ஸ்வீடனில் உள்ள டானுமில் (Tanum) வரலாற்றுக்கு முந்தைய பாறை ஓவியங்கள்

ஸ்வீடனில் உள்ள டானுமில் (Tanum) வரலாற்றுக்கு முந்தைய பாறை ஓவியங்கள்


ஸ்வீடனின் போஹுஸ்லான் பகுதியில் டானும் (Tanum) அருகே உள்ள வெண்கல கால (Bronze Age) பாறை ஓவியங்கள் உள்ளது. இது யுனெஸ்கோவின் உலக கலாச்சார பாரம்பரியம் ஆகும். 







டானும் உள்ள பாறை ஓவியங்கள் பெரும்பாலும் வெண்கலக் காலத்திலும் இரும்புக் காலத்தின் ஆரம்ப காலத்திலும் செய்யப்பட்டவை - இவ்வாறு கிமு 1700 மற்றும் கிமு 200 க்கு இடையில். 


படகுகள் மற்றும் ஆயுதங்களின் வெவ்வேறு மாதிரிகள், அதே போல் விலங்குகளின் தோற்றம் ஆகியவை படைப்புகளை தேதியிட உதவுகின்றன. 


'டானம் பாறை ஓவியங்கள்'600 க்கும் மேற்பட்ட பாறைகளில் 1000 படங்களை பிரதிநிதித்துவப்படுத்துகிறது. இது 25 கிமீ நீளத்தில் வெவ்வேறு பகுதிகளில் குவிந்துள்ளது.






சுமார் 4,000 கி.மு. தெற்கு ஸ்காண்டிநேவியாவில் ஒரு புதிய கலாச்சார காலம் எழுந்தது - புதிய கற்காலம் என்று அழைக்கப்படுகிறது. இந்த காலகட்டத்தில்தான் மத்திய கிழக்கிலிருந்து ஸ்காண்டிநேவியப் பகுதிக்கு விவசாயம்முதன்முதலில் வரத் தொடங்கியது.


                       🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

சம்புகன் கதை என்ன ?

சம்புகன் கதை என்ன?



இராமன் இலங்கைப்போர் முடித்து மகுடாபிஷேகம் செய்து கொண்டு அரசாட்சி புரிந்து வந்தார்.

அரசவையில் மந்திரிகளோடு அவர் ஆலோசனை செய்து கொண்டிருந்த வேளையில் அரண்மனை வாயிலில் ஒரு ஏழை பிராமணர் தன் கையில் ஒரு பாலகனின் உடலை ஏந்தியபடி கண்ணீருடன் நிற்கிறார் என அறிந்து அவரை உள்ளே அழைக்கிறார் ராமன்.

வயது முதிர்ந்த அந்த ஏழைப் பிராமணரைப் பார்த்து நீர் யார்?என்ன நடந்தது ? என்று இராமன் கேட்க அந்த பிராமணர் கூறினார் .
"ஸ்ரீ ராமா இதோ இந்த பாலகன் என் மகன் வீட்டின் வெளியில் விளையாடிக் கொண்டிருந்தவன் திடுக்கென விழுந்து இறந்து விட்டான் .
ஒரு பிராமணக் குழந்தை இவ்வாறு சாகிறதென்றால் அந்த தேசத்தின் ஆட்சியில் தர்மம் அழியுமாறு ஏதோ நடக்கிறது என்று அர்த்தம் .
எனவே என் மகனுடைய மரணத்திற்கு நீயே பொறுப்பு " என்று கூறி தன் மகனின் சடலத்தை அரசவையில் ராமன் முன் கிடத்தினார் அந்த பிராமணர்.

மனம் கலங்கிப் போன ராமன் என் ஆட்சியில் தர்மம் அழிகிறதா அப்படி என்ன நடந்தது என்று தேவலோக ஞானிகளையும் அழைத்து கேட்கிறார்.
அந்த ஆலோசனை சபைக்கு வந்திருந்த திரிலோக சஞ்சாரியான நாரதர் கூறினார்.

