சராசரியாக 150 ஆண்டுகளுக்கு முன்பு தஞ்சை பெரிய கோவிலைக் கட்டியது யார் என்று கேட்டால் அப்பொழுது வாழ்ந்த மக்கள் சொல்கின்ற பதில் என்னவென்றால் “இக்கோவிலைக் கட்டியது ‘காடுவெட்டி சோழன்’ என்ற மன்னன். அவன் காட்டை அழித்து இங்குள்ள கோவிலைக் கட்டினான் என்று தான் சொல்வார்கள். எவரும் ராஜராஜன் என்ற மன்னன்தான் கட்டினான் என்பதையே அரியாமல் இருந்தனர். எவருக்கும் அக்கோவில் உள்ள கல்வெட்டை படித்ததும் இல்லை. புராணங்கள் என்ற பெயரில் வைதிக மதம் விடும் கட்டுக் கதைளை மட்டும் நம்பி இருந்தனர்.
இக்கோயில் ராஜராஜ சோழனால் கட்டப்பட்டது என்ற உண்மையை “ஹல்ட்ஸ்” Eugen Julius Theodor Hultzsch என்ற ஜெர்மன் தொல்பொருள் ஆராய்ச்சியாளர் கண்டுபிடித்து வெளிச்சத்திற்கு கொண்டு வந்தார். கல்வெட்டுகள் தமிழில் இருப்பதை கண்டுபிடித்தார். அவர் அதை 19 ஆம் நூற்றாண்டின் இறுதியில் செய்தார். அவர்தான், தஞ்சை பெருவுடையார் கோவிலை பற்றி பல நாட்கள் ஆராய்ச்சி செய்து இந்த மாபெரும் அதிசயத்தை, தமிழர்களின் இந்த வரலாற்று சின்னத்தை கட்டியது ஒரு தமிழன் என்றும், அவர்தான் ராஜராஜ சோழன் என்று இந்த உலகிற்கு கூறினார்.
தென்னிந்தியக் கல்வெட்டியல் தொகுதியை முதலில் வெளியிட்டவரும் இவரே.
கி.பி 2ஆம் நூற்றாண்டு மாங்குளம் தமிழ் பிராமி, மாமல்லபுரம் கல்வெட்டுக்கள் , பராந்தக சோழன் முதலாம் உத்திரமேரூர் கல்வெட்டுகள் (கிபி 907_955), தஞ்சாவூரில் உள்ள பெரிய கோயிலில் உள்ள கல்வெட்டுகளை ‘ஹல்ட்ஸும்’ அவரது உதவியாளரான ‘வெங்கய்யாவும்’ கண்டுபிடித்தனர்.