- மயிலை சீனி. வேங்கடசாமி
களப்பிரரின் இருண்டகாலம் இந்நூலினால் ‘விடியற்காலம்’ ஆகிறது. கிட்டதட்ட கிபி 250-575 ஆண்டு வரை ஆண்ட களப்பிரர்கள், களப்பரர்கள் , களப்ராக்கள் என்றைழைக்கப்பட்டனர். மெல்ல வளர்ந்து தென்னகத்தை கிட்டதட்ட 300 ஆண்டுகள் ஆண்டு வந்துள்ளனர். அவர்கள் தமிழகத்துக்கு அருகில் இருந்த பகுதியில் வசித்த வடுகர் இனத்தவர். எனவே அவர்கள் திராவிட இனத்தவரே. வடுகக் கருநாடராகிய களப்பிரர் தமிழகத்தைக் ஏழத்தாழ கி.பி. 250 - ல் அல்லது அதற்குச் சற்றுப் பின்னர் கைப்பற்றினார்கள்.
களப்பிரர்கள் பற்றிய தகவல்கள் சென்ற நூற்றாண்டில்தான் கிடைத்திருக்கிறது. களப்பிரர்கள் பற்றி நமக்கு அறிய உதவிய செப்பேடுகளில் முதன்மையானவை
- வேள்விக்குடி செப்பேடு (இது கிபி 8 நூற்றாண்டை சேர்ந்த செப்பேடு - வரி 39 -46)
- தளவாய்புரச் செப்பேடு (வரி 39-40; 131-132)
- பள்ளன் கோவில் செப்பேடு (சுலோகம் 4,5)
- வேலூர்ப்பாளையம் செப்பேடு (சுலோகம் 10)
- கூரம் செப்பேடு (வரி 15)
- புல்லூர் செப்பேடு மற்றும் பட்டத்தால் மங்கலம் செப்பேடு ( சுலோகம் 9)
(பூலாங்குறிச்சி கல்வெட்டு பற்றி இந்த புத்தகத்தில் கூறவில்லை- என்றால் 1979 ஆம் ஆண்டுதான் பூலங்குறிச்சிகல்வெட்டு தமிழக தொல்லியல் துறையினரால் கண்டறியப்பட்டது.)
களப்பிரர்கள், மூவேந்தர்களுக்கு முன்பே பல்லவ, சளுக்கியர்களுக்கு இணையான, வலுவான நிலையில் இங்கு ஆட்சி புரிந்துள்ளனர். அதாவது, சேர,சோழ,பாண்டியர்கள் குறுநில மன்னர்களாக, களப்பிரர்கள் பெருங்குடையின் கீழ், அவர்களின் ஆட்சிக்குட்பட்டவர்களாக. களப்பிர அரசர் தொண்டை நாட்டைத்தவிர சேர, சோழ, பாண்டிய நாடுகளைவென்று அரசாண்டார்கள் என்பது உறுதியாகத் தெரிகிறது.
6ஆம் நூற்றாண்டு இறுதியில் பல்லவ சிம்மவிஷ்னு களப்பிரரை வென்று சோழ நாட்டைக் கைப்பற்றிக் கொண்டான். மேலும், பாண்டியன் கடுங்கோன் களப்பிரரை வென்று பாண்டி நாட்டை கைப்பற்றிக் கொண்டான்.
இப்படி பற்பல வரலாற்று தகவல்கள், சான்றுகள்,
செப்பேடுகள் கொண்டும், சங்க கால இலக்கியங்களான அகநானூறு , குறுந்தொகை, சிலப்பதிகாரம், சீவகசிந்தாமணி, பதினென் கீழ்க்கணக்கு நூல்கள், பட்டினப்பாலை, பரிபாடல், புறநானூறு, பெரியபுராணம், பெருங்கதை, மணிமேகலை உட்பட 130க்கும் மேலான தரவு நூல்களை கொண்டும் ஆய்ந்து எழுதப்பட்டிருக்கிறதுஇந்நூல்.
சைவ - வைணவம் (இந்து) பண்பாடுகளைச் சாராதவர்களை அந்நியர்களாகவும் எதிரிகளாகவும் கட்டமைக்கும் வரலாற்றுச் சூழலில்; தமிழின் தொன்மையையும், பன்முகத்தன்மையும்; தமிழ் வழியில் சமயத்தை வளர்த்த சமண, பௌத்தம் பற்றிய கருத்துக்களை எடுத்துரைக்கிறார் திரு. மயிலை சீனி. வேங்கடசாமி அவர்கள்.
