கமில் சுவெலபில் (Kamil Zvelebil)

கமில் சுவெலபில - Kamil Zvelebil



அயல்நாட்டில் பிறந்துதமிழுக்கும் திராவிட இயலுக்கும் தொண்டாற்றிய சிறந்த அறிஞர்களில் ஒருவர் பேராசிரியர்முனைவர் கமில் வாக்லேவ் சுவெலபில்.


ஐரோப்பிய நாடான செக்கோலோவாகியாவின் ப்ரேக் என்னும் நகரில், 1927 நவம்பரில் 17ல் பிறந்தார்கமில்சுவெலபில்தந்தை கமில் சுவெலபில்தாயார் மரியம்மா ஆவார்ப்ரேக் (Prague) நகரில் உள்ள சார்லஸ் பல்கலைக்கழகத்தில் (Charles_University)1946 முதல் 1952 வரை ஆறு ஆண்டுகள் பயின்றார்.  இந்திய இயல்,  ஆங்கில மொழிஇலக்கியம் மற்றும் தத்துவம் ஆகியவற்றில் முதுகலைப் பட்டம் பெற்றார்.  மேலும்சமஸ்கிருதம்ஆங்கிலம்தத்துவம் ஆகியவற்றில் ஆய்வு செய்துமுனைவர் (Ph.D.) பட்டத்தை 1952ல்  தமது இருபத்தைந்தாவது வயதில்பெற்றார்.


தமிழகத்திற்கு வருகை புரிந்து தமிழ்மொழியையும்தமிழ் இலக்கியத்தையும் கமில் சுவெலபில் நன்கு கற்றார்.  தெ.பொ.மீனாட்சி சுந்தரனார்மு.வரதராசனார் முதலிய தமிழறிஞர்களிடம் பயின்றார்.  திராவிட மொழி அறிவியலை ஆய்ந்து, 1959-ஆம் ஆண்டு இரண்டாவது முனைவர் பட்டத்தைப் பெற்றார்


திராவிட மொழிகளின் ஆய்வுக்கு அடித்தளம் அமைத்தவர்கள் பிரான்சிசு எல்லிசுகால்டுவெல் முதலிய அறிஞர்கள்.  அவர்களையடுத்து திராவிட மொழி ஆய்வுகளை முன்னெடுத்துச் சென்ற அயல்நாட்டவர்கள் மர்ரே பிரான்சன் எமனோதாமஸ் பர்ரோ (Thomas_Burrow) முதலியோர்.  ஏமனோவிடம் பயிலும் வாய்ப்பை கமில் சுவெலபில் பெற்றார்.  தமது முன்னோர்களை அடியொற்றிதிராவிடமொழி இயலை மேம்படுத்தினார்.  அத்துடன் தமிழ் இலக்கியம்மரபுபண்பாடு ஆகியவற்றையும் நன்கு கற்றறிந்தார்.  தமது எழுத்தின் மூலம் ஆய்வுகளை உலகம் அறிந்திடச் செய்தார்.  நூல்கள்கட்டுரைகள்திறனாய்வுகள்சிறந்த மொழிபெயர்ப்புகள் ஆகியன அவரது எழுத்துக்களில் அடங்கும்.


👉 ‘தமிழ் இலக்கியப் பேரகராதி’ (Lexicon of Tamil Literature)

👉திராவிட மொழிகள் ஓர் அறிமுகம்’ (Dravidian Linguistics: An Introduction)

👉 ‘தமிழ் இலக்கிய வரலாற்றுக்குத் துணையான ஆய்வுகள்’ (Companion Studies to the History of Tamil Literature)

👉 ‘தமிழ் செம்மொழி யாப்பிலக்கணம்’(Classical Tamil prosody)

👉 ‘நீலமலை இருளர்கள்’(The Irulas of the Blue mountains)

👉 ’தென்னிந்தியத் தமிழ் இலக்கியத்தில் முருகனின் புன்னகை’(The Smile of Murugan: on Tamil Literature of South India)

👉 ‘திராவிட மொழி ஒலிப்பியல் ஒப்பீடு’ (Comparative Dravidian Phonology)

👉 ‘சித்தர்கள் தேடிய இறவாமை’ (Siddha Quest for Immortalits)

👉 ‘சிந்து நாகரிகத்தின் காலம்

👉 எழுத்துமுறை (Indus Age:  The writing system)