" ராமா உன் ஆட்சியில் நீ தர்மத்தை நல்லபடி காத்து வருகிறாயு .அப்படி இருந்தும் இந்த பிராமணப் பிள்ளையின் அகால மரணம் ஏற்பட்டுள்ளது என்றால் சனாதன தர்மத்தை மீறி ஏதோ செயல் நடந்திருக்கலாம் ".
மேலும் இராமன் விளக்கம் கேட்க நாரதர் கூறினார் .
" சூத்திரர்கள் யாரேனும் வேதம் தவம் இவற்றில் ஈடுபட்டிருக்கலாம் . சூத்திரர்கள் கற்பதும் தவம் செய்வதும் கலியுகத்தில்தான் நடக்கும் .. இந்த யுகத்தில் நடக்காது . அவ்வாறு நடந்தால் அது தர்மத்திற்கு எதிரானது .அதைத் தேடி தடுத்து நிறுத்தினால் இந்த பிராமணப் பிள்ளை பிழைக்கும் "என்றார் நாரதர்.

உடனே தன் வில் அம்பு வாள் சகிதம் புறப்பட்ட இராமன் தான் திரும்பி வரும்வரை அந்த சிறுவனின் சடலம் கெட்டு விடாமல் மருந்துத் தைலங்களை பெரிய பாத்திரத்தில் நிறைத்து அதில் அந்த உடலைப் பாதுகாத்து வரும்படி ஆணையிட்டான் .

கோபத்துடன் தன் புஷ்பக விமானத்தில் ஏறி பல திசைகளையும் பார்த்துக் கொண்டு வந்த இராமன் சரயு நதிக் கரையில் வியக்கத்தக்க தேஜஸுடன் ஒருவர் தலைகீழாக நின்று உக்ர தவம் செய்து கொண்டிருப்பதைக் கண்டு விமானத்தை இறக்கி அவர்.அருகில் சென்று

" தவசிரேஷ்டரே நீர் யார்? எதற்காக இந்த தவம் செய்கிறீர்கள் ?" என்று கேட்க
தவநிலையில் இருந்தபடியே அந்த தவசி சொல்கிறார் .

"என் பெயர் சம்புகன் . நான் சொர்க்கத்திற்கு செல்வதற்காக இந்த உக்கிர தவம் புரிகிறேன் ." நீங்கள் யார் ?
என்று கேட்கிறார் சம்புகன் .

நான் ஸ்ரீ ராமச்சந்திரன் . இத்தவம் செய்யும் செய்யும் நீர் எந்த வர்ணத்தைச் சேர்ந்தவர் ? பிரா மணரா அல்லது ஷத்திரியரா ? வைசியரா இல்லை சூத்திரரா சொல்லுங்கள் என்று கேட்க ,

சம்புகன் கூறினார் ஸ்ரீ ராமச்சந்திர பிரபு நான் உம்மைக் கண்டது என் பேறு .
நான் " சூத்திர யோனியில் பிறந்தவன் "
என்றார் சம்புகன்.

அதைக்கேட்டவுடன் ஒரு நொடியும் தாமதிக்காது ராமன்

" அப்படியானால் நான் என் கடமையைச் செய்ய வேண்டும்”

என்று கூறியபடி தன் பளபளக்கும் வாளை உருவி சம்புகனின் தலையை சீவினான் .

சம்புகனின் தலை வேறு உடல் வேறாக விழுந்த உடன் வானுலகில் இருநது தேவர்கள் மகிழ்ந்து பூமாரி பெய்தனர் .

அதே நேரத்தில் தைலக் கொப்பறையில் வைக்கப்பட்டிருந்த பிராமண சிறுவனின் சடலம் உயிர் பெற்று அச்சிறுவன் எழுந்தோடி வந்தான் .
அவனைக் கண்ட அந்த பிராமணர் மகிழ்ந்து இராமனை வாழ்த்தினார் .

இவ்வாறாக ஸ்ரீ இராமர் தனது ஆட்சியில் தர்மத்தை நிலை நாட்டினார்.

இதுவே சம்புகன் கதை .!!

#தோழர்_அருள்மொழி ❤️❤️

களப்பிரர் ஆட்சியில் தமிழகம் - மயிலை சீனி. வேங்கடசாமி

"களப்பிரர் ஆட்சியில் தமிழகம் " 
- மயிலை சீனி. வேங்கடசாமி 




களப்பிரரின் இருண்டகாலம் இந்நூலினால் ‘விடியற்காலம்’ ஆகிறது. கிட்டதட்ட கிபி 250-575 ஆண்டு வரை ஆண்ட களப்பிரர்கள், களப்பரர்கள் , களப்ராக்கள் என்றைழைக்கப்பட்டனர்.  மெல்ல வளர்ந்து தென்னகத்தை கிட்டதட்ட 300 ஆண்டுகள் ஆண்டு வந்துள்ளனர். அவர்கள் தமிழகத்துக்கு அருகில் இருந்த பகுதியில் வசித்த வடுகர் இனத்தவர். எனவே அவர்கள் திராவிட இனத்தவரே. வடுகக் கருநாடராகிய களப்பிரர் தமிழகத்தைக் ஏழத்தாழ கி.பி. 250 - ல் அல்லது அதற்குச் சற்றுப் பின்னர் கைப்பற்றினார்கள். 




