அர்த்தசாஸ்திரம் (உலகின் முதல் பொருளாதார நூல்)

புத்தகம்:- அர்த்தசாஸ்திரம் (உலகின் முதல் பொருளாதார நூல்)

ஆசிரியர்:- தாமஸ் ஆர். டிரவுட்மன் (Thomas Trautmann)

தமிழில்:- எஸ். கிருஷ்ணன்




அரசியல் பொருளாதாரம் பற்றிய உலகின் முதல் ஆவணம் என்று அர்த்தசாஸ்திரம் அறியப்படுகிறது. அர்த்தசாஸ்திரம் என்பது செல்வத்தைப் பற்றிய அறிவு.  ஓர் அரசன் தனது நாட்டை எப்படி நிர்வகிக்க வேண்டும், குடிமக்களை எப்படி நடத்த வேண்டும், வரிகள் எப்படி விதிக்கப்பட வேண்டும், தானியங்கள் எப்படிப் பங்கிடப்பட வேண்டும், ராணுவ நடவடிக்கைகளை எப்படி மேற்கொள்ள வேண்டும் உள்ளிட்ட பல அம்சங்களை ஆராய்கிறது. அர்த்தசாஸ்திரத்தை இயற்றிய ஆசிரியர் என்று கௌடில்யர், சாணக்கியர், விஷ்ணுகுப்தர் ஆகியவர்களின் பெயர்கள் குறிப்பிடப்படுகின்றன.


படைப்பின் பெயர் சமஸ்கிருத வார்த்தைகளான அர்த்த ("நோக்கம்"/"இலக்கு") மற்றும் சாஸ்திரம் ("ஒப்பந்தம்"/“புத்தகம்") ஆகியவற்றிலிருந்து வந்தது


அர்த்தசாஸ்திரம், “பொருள்முதல்வாதம்” பார்வைக்கு ஆதரவாகப் பல குறிப்புகள் உள்ளன. இயற்கைக்கு அப்பாற்பட்ட கூறுகளை நிராகரித்த ‘உலகாயதம்’ (Charvaka) வின் தத்துவப் பள்ளியின் நடைமுறைத்தன்மை தெரிவிக்கப்பட்டுள்ளது. கௌடில்யரின் அர்த்தசாஸ்திரத்தில் வரும் முதல் சூத்திரத்தில் இந்த நூல் இதற்கு முன்னிருந்த பொருளாதார நூல்களில் இருந்து உருவாக்கப்பட்டவை என்று கூறுகிறது.


     “இந்த ஒன்றுபட்ட அர்த்தசாஸ்திரம், பெரும்பாலும் இதற்கு முன்னிருந்த ஆசிரியர்கள் எழுதிய நிலத்தைக் கைப்பற்றுதல், காப்பது தொடர்பாக எழுதிய பொருளியல் நூலில் இருந்து முடிந்தவரைத் தொகுத்து உருவாக்கப்பட்டது” (1.1.1)


அர்த்தசாஸ்திரத்தின் சிறப்புத்தன்மையே அது அரசரின் ஆளுமைக்குப்பட்ட பகுதிகளில் மதங்களின் பொருட்டோ அல்லது இனங்களின் பொருட்டோ எந்தவித முக்கியத்துவமும் அளிக்கவில்லை என்பதுதான்.


அர்த்தசாஸ்திரத்தின் மூன்றாம் அத்தியாயத்தில் கூறியது போல..

  “ஒருவரின் சொந்த கடமையை கடைப்பிடிப்பது ஒருவரை ஸ்வர்க்கத்திற்கும் எல்லையற்ற பேரின்பத்திற்கும் (அனந்தியா) இட்டுச் செல்கிறது. அதை மீறினால், சாதிகள் மற்றும் கடமைகளின் குழப்பத்தால் உலகம் அழிந்துவிடும்


மேலும், புனிதமான இடங்கள், புனிதமில்லாத இடங்கள் என்று எதையும் பிரிக்கவில்லை. 

மேலும், மது விற்பனை பற்றி அர்த்தசாஸ்திரத்தில் எந்த மன உறுத்தலோ காட்டவில்லை. மதுவகை நாட்டுக்கு நிலையான வருமானம் ஈட்டித்தந்ததால் அதற்கு அனுமதியளித்தலையே அர்த்தசாஸ்திரம் பரிந்துரைக்கிறது. மது, கசாப்புக்கடை, விலைமாதர்கள், சூதாட்டம் போன்றவற்றிலும் அர்த்தசாஸ்திரம் அதே கருத்தைத்தான் கொண்டிருக்கிறது.


