தமிழி எழுத்துக்கள் உள்ள பானை ஓடுகள் தமிழகத்திற்கு வெளியே கிடைத்த இடங்கள்

தமிழி எழுத்துக்கள் உள்ள பானை ஓடுகள் தமிழகத்திற்கு வெளியே கிடைத்த இடங்கள்:- 



  • ஓமனில் கிடைத்த தமிழி ஓடு:- ஓமன் நாட்டில் “கோர் ரோரி” என்னுமிடத்தில் கிடைந்த தமிழி பொறித்த ஓடுபண்டைய கடல் வணிகத்தின் சிறப்பைக் காட்டுகிறதுஇத்தாலிய தொல்லியலாளர்களால் 2006ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டதுசங்க காலத்தில் பயிலப்படும் ‘அந்தை’, ‘கொற்றந்தை’, ‘கீரன்’ என்னும் மெயர் சொற்கள் இவ்வோட்டில் உள்ளது.

ந்தைகீன்


என்ற பெயர் பொறிக்கப்பட்டுள்ளது.


இவை தமிழ் பண்பாடு வரலாற்றில் பெரும் முக்கியத்துவம் வாய்ந்தவை


  • எகிப்தில் “கரீர் அல் கடீம்-Quseir-al-Qadim” என்ற இடத்தில் உடைந்த சாடி ஒன்று தமிழ்ப் பிராமி எழுத்துக்களுடன் கண்டுபிடிக்கப்பட்டதுஅதில் "பானை உரி” என்று எழுதப்பட்டிருந்ததுநாழி என்பது ஒருபடியையும்உரி என்பது அரைப்படியையும் குறிக்கும்எனவே அது அரைப்படி அளக்கும் பானை என்று தெரிகிறதுஇதே இடத்தில் இதற்கு முன்னரும் தமிழ்ப் பிராமி எழுத்துக்கள் கண்டுபிடிக்கப்பட்டன


  • தமிழ்ப் பிராமி எழுத்துக்கள் தாய்லாந்தில் கண்டுபிடிக்கப்பட்டன



https://www.thehindu.com/features/friday-review/history-and-culture/Indus-like-inscription-on-South-Indian-pottery-from-Thailand/article16364751.ece/amp/


               🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏



சேரமான் கணைக்கால் இரும்பொறை

 சேரமான் கணைக்கால் இரும்பொறை





சேரமான் கணைக்கால் இரும்பொறை சேர அரச மரபைச் சேர்ந்தவன்இவன் சோழன் செங்கணான் என்ற மன்னனோடு போரிட்டு அவரால் பிடிக்கப்பட்டுச் சிறையில் இருந்தவன்சிறையில் அடைப்பட்டிருக்கையில் மன்னன் சேரமான் கணைக்கால் இரும்பொறை தன் தாகத்திற்கு தண்ணீர் கொடுக்குமாறு காவலாளிகளிடம் கேட்கும்பொழுது காவலாளிகள் அம்மன்னன் மனம் புண்படும்படி இழிவுபடுத்தி ஒரு மன்னன் என்று கூட பாராமல் மரியாதையின்றி நடந்து கொண்டார்கள்தாகத்துக்கு தண்ணீர் காலந்தாழ்த்திக் கொடுத்ததால் மன்னன் மிகவும் மனம் வருந்திதந்த நீரைக்குடியாது வடக்கு திசை நோக்கி அமர்ந்து ஒரு செய்யுளை எழுதி விட்டு உயிர் நீத்தான்.


சேரமான் கணைக்கால் இரும்பொறை மனம் நொந்தி எழுதிய செய்யுள் புறநானூற்றின் 74வது பாடலாக உள்ளது.

குழவி இறப்பினும் ஊன்தடி பிறப்பினும்

ஆள் அன்று என்று வாளில் தப்பார்

தொடர்படு ஞமலியின் இடர்ப்படுத்து இரீஇய

கேள் அல் கேளிர் வேளாண் இடர்ப்படுத்து சிறுபதம்

மதுகை இன்றி வயிற்றுத் தீ தணியத்

தாம் இரந்து உண்ணும் அளவை

ஈன்மரோ இவ் உலகத்தானே?”