களப்பிரர்கள் பற்றிய தகவல்கள் சென்ற நூற்றாண்டில்தான் கிடைத்திருக்கிறது. களப்பிரர்கள் பற்றி நமக்கு அறிய உதவிய செப்பேடுகளில் முதன்மையானவை 

  1. வேள்விக்குடி செப்பேடு (இது கிபி 8 நூற்றாண்டை சேர்ந்த செப்பேடு - வரி 39 -46)
  2. தளவாய்புரச் செப்பேடு (வரி 39-40; 131-132) 
  3. பள்ளன் கோவில் செப்பேடு (சுலோகம் 4,5)
  4. வேலூர்ப்பாளையம் செப்பேடு (சுலோகம் 10)
  5. கூரம் செப்பேடு (வரி 15)
  6. புல்லூர் செப்பேடு மற்றும் பட்டத்தால் மங்கலம் செப்பேடு ( சுலோகம் 9)


(பூலாங்குறிச்சி கல்வெட்டு பற்றி இந்த புத்தகத்தில் கூறவில்லை- என்றால் 1979 ஆம் ஆண்டுதான் பூலங்குறிச்சிகல்வெட்டு தமிழக தொல்லியல் துறையினரால் கண்டறியப்பட்டது.)


களப்பிரர்கள், மூவேந்தர்களுக்கு முன்பே பல்லவ, சளுக்கியர்களுக்கு இணையான, வலுவான நிலையில் இங்கு ஆட்சி புரிந்துள்ளனர். அதாவது, சேர,சோழ,பாண்டியர்கள் குறுநில மன்னர்களாக, களப்பிரர்கள் பெருங்குடையின் கீழ், அவர்களின் ஆட்சிக்குட்பட்டவர்களாக. களப்பிர அரசர் தொண்டை நாட்டைத்தவிர சேர, சோழ, பாண்டிய நாடுகளைவென்று அரசாண்டார்கள் என்பது உறுதியாகத் தெரிகிறது.


6ஆம் நூற்றாண்டு இறுதியில் பல்லவ சிம்மவிஷ்னு களப்பிரரை வென்று சோழ நாட்டைக் கைப்பற்றிக் கொண்டான். மேலும், பாண்டியன் கடுங்கோன் களப்பிரரை வென்று பாண்டி நாட்டை கைப்பற்றிக் கொண்டான்.


இப்படி பற்பல வரலாற்று தகவல்கள், சான்றுகள், 

செப்பேடுகள் கொண்டும், சங்க கால இலக்கியங்களான அகநானூறு , குறுந்தொகை, சிலப்பதிகாரம், சீவகசிந்தாமணி, பதினென் கீழ்க்கணக்கு நூல்கள், பட்டினப்பாலை, பரிபாடல், புறநானூறு, பெரியபுராணம், பெருங்கதை, மணிமேகலை உட்பட 130க்கும் மேலான தரவு நூல்களை கொண்டும் ஆய்ந்து எழுதப்பட்டிருக்கிறதுஇந்நூல்.


சைவ - வைணவம் (இந்து) பண்பாடுகளைச் சாராதவர்களை அந்நியர்களாகவும் எதிரிகளாகவும் கட்டமைக்கும் வரலாற்றுச் சூழலில்; தமிழின் தொன்மையையும், பன்முகத்தன்மையும்; தமிழ் வழியில் சமயத்தை வளர்த்த சமண, பௌத்தம் பற்றிய கருத்துக்களை எடுத்துரைக்கிறார் திரு. மயிலை சீனி. வேங்கடசாமி அவர்கள்.


களப்பிரர் பற்றி இந்த நூல் மேலும் சில தகவல்கள்:-


👉 களவர் வேறு களப்பிரர் வேறு

👉 கருநாட தேசத்தில் இருந்த களப்பிர்ரின் களபப்பு இராச்சியம் மைசூர் நாட்டைச் சேர்ந்த கோலார் வரையிலும் பரவயிருந்தது. கோலார் நந்திமலை கலப்பிரர் மலை என்று கூறப்பட்டது. 

