகள் அல்ல. உங்கள் மூலமாக வருகிறார்களே தவிர உங்களுக்காக அல்ல. அவர்கள் உங்களுடன் இருந்தாலும் உங்களுக்குச் சொந்தமானவர்கள் கிடையாது. உங்கள் அன்பை கொடுங்கள் ஆனால் உங்கள் எண்ணங்களை திணிக்காதிர்கள். அவர்களை போல நீங்கள் வாழலாம் ஆனால் உங்களை போல மாற்ற முயலாதீர்கள்.

* உங்கள் கிணற்றில் தண்ணீர் நிரம்பி வழிந்தாலும், நாளை தாகம் எடுத்தால் என்ன செய்வது என்று கலங்கினால்; அந்த தாகத்தை எப்படி தனிப்பது.? 

* மானம் என்பது மானமற்றவர்களிடம் இருந்து நம்மை காக்கும் கவசம் என்பதை மறவாதீர்.

* உங்கள் உழைப்புக்குப் பேரமாக தங்கள் வார்த்தைகளைத் தோரணமாக்கித் தருபவர்களை உங்கள் வாழ்க்கையில் அனுமதிக்காதீர்கள்.

* ஆசைப்படுவதும், அச்சப்படுவதும், வெறுப்பதும், போற்றுவதும் இவையெல்லாம் நீங்கள் அனுசரித்தால் மட்டும் உங்கள் மனதில் நிகழும். பயத்தை துறக்க வேண்டும் என்றால் அந்த பயத்தின் அடித்தளம் உங்கள் மனதில் இருக்கிறதே தவிர, உங்களை பயப்படுத்துவரின் கையில் அல்ல. 

* உணர்ச்சியை அறிவு கொண்டு வழிநடத்தினால்; ஓவ்வொரு நாளும் உணர்ச்சி தன்னை புதுப்பித்துக் கொள்ளும். உங்கள் வீட்டில் அன்பிற்குரிய இரண்டு விருந்தினர் இருந்தால் அவர்களை எப்படி கவனிப்பீர்களோ, அதுபோல உங்கள் உணர்ச்சியும், அறிவையும் கவனித்துக்கொள்ளுங்கள்

* உங்களில் பலர் தனிமைக்கு பயந்து வாயாடுபவர்களைத் தேடுகிறார்கள். தனிமையின் மௌனம் அவர்களின் கண்களுக்கே அவர்களை நிர்வாணமாக்கி காட்டுவதால் அதில் இருந்து விடுபட்டு ஓட நினைக்கிறார்கள். வாயாடுபவர்களின் பேச்சானது; அறிவோ, முன்யோசனையோ இன்றி அவர்கள் பேசும் பொருள் அவர்களுக்கே புரியாது.  

* “நேற்று என்பது இன்றைய நினைவு; நாளை என்பது இன்றைய கனவு”

/*சிறப்பு*/

தமிழ் வாழ்க🙏

No comments:

Post a Comment