 

பொருள்:

பிள்ளை இறந்து பிறந்தாலும்உருவமின்றித் தசைப் பிண்டமாகப் பிறந்தாலும் அவற்றை ஆள் அல்ல என்று பழந்தமிழர் கருதமாட்டார்கள்மாறாக அவற்றையும் வாளால் கீறி வடுப்படுத்தியே அடக்கம் செய்தனர்ஏனென்றால் ஆணும் போர்க்களத்தில் விழுப்புண் பட்டே இறக்க வேண்டும் என்பது அவர்தம் ஆசையாக இருந்ததுதமிழர் மரபு இவ்வாறு இருக்கஒரு அரசன் போரில் அழியாது புண்பட்டு உயிர்பிழைத்தால்வெற்றி பெற்றவன் தோல்வியுற்றவனைசங்கிலியால் பிணிக்கப்பட்ட நாய் போல துன்புறுத்துவான்அத்தகைய மனிதம் இல்லாத பகைவர்வயிற்றில் தீ போல இருக்கும் தாகத்துக்கு தண்ணீர் கேட்டால் உடனே தந்துவிடுவார்களா? காலம் தாழ்த்தி அவர்கள் தரும் தண்ணீரைக்குடித்து இந்த உயிரைக் காப்பாற்றிக் கொள்வதை விட உயிர் விடுவது எவ்வளவோ மேல்.


                                                🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏


களவழி நாற்பது என்றால் களத்தைப் பற்றிப்பாடிய நாற்பது என்று பொருள்இதில் நாற்பது வெண்பாக்கள் தாம் இருக்க வேண்டும்ஆனால் இந்நூலில் 41 வெண்பாக்கள் இருக்கின்றனஎப்படியோ ஒரு வெண்பா வந்து சேர்ந்துவிட்டதுவெண்பாவிலே நாலு அடிகளுக்கு மேல் வருமாயின் அதைப் பஃறொடை வெண்பா என்பர்இந்நூலில் பஃறொடை வெண்பாக்களும் இருக்கின்றனபஃறொடை-பல்தொடைபல அடிகள் தொடர்ந்திருப்பவை.


களவழிப் பாடல்களிலே இரண்டு வகையுண்டு

  1. உழவர்கள் நெற்கதிரை அறுத்துக் களத்திலே கொண்டுவந்து சேர்த்துஅடித்துநெல்லைக் குவிக்கும் ஏர்க்களத்தைப் பாடுவது ஒன்று
  2. நால்வகைப் படைகளையும் கொண்டு போர் செய்யும் போர்க்களத்தைப் பாடுவது மற்றொன்று


ஏர்க்களம்போர்க்களம் இந்த இரண்டைப் பற்றியும் பாடும் பாடல்களுக்கும் களவழிப் பாடல்கள் என்று பெயர்.

பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்றாகிய இந்தக் களவழி நாற்பது போர்க்களத்தைக் குறித்துப் பாடப்பட்டது.


                                                🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏



சிந்துவெளிப் பண்பாட்டின் திராவிட அடித்தளம்

 சிந்துவெளிப் பண்பாட்டின் திராவிட அடித்தளம்




ஆர்பாலகிருஷ்ணன் தமிழ் இலக்கிய மாணவர்கடந்த 30 ஆண்டுகளாகஇடப்பெயர் ஆய்வுகளைச் செய்துவருபவர்.1984ம் ஆண்டு இந்திய ஆட்சிப் பணித் தேர்வை முதன்முதலாக முழுவதுமாக தமிழில் எழுதி முதல் முயற்சியிலேயே வெற்றி பெற்றவர்ஹரப்பாவிலும்மொகஞ்சதாரோவிலும் வாழ்ந்தவர்கள் தமிழ் தொல்குடிகளே என்று அவருடைய ஆய்வு “சிந்துவெளிப் பண்பாட்டின் திராவிட அடித்தளம்” என்ற நூலாக வெளியிடப்பட்டுள்ளது


மக்களை மையத்தில் வைக்காத வரலாறுமன்னர்கள் பிறந்த கதைவளர்த்த கதைஇறந்த கதைதான் மட்டும்தான் பேசும்மன்னர்கள் கட்டிய கோவில்களை சுற்றி சுற்றி வந்து பெருமை பேசும்அரண்மனைகளையும்அந்தப்புரத்தையும் மட்டுமே துருவிதுருவி ஆராய்ந்து களிப்படையும் அல்லது களைப்படையும்சாதி மத வெறியை தூண்டும் வரலாற்றை (திரித்து கூறிமுன்னிலை படுத்தும்.


நாம் ஆராய்வதோ அல்லது மீட்டேடுக்கவேண்டியது மன்னனின் கதையையோ அல்லது அவன் கட்டிய கோவிலையோ அல்லஅதைவிட முக்கியமாய்மொழியை முச்சில் ஏந்தி முன் நடந்துபண்பாட்டுத் தொடர்ச்சியை காலத்தை வென்று நிற்கும் மனிதர்களின் வரலாற்றை

தமிழ் மொழியை ஒரு மாவட்ட மொழியாய்ஒரு மாநில மொழியாய் சுருக்கிவிடாமல்ஓர் உயர் நாகரிகத்தின் மொழியாய் உயர்த்தி பிடிக்கும் பக்குவம் மிக்க வரலாற்று ஆய்வாளர்கள் வேண்டும்.