👉 ‘தமிழ் இலக்கிய வரலாறு’(History of Tamil Literature)

👉 ‘திருமுருகன்’ (Thirumurugan)

👉 ‘தமிழ் இலக்கியம்’ (Tamil Literature)

👉 ‘தமிழ் மொழியின் இலக்கண வரலாறு ஓர் அறிமுகம்’ (Introduction to the Historical Grammer of the Tamil Language)

👉 ‘எமது வாழ்க்கைக் கதை’ (The Story of my life), ‘தொல்காப்பியம் - சொல்லதிகாரம்

👉 ‘தமிழிலக்கிய அறிமுகம்’  (Introducing Tamil Literature) முதலிய இருபத்தைந்துக்கும் மேலான ஆய்வு நூல்களைபடைத்தளித்துள்ளார்.


செக்கோஸ்லோவாகியாவில் உள்ள கீழையியல் துறையில் (Oreintal Institute of the Czechoslovak Academy of Sciences) தமிழ் திராவிட மொழியியல் பிரிவில் ஆய்வாளராகப் பணிபுரிந்தார்.  கிரேக்கம்இலத்தீன்ஜெர்மன்ஆங்கிலம்ருசியன்சமஸ்கிருதம்தமிழ் முதலிய மொழிகளைக் கற்றுத் தேர்ந்தார்.  மேலும்மலையாளம்இந்திபிரெஞ்சுஇத்தாலிபோலந்து மொழிகளையும் அறிவார்.


தமிழ்க் கடவுள்  எனக் கருதப்படும் ‘ முருகன் ‘ குறித்து  இவர் எழுதியுள்ள  ஆங்கில  நூலில் முருகக் கடவுள் குறித்த  பல செய்திகளை ஆய்வுக்கு  உட்படுத்தியுள்ளார்.


திராவிட  மொழியியல்,  சங்க  இலக்கியம்  பற்றி  விரிவாக  ஆங்கிலத்தில்  பல நூல்களை  எழுதியுள்ளார்.   தமிழ் வழக்குச் சொற்கள் பற்றியும்  எழுதியுள்ளார்ஐம்பது  ஆண்டுகளுக்கும் மேலாகதிராவிட  மொழியியலை  ஆராய்ந்து,  “ மனித  இன வரலாற்றில்  திராவிடப் பண்பாடு  மிகத்   தொன்மையான   ஒன்று “  என்பதை  நிறுவியுள்ளார்.   மேலும் "உலக  நாகரிகத்தின்  உயர்ந்த , அழியாத  கருவூலங்களில் ஒன்றாகத் தமிழர்களின் பண்பாடு  திகழ்கிறது  என்பதில்  அய்யமில்லை “ என அவர்  குறிப்பிட்டுள்ளார்.


தமிழ் மொழி இலக்கியத்தையும்,  தமிழரின்  நாகரிகத்தையும்  இந்தியாவின்  பிற மாநில்  மக்களும்,  உலகில் உள்ளபிற மக்களும்அறிந்து  கொள்ள இவரது ஆங்கில ஆய்வ நூல்கள்  பெருமளவு  உதவியிருக்கின்றன.


கமில் சுவெலபில்நீலமலை  மக்களின்  மொழியியல்,  திராவிடர்களின்  வேளாண்மைப் பரவல்,  தென்னிந்தியப் பண்பாடு மற்றும்  சமய  வரலாறுஇந்து மதம் , சமஸ்கிருதச் கடங்கு  நூல்கள்  முதலியவற்றைப் பற்றியும்  பல ஆய்வுக்கட்டுரைகளையும்,  நூல்களையும்  அளித்துள்ளார்.


சுவெலபில்  எண்பதற்கு  எதையும்  சிறப்பாகச் செய்பவர்சரியாகச் செய்பவர்அழகாகக் செய்பவர் ‘  என்பது பொருளாகும் . சைவசித்தாந்த  நூற்பதிப்புக் கழக ஆட்சியர் .சுப்பையா பிள்ளை 'நிரம்ப அழகியர்' என்னும்  பெயரைக் கமில்  சுவெலபிலுக்குத் தமிழில்  சூட்டினார்.


தமிழின் இனிமைதமிழரின் உயர்மரபு  ஆகியவற்றை  எண்ணித்  தம்மை  ‘செவ்வியன்’  எனவும்  அழைத்துக்கொண்டவர் கமில்  சுவெலபில்.


