கொற்றவையும் நடுகற்களும்

 


கொற்றவையும் நடுகற்களும்


பண்டையகாலத்தில் கால்நடைதான் செல்வம்ஆதனால் ஆகோள் பூசல் தமிழர்களின் வாழ்வில் அன்றாட நிகழ்வாக இருந்தது சங்கதமிழில் “ஆநிரை கவர்தல்” = “வெட்சி தினை” என்றும்; “ஆநிரை மீட்டல்” = “கரந்தை தினை” என்றும் இலக்கணம் வகுக்கப்பட்டதுபுறநானூற்றுப் பாடல்களில் வெட்சித் திணையை விட கரந்தை திணையில் தான் அதிகம் பாடல்கள் தொகுக்கப்பட்டதுதொல்காப்பியர் கரந்தைத் திணையை வெட்சித்திணையின் ஒரு்பகுதியாகவைத்தார்ஐயனாரிதனார் கரந்தைத்திணையைத் தனித்திணையாகவே கொள்வார்.

ஆநிரை கவர்பவர் = “மழவர் என்றும்மழவர்கள் ஆநிரை மிட்டலில் ஈடுபட்டதுல்லைபெரும்பாலும் நடந்த சமூகமாற்றங்களுக்கு ஆட்கொள்ளாமல் அவர்கள் களவினையே வாழ்க்கையாகக் கொண்டிருந்தனர்.

கடுங்கண் மழவர் களவு உழவு எழுந்த – அகம் 91/11”

ஒளிறு இலங்கு நெடு வேல் மழவர் பெருமகன் “ – புறம் 88/3

மழவர் பெருமகன் மா வள் ஓரி “ – நற் 52/9

மழவர்கள் வெற்றியுடன் ஆநிரை கவர்ந்தபிறகு ‘உண்டாட்டு’ (PotLatch) என்ற விழா நடைபெற்றது.


ஆநிரை மிட்பவர் = “மறவர் என்றும் அழைக்கப்பட்டனர்ஆநிரை மிட்ட மறவர்களுக்கு ‘பிள்ளையாட்டு’ என்ற விழாநடைபெற்றதுஆநிரை மிட்பவரை ‘கரந்தையர்ஆடவர்இளையர்தறுகண்’ என்றும் அழைக்கப்பட்டனர்

இப்பாடலில் “மழவர்” வேறு “மறவர்” வேறு என்பது உறுதியாகிறது.

நுழை நுதி நெடு வேல்குறும் படைமழவர்

முனை ஆத் தந்துமுரம்பின் வீழ்த்த 5

வில் ஏர் வாழ்க்கை விழுத் தொடை மறவர்

வல் ஆண் பதுக்கைக் கடவுட் பேண்மார்,

நடுகல் பீலி சூட்டி…” அகநானூறு 35


உறின் உயிர் அஞ்சா மறவர்” என்பார் வள்ளுவர்ஆநிரை மீட்கும்பொது இறந்த மறவருக்கு நடுகல் எழுப்பப்பட்டதுஇந்த நடுகற்களை தமிழர் தெய்வமாக வணங்கினர்


கல்லே பரவின் அல்லது,

நெல்உகுத்துப் பரவும் கடவுளும் இலவே” - (புறம் 335)

விளக்கம்:-நடுகல்லாயினவரின் நடுகல்லைத் தொழுவதன்றிநெல்லும் பூவும் சொரிந்து வழிபடக் கடவுளும் வேறுகிடையாது

திருவண்ணாமலை -விழுப்புரம்தர்மபுரிப் பகுதிகளில் இன்றும் வழக்கில் உள்ளது


மேலும், போரில் மாண்ட தகடூரை ஆண்ட வேளிர் “அதியமான்” எழுப்பிய நடுகல் நாட்டினர் பற்றி ‘அவ்வையார்’ பாடிய பாடல். 

“இல்லா கியரோகாலை மாலை!

அல்லா கியர்யான் வாழும் நாளே!