திராவிடக் குடும்பத்தின் மூத்த மொழி ‘தமிழ்’. திராவிடம் என்ற சொல்லே ‘தமிழ்-திரமிளம்-திராவிடம்’ எனத் திரிந்து உருவானதுதான்


தமிழர்களின் தோற்றம் குறித்து உலக அளவில் நான்கு விதமான கொள்கைகள் உண்டு.

  1. கனகசபை பிள்ளை முன்வைத்த மங்கோலிய கொள்கை. (இவர் ஆங்கிலத்தில் எழுதிய The Tamils 1800 Years Ago என்னும் நூல் புகழ் பெற்றது.)
  2. எமன்டர்ப் என்ற அறிஞருடைய இரும்புகால கொள்கை (கிறித்தோபர் வான் பியூரர் ஐமண்டார்ப் - Christoph von Fürer-Haimendorf)
  3. கில்பர்ட் ஸ்லடெர் (GilbertSlater), மொழிஞாயிறு தேவநேயப்பாவாணரும் முன்வைத்த ‘லெமூரியா’ கொள்கை
  4. அறிவியல் ஆராய்ச்சிகளால் உருவான ‘சிந்துசமவெளிக் கொள்கை


ஹரப்பா நாகரிகம் பின்வருமாறு பிடிக்கப்பட்டுள்ளது

தொடக்க ஹரப்பா - கிமு 3300 - 2600

முதிர்ந்த ஹரப்பா - கிமு 2600 - 1900

பிந்தைய ஹரப்பா - கிமு 1900-1700


கிமு 1900 இருந்து சிந்துவெளி நாகரீகம் வீழ்ச்சி பெறத் துவங்கியதுஹரப்பாவின் கோட்டைகள் பல அழிக்கப்பட்டது குறித்த ‘ரிக் வேதம்’ குறிப்பிடுகிறது (அரியூப்பியா (Hariyupiyaஎன ரிக் வேதத்தில் குறிப்பிடும் இடமான ஹரப்பா(Harappa)). ஆப்கானிஸ்தான் நாட்டில் திராவிட மொழிகளில் ஒன்றான ‘பிராகியி’ மொழி பேசும் மக்கள் இன்றைக்கும் வாழ்ந்து வருகின்றனர்அங்கும் செஞ்சிஆலூர் போன்ற பெயர்கள் இன்னும் ஊர்கள் உள்ளன.


சிந்துவெளி விட்ட இடமும் சங்க இலக்கியம் தொட்ட இடமும் வேறு வேறல்ல என்பது இந்த ஆய்வு நூல் அடிக்கோடிடும் புதுவெளிச்சங்கள்

திராவிடர்கள் அடிப்படையில் மலைவாழ் மக்கள் என்றழைக்கிறார் கமில் சுவலபில் KamilZvelebil. திராவிடர்கள் சற்றேறக்குறைய கிமு 4000 வாக்கில் வடகிழக்கு ஈரானிலுள்ள கரடுமுரடான மலைப்பகுதிகளில் வாழ்ந்தார்கள் என்றும்சிந்துவெளிப் பண்பாட்டின் கட்டமைப்பில் திராவிடர்கள் என்று மதிப்பிடுகிறார் Kamil Zvelebil (தமிழர்களின் முழுமுதற்கடவுளான முருகன்மலையும் மலைசார்ந்த நிலமான குறிஞ்சி நிலக் கடவுள்). 

சிந்துவெளி மக்கள் புலம் பெயர்ந்துபோது தங்களின் ஊர்பெயர்களையும் மீள்நினைவாக எடுத்துச் சென்று தங்களின் புதிய தாயகங்களில் மீண்டும் பயன்படுத்தியிருக்க வேண்டும்

யூதர்கள் தாங்கள் புலம் பெயர்ந்து சென்ற இடங்களுக்கெல்லாம் தங்களது முந்தைய ஊர்ப்பெயர்களைக் கொண்டுசென்றதையும் பாரசீகத்திலிருந்து இந்தியாவிற்கு இடம் பெயர்ந்து வந்த பார்சி மக்கள் ஈரான் நாட்டு இடப்பெயர்களை கொண்டுவந்ததையும் ஐரோப்பாவிலிருந்து அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்தவர்கள் ஐரோப்பிய இடப்பெயர்களை அமெரிக்காவில் பயன்படுத்தியதையும் இங்கே நினைவுகூரலாம்