செக்கோஸ்லோவாகியா நாட்டில்  பிறந்து  தமிழுக்குச் சிறந்து  தொண்டாற்றிய  மொழியியல்  வல்லுநரானகவும் , தமிழ்,  தமிழர்  பற்றியும்  பிறமொழியினருக்கு அறிமுகம்  செய்து   வைத்தவருமான  கமில் சுவெலபில் பெயர்  திராவிட இயல்  வரலாற்றில் என்றும் நிலைத்து  நிற்கும் !


https://www.keetru.com/index.php/2018-01-12-05-57-50/2014-03-08-04-39-26/2014-03-14-11-17-87/30242-2016-02-15-04-32-11

வரலாற்றில் சீயமங்கலம்

புத்தகம்:- வரலாற்றில் சீயமங்கலம்

வெளியீடு:- திருவண்ணாமலை மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவம்

எழுத்தாக்கம்:-சபாலமுருகன்






சீயமங்கலம் குடைவரைக் கோவில் பல்லவ மன்னன் முதலாம் மகேந்திரவர்மன் (590-630 AD) அமைத்த குடைவரைகளில் ஒன்று. (சீயம் என்றால் சிங்கத்தைக் குறிக்கும்மகேந்திரவர்மன் தான் அமைத்த இந்த குடைவரைக்கு ‘அவனிபாஜனபல்லவவேசுவரம்’ என்று பெயரிட்டார்பிறகு சோழகாலத்தில் ‘தூணாண்டார் கோவில்’ என்று பெயர் பெற்றதுதற்காலம் வரை அவ்வாறே அழைக்கப்படுகிறதுகோவிலை ஒட்டியுள்ள ஏரியின் நடுவில் தூண்போன்ற ‘குத்துக்கல்’(Menhir) அமைப்பு உள்ளதுஇதுவே இவ்வூரின் இறைவனது பெயராக இருக்கலாம் என்று ஆய்வாளர்கள் கருதுகிறார்கள்


சீயமங்கலம் சிறப்புகள்:-


👉 வரலாற்றுக்கு முந்தைய காலம்தொட்டே மக்கள் இங்கு வாழ்ந்து வருகின்றனர்பல கல்வட்டங்களும்கல்பதுக்கைகள்குத்துக்கல்பாறை கீறல்கள்பாறை ஓவியங்கள்தமிழி கல்வெட்டுகள்பானை ஓடுகள் ஆகியவை இப்பகுதியில் அருகில் கிடைக்கிறது

👉 சிறுபாணாற்றுப்படையின் பாட்டுடைத்தலைவன் ‘நல்லியக்கோடன்’  இப்பகுதியை ஆட்சி செய்திருக்கிறார்நல்லியக்கோடன் கடையெழு வள்ளல்களுக்குப் பின்னர் வாழ்ந்த வள்ளல்களில் ஒருவன். ‘ஓய்மான் நாட்டு’ அரசன்இந்நாடே ‘அருவாநாடு’, ‘அருவாவடதலை’ நாடு ஆகியவற்றை அடக்கியிருந்ததாக கருதுகின்றனர்

👉 தமிழகத்தில் முதல் ‘ஆடலரசன்’(நடராஜன்சிற்பம் அமைந்த இடம்.

👉 இக்கோவிலின் திருச்சுற்று மண்டபத்தை ‘திருநிலை அழகி’ என்னும் தேவரடியாரால் கட்டப்பட்டது என்று கல்வெட்டு தெரிவிக்கிறது

👉 கோவிலிலிருந்து சற்று தொலைவில் சமணக் குன்று உள்ளது. 24ஆம் தீர்த்தங்கரரான மகாவீரர் (599-522 BC), 23ஆம் தீர்த்தங்கரரான பார்சுவநாதர் (872_772BC) பாகுபலி புடைப்பு சிற்பங்கள் உள்ளனதீர்த்தங்கர்களை தமிழில் 'அருகன்என்பர்சமணர் குன்றில் இருக்கும் கல்வெட்டு கங்கமன்னன் இரண்டாம் ராஜமல்லனை குறிக்கிறது. (815 AD)

👉 இங்குள்ள பார்சுவநாதரின் புடைப்பு சிற்பம் விளக்கும் செய்தியாதெனில்ஒரு புறம் நல்வினையும் மறுபுறம் தீவினையும் நிகழ்கின்றன ஆனால் அவரோ அதை கடந்தவராக நடுவில் நிலை கொண்டுள்ளார்.