👉 “அச்சுதன்” என்பது களப்பிர அரசர்களின் பொதுப்பெயர் என்று தோன்றுகிறது. பாலி மொழியில் எழுதப்பட்ட ஒரு பௌத்தச் செய்யுள் ஒரு களப்பிர அரசரை அச்சுதன் என்று கூறுகிறது.

👉 கிபி 3 நூற்றாண்டு வரை இருந்த தமிழி என்ற வரி வடிவத்தை வட்டெழுத்தாக மாற்றியர்கள் களப்பிரர்கள். ஏன் இந்த எழுத்தை மாற்றினார்கள் என்றால் தமிழி என்ற எழுத்து கோடுகளை கொண்ட எழுத்து. ஓலை சுவடிகளில் எழுதினால் ஓலை சுவடிகள் கிழிந்து விடும், மேலும் அது நீண்ட காலத்துக்கு நிலைக்காது என்பதால் கோடுகளை கொண்ட எழுத்தை வட்டெழுத்தாத மாற்றினார்.

👉 தமிழில் புதிய பாக்களை உருவாக்கினர். களப்பிரர் தமிழகத்தை கைப்பற்றும் முன் தமிழில் நான்கு பாக்கள் இருந்தன. அவைகள்  01. ஆசிரியப்பா 02.வஞ்சிப்பா 03.வெண்பா 04.கலிப்பா. களப்பிரர்கள் மேலும் புதிய மூன்றுபாவினங்களை உருவாக்கினர்.  அவைகள் 01. தாழிசை 02. துறை பா 03. விருத்தப்பா. பழைய நான்கு பாக்களும் புதிய மூன்று பாக்களும் கலந்து ( 4 x 3 ) புதிதாக பனிரெண்டு வகை செய்யுள்கள் உருவாக்கப்பட்டன.

👉 பல்லவ சிம்மவிஷ்னு களப்பிரரை வென்று சோழ நாட்டைக் கைப்பற்றிக் கொண்டான்.

👉 பாண்டியன் கடுங்கோன் களப்பிரரை வென்று பாண்டி நாட்டை கைப்பற்றிக் கொண்டான். 

👉 தமிழ் நாட்டைக் களப்பிரர் அரசாண்ட காலத்தில் கொடும்பாளூர் வட்டாரத்தை இருக்குவேள் அரசர் அரசாண்டனர். சங்க காலத்தில் இருந்த “இருங்கோவேள்” வேறு “இருக்குவேள்” வேறு. 

👉 களப்பிரர் காலத்தில் சைவ-வைணவ சமயங்கள் மங்கி மறையும் நிலையில் இருந்ததற்குக் காரணம் பௌத்த, சமண சமயங்கள் பிரசாரமே. எ.கா. வச்சிர நந்தி திரமிளா (தமிழ/திராவிடன்) என்ற சங்கத்தை கிபி 470 உருவாக்கினார்

👉 பதினென்கீழ்கணக்கு நூல்களில் 1. திருக்குறள் 2. களவழி நாற்பது 3. முதுமொழிக் காஞ்சி ஆகிய மூன்றுநூல்களும் கிபி 250க்கு முன்பு எழுதப்பட்டவை. நாலடியார் என்னும் நூல் கிபி 7ஆம் நூற்றாண்டு களப்பிரர் ஆட்சிக்குபிறகு எழுதப்பட்டது. 

பிற பதினான்கு நூல்களும் களப்பிரர் ஆட்சி காலத்தில் கிபி 3-6ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்டவை. பெரும்பான்மையானவை ஒழுக்க நெறிகளை போதித்தவை

👉 பக்தி இயக்கம் தேன்றி இறைவனை நினைத்தாலே முக்தி என்று பிரச்சாரம் செய்து சைவ-வைணமும்.  பக்திசெய்தால் பேரின்பமாகிய மோட்சம் (வீடு பேறு) பெறலாம் என்றது. 


களப்பிரர் பற்றி மேலும் பல நூல்கள்:- 

  1. திரு க ப அறவாணன் அவர்கள் எழுதிய “களப்பிர காலம் பொற்காலம்” என்ற நூல். 
  2. பேராசிரியர் ஆ பத்மாவதி அவர்கள் எழுதிய “களப்பிரர் கால மொழி எழுத்து கலை சமயம்” என்ற நூல்

                     🙏🙏🙏🙏🙏🙏🙏