குறுந்தொகை-136
குறிஞ்சி
'காமம் காமம்' என்ப; காமம்
அணங்கும் பிணியும் அன்றே; நுணங்கிக்
கடுத்தலும் தணிதலும் இன்றே; யானை
குளகு மென்று ஆள் மதம் போலப்
பாணியும் உடைத்து, அது காணுநர்ப் பெறின
- மிளைப்பெருங் கந்தனார்.
காமம் காமம் என்ப - காமம் காமம் என்று உலகினர் அதனைக் குறை கூறுவர்;
காமம் - அக்காமமானது;
அணங்கும் - புதியதாகத் தோற்றும் வருத்தமும்;
பிணியும் அன்று - நோயும் அன்று;
நுணங்கி - நுண்ணிதாகி;
கடுத்தலும் - மிகுதலும்;
தணிதலும் - குறைதலும்;
இன்று - இலது;
யானை---, குளகு மென்று ஆள் மதம் போல - தழை உணவை மென்று தின்று அதனாற் கொண்ட மதத்தைப் போல;
அது காணுநர் பெறின் - கண்டு மகிழ்வாரைப் பெற்றால்;
பாணியும் உடைத்து - அக்காமம் வெளிப்படும் செவ்வியையும் உடையது.
கருத்து-
இகாமம் இயல்பாகவே ஒருவரிடம் இருந்து உரிய காலத்தில் வெளிப்படுவது.
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
No comments:
Post a Comment