👉 சீயமங்கலம் கோவில் மற்றும் சமணக் குன்றில் மொத்தம் 35 கல்வெட்டுக்கள் உள்ளனஇக்கல்வெட்டில்மகேந்திரவர்மன் மற்றும் சமணக்குன்று கல்வெட்டுக்கள் கிரந்தத்தில் உள்ளதுஏனைய கல்வெட்டுக்கள் தமிழில் உள்ளதுஇக்கல்வெட்டுக்கள் 7ஆம் நூற்றாண்டு முதல் 17ஆம் நூற்றாண்டுவரை இப்பகுதியை ஆண்ட அரசர்களை குறிக்கிறது.

👉 சமணக் குன்றில் இருக்கும் கல்வெட்டு ‘திராவிட சங்கம் மற்றும் நந்தி சங்கத்தை’ பற்றி தவல்களைக் குறிக்கிறது.

👉 வரலாற்றுக் காலம் தொட்டே கல்வெட்டுகளில் இவ்வூர்ப் பெயர் சீயமங்களம் என்றே வருகிறது 

👉 சோழன் குலோத்துங்கன் கல்வெட்டு (1136AD):- கல்வெட்டு இருக்குமிடம்கோவிலின் கிழக்கு சுவர்கல்வெட்டு வாசகம்சம்புபுரம் ஊரில் வாழ்ந்த பள்ளி இனத்தைச் சார்ந்த செல்வன் என்பவன் வேட்டைக்குச் சென்ற போது விட்டஅம்பு தவறுதலாகப் பட்டு சீயமங்கலம் ஊரைச் சார்ந்த அதே இனத்தைச் சார்ந்த வேணாட்டரையன் என்பான் இறந்துவிட்டான்நாட்டார் மற்றும் சம்புவராயர் உட்பட ஊர் சபையினர் கூடி இந்நிகழ்வு தவறுதலாக நடந்துவிட்டதால் அதற்காக செல்வன் என்பவன் இறக்க வேண்டாம் என்று தீர்மானித்து தண்டனையாக தூணாண்டார் கோவிலில் ‘அரை விளக்கு’ வைப்பதற்கு 16 பசுக்கள் கொடுக்க ஆணையிட்டுள்ளனர்

👉 சோழன் குலோத்துங்கன் கல்வெட்டு (1198AD):- கல்வெட்டு இருக்குமிடம்கோவிலின் தெற்கு சுவர்கல்வெட்டு வாசகம்பேராவூர் ஊரைச் சார்ந்த நட்டுவன் வாசல்விண்கரையன் எழுவன் என்பவன் வேட்டைக்குப் போன இடத்தில் இவன் விட்ட அம்பு காடன் என்பவனின் மகன் வீரன் மீது பட்டு இறந்துவிட்டான்நாட்டார் சபை கூடித் தவறுதலாக நடந்து விட்டதால் தண்டனையாக எழுவன் தூணாண்டார் கோவில் ‘அரை விளக்கு’ எரிக்கத் தேவையான செலவிற்கு இக்கோவில் பிராமணனிடம் 15 பணம் கொடுக்க உத்தரவிட்டுள்ளனர்.



                       🙏🙏🙏🙏🙏🙏🙏🙏


அர்த்தசாஸ்திரம் (உலகின் முதல் பொருளாதார நூல்)

புத்தகம்:- அர்த்தசாஸ்திரம் (உலகின் முதல் பொருளாதார நூல்)

ஆசிரியர்:- தாமஸ் ஆர். டிரவுட்மன் (Thomas Trautmann)

தமிழில்:- எஸ். கிருஷ்ணன்




அரசியல் பொருளாதாரம் பற்றிய உலகின் முதல் ஆவணம் என்று அர்த்தசாஸ்திரம் அறியப்படுகிறது. அர்த்தசாஸ்திரம் என்பது செல்வத்தைப் பற்றிய அறிவு.  ஓர் அரசன் தனது நாட்டை எப்படி நிர்வகிக்க வேண்டும், குடிமக்களை எப்படி நடத்த வேண்டும், வரிகள் எப்படி விதிக்கப்பட வேண்டும், தானியங்கள் எப்படிப் பங்கிடப்பட வேண்டும், ராணுவ நடவடிக்கைகளை எப்படி மேற்கொள்ள வேண்டும் உள்ளிட்ட பல அம்சங்களை ஆராய்கிறது. அர்த்தசாஸ்திரத்தை இயற்றிய ஆசிரியர் என்று கௌடில்யர், சாணக்கியர், விஷ்ணுகுப்தர் ஆகியவர்களின் பெயர்கள் குறிப்பிடப்படுகின்றன.


