விஞ்ஞான லோகாயத வாதம்

 #வாசித்தவை



ராகுல் சாங்கிருத்யாயன்(Rahul Sankrityayan) அவர்கள் எழுதிய “விஞ்ஞான லோகாயதா வாதம்” புத்தகத்தின் தமிழாக்கத்தில் இருந்து சில குறிப்புகள்.


லோகாயதா (Lokayata/Cārvāka) என்றால் "உலக மக்களுக்காக' என்பதாகும் (philosophy of the real world). பொறிக் காட்சிகளில் ‘ஆராய்ந்து உணரப்படுபவை’ மட்டுமே லோகாயத மரபில் திடமான சான்றுகளாக எடுத்துக் கொள்ளப்படுகின்றன. இது கடவுள், மதம், ஆன்மா, மறுபிறப்பு, சொர்க்கம் இப்படி எந்த “மாயக்” (unverifiable) கோட்பாடுகளையும் ஏற்பதில்லை. விஞ்ஞான லோகாயதா வாதம் எந்த ஒரு வாதத்தையும், கருத்தையும், கற்பனையையும், அது ஆராய்ச்சியிலும், பரிசோதனையிலும் பரீட்சிக்கப்பட்டு சரி என்று நிறுபிக்கப்பட்ட பிறகே ஓப்புக்கொள்ளும். “அறிவியல் வழிப்பட்ட ஆய்வு” முடிவுகளை மட்டுமே ஏற்கிறது. இறப்புக்குப் பின் எதுவுமில்லை என்பது இதன் தத்துவமாகும். சாதி, வேதம், யாகம் போன்ற எல்லாப் பிற்போக்குத் தனங்களையும் எதிர்கிறது. இது இந்தியாவின் ‘பொருள் முதல் வாதம்’ தத்துவமாக அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டது.

சமணமும் பௌத்தமும் தோன்றுவதற்கு லோகாயதம் தத்துவம் அடிப்படையானது.


ஓர் வலுவான சமூகம் ஏற்பட ஐந்து அடிப்படைகளைக் கொண்டிருக்க வேண்டும். அதாவது 

  1. இயக்கவியல் (Dialectic) 
  2. தத்துவவியல் 
  3. பொருளாதாரம் 
  4. விஞ்ஞானம் 
  5. அரசியல் என்பதுதான் அது.

வெறும் அடிப்படைத் தேவைகளைக் கொண்டு மட்டும் திருப்தியடைவதற்கு மனிதன் என்ன மிருகமா?

மனிதன் நாகரிகத்தில் எவ்வளவு முன்னேறுகிறானோ அந்த அளவுக்கு பொய்யிலும், புனை கதைகள் கூறுவதிலும் முன்னேறியிருக்கிறான் என்று வரலாற்றை ஆராய்ந்தால் புலப்படும். சாதி வெறி/மத வெறியை தூண்டி; நாடு, அதிகாரம், செல்வம் போன்றவற்றை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும், துய்க்க வேண்டும் என்று நினைக்கும் “பாசிசக்” கூட்டம் இந்த மண்ணில் காலங்காலமாய் இருந்து கொண்டிருக்கிறது. 

இத்தகைய பாசிச சக்தியை முறியடிக்க விஞ்ஞான லோகாயத வாதம் உதவலாம்.


காரண-காரிய வாதம்: இது ஒரு தவிர்க்க முடியாத விதியாகும். எ.கா. விதை (காரணம்) - மரம் (காரியம்). மாற்றம் கொண்டுவருவதை காரணம் என்கிறோம். மாற்றத்திற்கு “ஒரே” காரணம்தான் இருக்கமுடியும் என்ற அவசியமில்லை. விதை மரமாவதற்கு, மண், நீர், காற்று, அழுத்தம் என பல காரணங்களின் கூட்டாக இருந்தால்தான் மரம் என்ற ‘காரியம்’ நிகழும். அத்தனைக்கும் “ஏக” காரணம் என்று எதுவுமில்லை என்று புரியும். எனவே, ஏக காரணம், ஏக இறையன், ஏக பிரம்மம் என்று எதுவுமில்லை.


முழுமையான அறிவு: எல்லா உண்மைகளும் சார்புத்தன்மையுடையவையே. விஞ்ஞானமும், எல்லா மனித அறிவும் தொடர்ந்து மாறிக்கொண்டே மற்றும் வளர்ந்துகொண்டே இருக்கிறது. எல்லாம் அறிந்தவன் என்று கூறுபவன் நம்மை ஏமாற்றுகிறான். அறிவு எப்பொழுதும் முழுமையானது அல்ல. அதனால் அறிவுக்கு எப்பொழுதும் வேலை இருக்கிறது. அந்த அறிவு வேலை பிடிக்காமலோ, சோம்பேறிதனத்தாலோ, அடக்குமுறைக்கு பேராசைப்பட்டோ சிலர் எல்லாம் “மாயையின்” வேலை என்று தவறாக பரப்புவர்.


அறிந்ததைக் கொண்டு->அறியாத்தை தேடிச்செல்வது அ. விளக்க முயல்வது அறிவின் பயன். ஆனால் மதவாதிகளோ அறியாததை வைத்து -> அறிந்ததை விளக்க முயல்வர்கள்.