களப்பிரர் பற்றி இந்த நூல் மேலும் சில தகவல்கள்:-
👉 களவர் வேறு களப்பிரர் வேறு
👉 கருநாட தேசத்தில் இருந்த களப்பிர்ரின் களபப்பு இராச்சியம் மைசூர் நாட்டைச் சேர்ந்த கோலார் வரையிலும் பரவயிருந்தது. கோலார் நந்திமலை கலப்பிரர் மலை என்று கூறப்பட்டது.
👉 “அச்சுதன்” என்பது களப்பிர அரசர்களின் பொதுப்பெயர் என்று தோன்றுகிறது. பாலி மொழியில் எழுதப்பட்ட ஒரு பௌத்தச் செய்யுள் ஒரு களப்பிர அரசரை அச்சுதன் என்று கூறுகிறது.
👉 கிபி 3 நூற்றாண்டு வரை இருந்த தமிழி என்ற வரி வடிவத்தை வட்டெழுத்தாக மாற்றியர்கள் களப்பிரர்கள். ஏன் இந்த எழுத்தை மாற்றினார்கள் என்றால் தமிழி என்ற எழுத்து கோடுகளை கொண்ட எழுத்து. ஓலை சுவடிகளில் எழுதினால் ஓலை சுவடிகள் கிழிந்து விடும், மேலும் அது நீண்ட காலத்துக்கு நிலைக்காது என்பதால் கோடுகளை கொண்ட எழுத்தை வட்டெழுத்தாத மாற்றினார்.
👉 தமிழில் புதிய பாக்களை உருவாக்கினர். களப்பிரர் தமிழகத்தை கைப்பற்றும் முன் தமிழில் நான்கு பாக்கள் இருந்தன. அவைகள் 01. ஆசிரியப்பா 02.வஞ்சிப்பா 03.வெண்பா 04.கலிப்பா. களப்பிரர்கள் மேலும் புதிய மூன்றுபாவினங்களை உருவாக்கினர். அவைகள் 01. தாழிசை 02. துறை பா 03. விருத்தப்பா. பழைய நான்கு பாக்களும் புதிய மூன்று பாக்களும் கலந்து ( 4 x 3 ) புதிதாக பனிரெண்டு வகை செய்யுள்கள் உருவாக்கப்பட்டன.
👉 பல்லவ சிம்மவிஷ்னு களப்பிரரை வென்று சோழ நாட்டைக் கைப்பற்றிக் கொண்டான்.
👉 பாண்டியன் கடுங்கோன் களப்பிரரை வென்று பாண்டி நாட்டை கைப்பற்றிக் கொண்டான்.
👉 தமிழ் நாட்டைக் களப்பிரர் அரசாண்ட காலத்தில் கொடும்பாளூர் வட்டாரத்தை இருக்குவேள் அரசர் அரசாண்டனர். சங்க காலத்தில் இருந்த “இருங்கோவேள்” வேறு “இருக்குவேள்” வேறு.
👉 களப்பிரர் காலத்தில் சைவ-வைணவ சமயங்கள் மங்கி மறையும் நிலையில் இருந்ததற்குக் காரணம் பௌத்த, சமண சமயங்கள் பிரசாரமே. எ.கா. வச்சிர நந்தி திரமிளா (தமிழ/திராவிடன்) என்ற சங்கத்தை கிபி 470 உருவாக்கினார்
👉 பதினென்கீழ்கணக்கு நூல்களில் 1. திருக்குறள் 2. களவழி நாற்பது 3. முதுமொழிக் காஞ்சி ஆகிய மூன்றுநூல்களும் கிபி 250க்கு முன்பு எழுதப்பட்டவை. நாலடியார் என்னும் நூல் கிபி 7ஆம் நூற்றாண்டு களப்பிரர் ஆட்சிக்குபிறகு எழுதப்பட்டது.
பிற பதினான்கு நூல்களும் களப்பிரர் ஆட்சி காலத்தில் கிபி 3-6ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்டவை. பெரும்பான்மையானவை ஒழுக்க நெறிகளை போதித்தவை
👉 பக்தி இயக்கம் தேன்றி இறைவனை நினைத்தாலே முக்தி என்று பிரச்சாரம் செய்து சைவ-வைணமும். பக்திசெய்தால் பேரின்பமாகிய மோட்சம் (வீடு பேறு) பெறலாம் என்றது.
களப்பிரர் பற்றி மேலும் பல நூல்கள்:-
- திரு க ப அறவாணன் அவர்கள் எழுதிய “களப்பிர காலம் பொற்காலம்” என்ற நூல்.
- பேராசிரியர் ஆ பத்மாவதி அவர்கள் எழுதிய “களப்பிரர் கால மொழி எழுத்து கலை சமயம்” என்ற நூல்
🙏🙏🙏🙏🙏🙏🙏
No comments:
Post a Comment