சாணக்கிய நீதிக்கும், மனுவின் ‘மனுநீதி’ நூலுக்கும் பல வேறுபாடுகள் உண்டு. மனுவின் நீதியில் சில பொருளியல் அம்சங்கள் உள்ளன ஆனால் அரசாட்சி மதம் சார்ந்த விதமாக மனுநீதி நூல் இயற்றப்பட்டது. சாணக்கியனின் நீதி இதற்கு முன் பிரபலமாக இருந்த ‘பொருள்முதல்வாத்தை’ மையமாகக் கொண்டது என்று கருத வாய்ப்புண்டு


                     🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏


கில்காமெஷ்- உலகத்தின் ஆதிகாவியம் (Epic of Gilgamesh)

புத்தகம்: கில்காமெஷ்- உலகத்தின் ஆதிகாவியம்

(Epic of Gilgamesh)


உலகத்தின் மிகப் பழமையான முழு இலக்கிய நூல் என்று இந்தக் கில்காமெஷ் கதையைச் சொல்ல வேண்டும்.


கில்காமேஷின் கதை 12 களி மண்தகடுகளில் அக்காடியன் மொழி எழுதப்பட்டிருந்ததுமண்தகடுகளில் ஏற்படும்  இடைவெளிகள் மெசபடோமியா மற்றும் அனடோலியாவில் வேறு இடங்களில் காணப்படும் பல்வேறு துண்டுகளால்  நிரப்பப்பட்டுள்ளன.


 கிமு 2,500 அளவில் இது பெரிய குனிஃபார்ம் (திரிகோண வடிவஎழுத்துக்களில் பொறிக்கப்பட்டுபல இடங்களில் தோண்டி எடுக்கப்பட்ட கற்களிலிருந்து பல நிபுணர்கள் சேர்ந்து சேர்ந்துத் தந்த கதை.

                       🙏🙏🙏🙏🙏🙏🙏🙏


தஞ்சை கோவில் கட்டிய யார் என்று கண்டுபிடித்தவர்??!!



 சராசரியாக 150 ஆண்டுகளுக்கு முன்பு தஞ்சை பெரிய கோவிலைக் கட்டியது யார் என்று கேட்டால் அப்பொழுது வாழ்ந்த மக்கள் சொல்கின்ற பதில் என்னவென்றால் “இக்கோவிலைக் கட்டியது ‘காடுவெட்டி சோழன்’ என்ற மன்னன்அவன் காட்டை அழித்து இங்குள்ள கோவிலைக் கட்டினான் என்று தான் சொல்வார்கள்எவரும் ராஜராஜன் என்ற மன்னன்தான் கட்டினான் என்பதையே அரியாமல் இருந்தனர்எவருக்கும் அக்கோவில் உள்ள கல்வெட்டை படித்ததும் இல்லைபுராணங்கள் என்ற பெயரில் வைதிக மதம் விடும் கட்டுக் கதைளை மட்டும் நம்பி இருந்தனர்.


இக்கோயில் ராஜராஜ சோழனால் கட்டப்பட்டது என்ற உண்மையை “ஹல்ட்ஸ்Eugen Julius Theodor Hultzsch என்ற ஜெர்மன் தொல்பொருள் ஆராய்ச்சியாளர் கண்டுபிடித்து வெளிச்சத்திற்கு கொண்டு வந்தார்கல்வெட்டுகள் தமிழில் இருப்பதை கண்டுபிடித்தார்அவர் அதை 19 ஆம் நூற்றாண்டின் இறுதியில் செய்தார்அவர்தான்தஞ்சை பெருவுடையார் கோவிலை பற்றி பல நாட்கள் ஆராய்ச்சி செய்து இந்த மாபெரும் அதிசயத்தைதமிழர்களின் இந்த வரலாற்று சின்னத்தை கட்டியது ஒரு தமிழன் என்றும்அவர்தான் ராஜராஜ சோழன் என்று இந்த உலகிற்கு கூறினார்.

தென்னிந்தியக் கல்வெட்டியல் தொகுதியை முதலில் வெளியிட்டவரும் இவரே.


கி.பி 2ஆம் நூற்றாண்டு மாங்குளம் தமிழ் பிராமிமாமல்லபுரம் கல்வெட்டுக்கள் , பராந்தக சோழன் முதலாம் உத்திரமேரூர் கல்வெட்டுகள் (கிபி 907_955), தஞ்சாவூரில் உள்ள பெரிய கோயிலில் உள்ள கல்வெட்டுகளை ‘ஹல்ட்ஸும்’ அவரது உதவியாளரான ‘வெங்கய்யாவும்’ கண்டுபிடித்தனர்


https://www.sahapedia.org/interview-tn-ramachandran