படைப்பின் பெயர் சமஸ்கிருத வார்த்தைகளான அர்த்த ("நோக்கம்"/"இலக்கு") மற்றும் சாஸ்திரம் ("ஒப்பந்தம்"/“புத்தகம்") ஆகியவற்றிலிருந்து வந்தது


அர்த்தசாஸ்திரம், “பொருள்முதல்வாதம்” பார்வைக்கு ஆதரவாகப் பல குறிப்புகள் உள்ளன. இயற்கைக்கு அப்பாற்பட்ட கூறுகளை நிராகரித்த ‘உலகாயதம்’ (Charvaka) வின் தத்துவப் பள்ளியின் நடைமுறைத்தன்மை தெரிவிக்கப்பட்டுள்ளது. கௌடில்யரின் அர்த்தசாஸ்திரத்தில் வரும் முதல் சூத்திரத்தில் இந்த நூல் இதற்கு முன்னிருந்த பொருளாதார நூல்களில் இருந்து உருவாக்கப்பட்டவை என்று கூறுகிறது.


     “இந்த ஒன்றுபட்ட அர்த்தசாஸ்திரம், பெரும்பாலும் இதற்கு முன்னிருந்த ஆசிரியர்கள் எழுதிய நிலத்தைக் கைப்பற்றுதல், காப்பது தொடர்பாக எழுதிய பொருளியல் நூலில் இருந்து முடிந்தவரைத் தொகுத்து உருவாக்கப்பட்டது” (1.1.1)


அர்த்தசாஸ்திரத்தின் சிறப்புத்தன்மையே அது அரசரின் ஆளுமைக்குப்பட்ட பகுதிகளில் மதங்களின் பொருட்டோ அல்லது இனங்களின் பொருட்டோ எந்தவித முக்கியத்துவமும் அளிக்கவில்லை என்பதுதான்.


அர்த்தசாஸ்திரத்தின் மூன்றாம் அத்தியாயத்தில் கூறியது போல..

  “ஒருவரின் சொந்த கடமையை கடைப்பிடிப்பது ஒருவரை ஸ்வர்க்கத்திற்கும் எல்லையற்ற பேரின்பத்திற்கும் (அனந்தியா) இட்டுச் செல்கிறது. அதை மீறினால், சாதிகள் மற்றும் கடமைகளின் குழப்பத்தால் உலகம் அழிந்துவிடும்


மேலும், புனிதமான இடங்கள், புனிதமில்லாத இடங்கள் என்று எதையும் பிரிக்கவில்லை. 

மேலும், மது விற்பனை பற்றி அர்த்தசாஸ்திரத்தில் எந்த மன உறுத்தலோ காட்டவில்லை. மதுவகை நாட்டுக்கு நிலையான வருமானம் ஈட்டித்தந்ததால் அதற்கு அனுமதியளித்தலையே அர்த்தசாஸ்திரம் பரிந்துரைக்கிறது. மது, கசாப்புக்கடை, விலைமாதர்கள், சூதாட்டம் போன்றவற்றிலும் அர்த்தசாஸ்திரம் அதே கருத்தைத்தான் கொண்டிருக்கிறது.


சாணக்கிய நீதிக்கும், மனுவின் ‘மனுநீதி’ நூலுக்கும் பல வேறுபாடுகள் உண்டு. மனுவின் நீதியில் சில பொருளியல் அம்சங்கள் உள்ளன ஆனால் அரசாட்சி மதம் சார்ந்த விதமாக மனுநீதி நூல் இயற்றப்பட்டது. சாணக்கியனின் நீதி இதற்கு முன் பிரபலமாக இருந்த ‘பொருள்முதல்வாத்தை’ மையமாகக் கொண்டது என்று கருத வாய்ப்புண்டு


                     🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