நடுகல் பீலி சூட்டிநார்அரி

சிறுகலத்து உகுப்பவும் கொள்வன் கொல்லொ-

கோடு உயர் பிறங்குமலை கெழீஇய

நாடு உடன் கொடுப்புவும் கொள்ளா தோனே.”

புறம்-232

விளக்கம்:-காலை மாலை என்னும் இரண்டு வேளைகளும் இனி எனக்கு இல்லாது ஒழியட்டும்என் வாழ்நாள் முழுவதும்இருண்டுபோகட்டும்ஊரார் இவன் நடுகல்லுக்கு மயில்பீலி சாத்தி அழகுபடுத்துகின்றனர்கள்ளை ஊற்றிப் படையல்செய்கின்றனர்இவற்றை இவன் பெற்றுக்கொள்வானாஅவன் வாழும் காலத்தில் நாட்டுமக்களுக்கு தான் வாழும்நாட்டையே அவர்களுக்கு கொடுத்தவன்அதனால் இதனை அவன் பெற்றுக்கொள்ள மறுத்துவிட்டார்


  • புலிமான்கோம்பை என்ற ஊரில் (தேனி மாவட்டம்கி.மு. 3-4ஆம் நூற்றாண்டை சேர்ந்த ‘தமிழி’ எழுத்துடன்கூடிய நடுகல் கிடைத்துள்ளதுஇந்தியாவில் கிடைத்த நடுகற்களில் மிகப் பழைமையாதும் இதுதான்.
  • கோப்பெருஞ்சோழன்” வடக்கிருந்து உயிர் துறந்து நடுகல் ஆன செய்தியை ‘பொத்தியார்’ என்ற புலவர்பாடுகிறார். (புறம் - 227)
  • நடுகல்லை மக்கள் நீராட்டி நெய்விளக்கேற்றி பலியிட்டதையும் புறநானூற்றில் கூறிகிறது (புறம் - 329)
  • திருப்புறம்பிய நடுகற்கள்கிபி 880. ‘வரகுணபாண்டியன்’ சோழ நாட்டின் மீது படையெடுத்து மண்ணி பகுதியைகைப்பற்றினான்ஆதித்த சோழன்பல்லவன் மற்றும் கங்க அரசர்களின் உதவியுடன் “திருப்புறம்பியத்தில்” மீண்டும் பாண்டியருடன் போர் நடந்ததுபாண்டியன் vs சோழபல்லவகங்க கூட்டுப்படைகளும்இதில் மரணம்அடைந்த பல்லவன் சிற்றரசர் ‘கச்சியாண்டவர்’ , கங்க மன்னன் ‘பிருதிவிபதி’ ஆகியோருக்கு திருப்புறம்பயத்தில்நடுகல்” எழுப்பப்பட்டது.


பண்டை தமிழ் சமூகம் மூத்தோர் வழிபாடுதாய் தெய்வ வழிபாடுநடுகல் வழிபாடுஎன்றே இருந்திருக்கிறதுசங்கஇலக்கிய சான்றுகளும் அதையே சுட்டுகின்றனஅதன் பின் வளர்ச்சியாக “கந்து வழிபாடு” தோன்றி இருக்க வேண்டும்அதை ‘தமிழ் சமயம்’ என்று கொள்ளலாமே அன்றி இந்து வழிபாடு என்று கூற முடியாதுவடவர் தெய்வங்களானசுப்பிரமணியர்ருத்ரன் போன்ற வழிபாடுகள் இங்கு ஏற்கனவே இருந்த ‘முருகு மற்றும் கந்து’ வழிபாட்டுடன்இணைந்துகொண்டன

உதாரணமாகசோமாஸ்கந்தர் = சக உமா ஸ்கந்தர்” என்பது சோமாஸ்கந்தர் என்று ஆகியதுசைவம் (சிவன்), சாக்தம் (உமை), கௌமாரம் (கந்தன்ஆகியவற்றின் பிரதானத் சமயங்களின் இருந்து உருவாக்கப்பட்டஉருவாமைப்பு

கி.பி 7 மற்றும் கி.பி 8 ஆம் நூற்றாண்டுகளில் சோமாசுகந்தர் உருவம் வழிபாட்டு தமிழகத்துக்கு வந்தது.