தமிழ்நாட்டு இடம்பெயர்களுக்கும் சிந்துவெளி உள்ள இடங்களின் இடப்பெயர்களும் இடையே வியப்பூட்டும் ஒற்றுமை காணப்படுகிறது என்று இந்த நூல் சான்றுடன் நிரூபிக்கிறது




இடப்பெயர்கள் சாகா வரம் பெற்றவை அவை நினைவுக்கு எட்டாத பழைய காலங்களின் மொழியியல் தொல் எச்சங்கள்(fossilised representation of the immemorial past). தமிழ் கூறும் நல்லுலகில் உள்ள ஊர் பெயர்களான ஆமூர்ஆரணிகஞ்சூர்கள்ளூர்காலூர்கொற்கைமைலம்மானூர்நாகல்நள்ளிபாசூர்தள்ளிதொண்டிஊரல்கண்டிகைஆலூர்ஆசூர்படூர்செஞ்சிமதிரைவஞ்சி போன்ற இடப்பெயர்கள் தற்போதைய பாகிஸ்தான்ஆப்கனிஸ்தான் பகுதிகளில் உள்ளது. (இது முழும்பட்டியல் அல்ல) .மேல்-கீழ்” என்ற கருதுகோள் எவ்வாறு திராவிட பாரம்பரியத்தில்அதிலும் குறிப்பாகத் தமிழ் நிலப்பரப்பில் தமிழ் மக்களிடையே பண்பாட்டு ஆய்வுகளில் முக்கியத்துவம் பெறுகின்றது என்பதை நூலில் ஆசிரியர் அளித்திருக்கும் பல உதாரணங்களைப் பார்க்கும்போது ஒப்பிட்டு அறிந்துகொள்ள முடிகின்றதுஇடப்பெயர்மேல்-மேற்கு கீழ்-கிழக்குகோழிச்சண்டை மரபு என பண்பாட்டுத் தொடர்ச்சிகளை மையப்படுத்தி சிந்துவெளிப் பண்பாட்டின் திராவிடப் பண்பாட்டைக் கட்டமைக்க இந்த நூல் மேற்கொண்டிருக்கும் முயற்சி ஆய்வுலகில் முக்கியத்துவம் பெறுகிறது.


சிந்துவெளி நாகரிகத்தின் சிறப்பம்சம் திட்டமிடப்பட்ட நகர அமைப்பு ஆகும்எனவே இது ஒரு நகர நாகரிகம் ஆகும்சங்க இலக்கியங்களான ‘மதுரைக்காஞ்சி’,‘பட்டினப்பாலை’ ஓர் உன்னதமான நகர நாகரிகம் சித்தரிக்கப்படுகிறதுசங்க இலக்கிய காலம் என்பது சங்கப் பாடல்கள் தொகுக்கப்பட்ட காலம்தான்அதிலுள்ள மீள் நினைவுகளின் தொன்மையை ஆய்வுலகம் உரிய அக்கறையோடு மதிக்கப்படவில்லை. “கொற்கைவஞ்சிதொண்டி” (KVT Complexஎன்ற கருதுகோளுக்கு கீழடி வலுச்சேர்ப்பதும்வைகைக்கரைப் பண்பாடு என்ற நகர நாகரிகத்திற்கும்சிந்துவெளி என்ற நகர நாகரிகத்திற்கும் வேர்நிலைத் தொடர்பை மதிப்பிட இடப்பெயர் ஆய்வு உதவுகிறது


சிந்துச் சமவெளி நாகரிகத்தில் வசித்தவர்களிடம் “ஸ்டெப்பி புல்வெளி” மற்றும் பண்டைய ஈரானிய வேளாண்குடிகளின் மரபணு இல்லைபழங்கால தென்னிந்திய வேட்டைச் சமூகம் மற்றும் பழங்கால விவசாயத்திற்கு முந்தைய (புதியகற்காலஈரானிய சமூகம் ஆகிய கலப்பின மரபணுவைக் கொண்டிருப்பதை இவ்விரு ஆய்வு முடிவுகளும் தெரிவிக்கின்றன. “இந்தியாவின் நாகரிகம் வேத நாகரிகமே” என நிறுவ முயலும் இந்துத்துவ கும்பலுக்குதற்போது வெளியாகியுள்ள சிந்து சமவெளி மக்களின் மரபணு சோதனைகள் செவிட்டிலறைந்தாற் போல் பதிலளிக்கின்றனகுறிப்பாக சிந்து சமவெளி நாகரீகம் வேத நாகரீகம் அல்ல என்பது தொல்லியல் ஆய்வறிஞர்களின் கருத்து.


                        🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