நன்னெறி வாதம்: லோகாயதம் நன்னெறி அற்றவர் பின்பற்றுவது என்ற தவறான கூற்று வேண்டும் என்றே மதவாதிகளால் பரப்பப்பட்டது. மத நன்னெறியின்றி உலகமே நசிந்துவிடுமென்று அவர்கள் நம்பினார்கள். ஆனால் லோகாயத வாதம் என்ன உரைக்கிறது என்றால் ‘நன்னெறி’ நிலையானதென்றும், அழிவில்லாததென்றும், இறுதியானது என்றும் ஒப்புக்கொள்ளாது. உதாரணமாக: 

      - வட இந்தியாவில், மாமன் மகள், அத்தை மகளை சகோதிரியாக கருதுகின்றனர். ஆனால் தென் இந்தியாவில், அது திருமணம் செய்துகொள்ளும் முறை. இதில் எது தவறான; எது சரியான நன்னெறி??

      - மகாபாரதம்(ஆதிபர்வம்)தில், மாதவிடாயின்போது ஒரு பெண் எந்த ஆணையும் உடலுறவு கொள்ள அழைக்கலாம். மேலும், ஒரு பெண்ணுக்கு பல கணவர்கள் இருந்தார்கள் என்பதற்கு ‘திரௌபதி’யே வரலாற்று சான்று. ஆனால். இந்த மத நன்னெறி(??!!!) இன்றைய சமூகத்தில் தவறு. 

      - கிருத்தவர்களின் ஆதியாகமம் (Old Testament) பூகர்ப்ப சாத்திரத்துக்கு (பூமி உருவான விதம்) முற்றிலும் முரணானது. ஆனால் கிருத்தவப் பாதிரிமார் சொல்வதென்ன?

      - அன்று, மனிதனை அடிமைகளாக்கி வியாபாரம் செய்தனர். அன்பை போதித்த மதங்களும்/குருமார்களும் அதை வேடிக்கைதான் பார்த்தனர். அந்த சுயநலம்தான் அவர்களின் நன்னெறி. ஆனால், இன்று அந்த முறை தவறு. இந்திய மண்ணுக்கே உரிய சாதிக் கொடுமைகளை எல்லாம் வல்ல இறைவனும் /குருமார்களும் வேடிக்கைதான் பார்க்கிறான். அனைவரும் இறைவனின் பிள்ளைகள் என்ற இவர்களின் செயல்பாடில்லாத பேச்சிக்களினால் அவர்கள் மற்றவர்களையும் தம்மையும் ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.

சீர்திருத்தம்” என்பதே இத்தகைய மரபை மீறிய புதுமைதான். உலக பண்பாட்டு வளர்ச்சி நேர்கோட்டில் தர்ககரீதியாகத் தொடர்ந்து நிகழவில்லை என்று ‘கோசாம்பி’ கூறுவார். விஞ்ஞான லோகாயத வாதம் மதத்தத்துவத்தை போல் அல்லாமல் இவ்வுலகம் மாறிக்கொண்டே இருக்கும் ஒன்றாக கருதுவதால். நன்னெறி என்பது முதலாளிகளோ, உயர்வகுப்பினர் என்று கூறிக்கொள்பவர்கள் முடிவுசெய்யவது அல்ல.  


இந்திய மக்கள் பொருளாதார மாற்றத்தின் வேகத்தை போல் அல்லாமல் இந்திய சமூக சீர்திருத்தம் மிகவும் மத்தமாகவே உள்ளது. பாசிச சக்திகளின் தூண்டுதலால் பலர் மக்களிடம் சாதி வேறியை தூண்டியும், ஆண்ட பரம்பரை கதைகள் பேசியும் இளைய தலைமுறையிடம் நஞ்சை விதைத்து வருகின்றனர். பழைய “ஆண்டான்-அடிமை” நிலையே தொடரவேண்டும் என்பது அவர்களின் எண்ணம். இத்தகைய சிந்தனைகளுக்கு பாசிச சக்தியும், முதலாளித்துவமும் எப்பொழுதும் கைகோத்திருப்பதை வரலாறு நிரூபிக்கிறது. ஒரு சிலர் ஏகபோக முதலாளியாகவும், அதிகாரவர்கமாக வாழவும் பேராசை கொண்டு பல மூடநம்பிக்கைகளையும், பாரம்பரியம், பூராணங்கள் என்ற பெயரிலும், பல அர்த்தமற்ற செயல்களையும் விஞ்ஞான சாயம் பூசி மக்களிடம் பரப்புகின்றனர். இக்காலத்திலும், நாங்கள் முனிவனின் யாகத்தில் இருந்து வந்தவர்கள், பிரம்மனின் வாயில் இருந்து வந்தவர்கள், நெஞ்சில் இருந்து வந்தவர்கள் என்று பிதற்றி கொண்டிருக்கிறார்கள். 


விஞ்ஞான லோகாயதம் உண்மையான நோக்கம் அறிவை வளர்ப்பதே; ருசுப்படுத்தக் (ஆதாரத்துடன்) கூடிய உண்மைகளை பகிரங்கப்படுத்துவதே; ஆனால் விஞ்ஞான உண்மைகள் பல மத நம்பிக்கைகளுக்கு முரண்படலாம். 


இந்நூல் மாற்றத்திற்கும், முன்னேற்றத்திற்கும் ஓர் திசைகாட்டியாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.


                     🙏🙏🙏🙏🙏🙏🙏


மெய் தேடல் முடிவதில்லை…
தமிழ் வாழ்க

No comments:

Post a Comment