பிற்கால வேந்தர்கள்பிராமணர்களுக்கு இலவசமாக விளைநிலங்கள் / பல ஊர்கள் வழங்கிதமிழகத்தில்  சதுர்வேதிமங்கலங்கள்” உருவாக்கினர்

மேலும்இரண்டாம் ‘நந்திவர்மன்’ மற்றும் ‘கம்பவர்மன்’ பல்லவன் காலத்தில் “வீரதாக்க காணம்” என்று வரி “நடுகல்” வைத்த குடும்மத்திற்கு விதிக்கப்பட்டதுவேந்தர்களும்பிராமணர்களும் வைதிக சமயத்தை தமிழகம் எங்கும்பரப்பினர்மக்களின் வரிப்பணத்தில் பல ஆலயங்கள் ஏழுப்பினர்இந்த வைதிக ஆலயங்களுக்கு பல கொடைகளும்வழங்கினர்


பேய்ச்சல் தோழிலில் பெண்களுக்கு பெரிய பங்கில்லைஎனவே பெண்களுக்கு ஒரு நடுகல் கூட எழுப்பப்படவில்லைஆனால்பெண்களால்தான் ‘புன்செய்’ வேளாண்மை கண்டறிந்து பரவியதுஆண் ஆதிக்க சமூகமாக மாறுவதற்குமுன்னர் பெண்களே வளமையின் குறியிடாகவும் தெய்வமாகவும் வணங்கப்பட்டதுபெண் தெய்வங்களின் வழிபாட்டுவரிசையில் பழமையான ‘ஏழு கன்னியர்களின்’ வழிபாடு குறிப்பிடத்தக்கதுஆதிச்சநல்லூரில் கிடைத்த தாழியின் மேல்வரையப்பட்ட ‘கொற்றவை’ ஓவியம் வளமைக்கான அடையாளமாக காட்டப்படுகிறது




மறங்கடைக் கூட்டிய குடிநிலை சிறந்த
கொற்றவை நிலையும் அத்திணைப் புறனே

       - (தொல்பொருள் 62)

கொற்றவை பண்டைய சமுதாயத்தில் ஒரு தனித் தெய்வமாய் இருந்துள்ளது என்பதற்கு இத்தொல்காப்பியத்துறைப்பகுப்பே சிறந்த சான்று


மாற்றாருடன் போருக்குச் செல்லும் வீரர்கள் வெற்றி வேண்டி வணங்கிச் செல்லும் நிலையே ‘கொற்றவை நிலை’ என்பதாகும்குறிஞ்சி நிலத்தெய்வமாக கொற்றவையை ‘சேயேனின்’ தாயாக கருதப்பட்டாள்வேட்டுவ சமூகம் ‘தாய்வழியில்’ இருந்து ‘தந்தை வழி’ சமூகமாக மாறிய பின்னர் சேயேன் முதன்மை படுத்தப்பட்டான்கொற்றவைஇப்பொழுது பழையோள் ஆனாள். ‘இழையிணி சிறப்பின் பழையோள் குழவி’ என்று திருமுருகாற்றுப்படைகொற்றவையை முருகனின் தாயாகக் குறிப்பிடுகிறது.





விழுப்புரம்” மாவட்டத்தில் ‘குஞ்சரம்’, ‘மாதிரிமங்கலம்’ ஆகிய ஊர்களின் ஏரிக்கரைகளிலும்பெருவழிசாலையிலும், “கொற்றவை” சிற்பம் வைக்கப்பட்டுள்ளதுஇந்த சிற்பம் கி.பி 7 ஆம் நூற்றாண்டை சேர்ந்தது.


மேலும் பல விவரங்கள் மிக்க தெளிவாக ஆசிரியர் இந்நூலில் எடுத்துரைக்கிறார்

No comments:

Post a Comment