தமிழி எழுத்துக்கள் உள்ள பானை ஓடுகள் தமிழகத்திற்கு வெளியே கிடைத்த இடங்கள்:-
- ஓமனில் கிடைத்த தமிழி ஓடு:- ஓமன் நாட்டில் “கோர் ரோரி” என்னுமிடத்தில் கிடைந்த தமிழி பொறித்த ஓடுபண்டைய கடல் வணிகத்தின் சிறப்பைக் காட்டுகிறது. இத்தாலிய தொல்லியலாளர்களால் 2006ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது. சங்க காலத்தில் பயிலப்படும் ‘அந்தை’, ‘கொற்றந்தை’, ‘கீரன்’ என்னும் மெயர் சொற்கள் இவ்வோட்டில் உள்ளது.
“ண—ந்—தை—கீ—ர—ன்”
என்ற பெயர் பொறிக்கப்பட்டுள்ளது.
இவை தமிழ் பண்பாடு வரலாற்றில் பெரும் முக்கியத்துவம் வாய்ந்தவை.
- எகிப்தில் “கரீர் அல் கடீம்-Quseir-al-Qadim” என்ற இடத்தில் உடைந்த சாடி ஒன்று தமிழ்ப் பிராமி எழுத்துக்களுடன் கண்டுபிடிக்கப்பட்டது. அதில் "பானை உரி” என்று எழுதப்பட்டிருந்தது. நாழி என்பது ஒருபடியையும், உரி என்பது அரைப்படியையும் குறிக்கும். எனவே அது அரைப்படி அளக்கும் பானை என்று தெரிகிறது. இதே இடத்தில் இதற்கு முன்னரும் தமிழ்ப் பிராமி எழுத்துக்கள் கண்டுபிடிக்கப்பட்டன
- தமிழ்ப் பிராமி எழுத்துக்கள் தாய்லாந்தில் கண்டுபிடிக்கப்பட்டன
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
No comments:
Post a Comment