மடலேறுதல்

 மடலேறுதல்

மடலேறுதல் , மடல் என்றால் பனைமரத்தின் ஓலை , மா என்றால் குதிரை , ஏறுதல் என்பது


பனை ஓலையால் குதிரை செய்து அதன் மீது ஏறுதல் என்பதாகும் , இது சங்க காலத்தில் இருந்த வழக்கம் . எப்படி ....?



காதலில் தோல்வியுற்ற சங்ககாலத் தலைவன்ஊரார் தன் காதலை உணரும் பொருட்டு மேனியில் சாம்பலைப் பூசிக்கொண்டு யாரும் சூடாத எருக்கு போன்ற மலர்களைச் சூடிக் கொண்டு பனைமரத்தின் அகன்ற மடல்களால் செய்யப்பட்ட குதிரை ஒன்றில் ஊர்ந்து (சிறுவர்களை இழுக்க செய்வான்காண்போர் கேட்கும் வண்ணம் தலைவியின் பெயரைக் கூவிக்கொண்டு செல்தல் ஆகும்இது இழிவான ஒன்றாக கருதப்படுகிறதுஎனவே தன்னைச் சந்திக்க மறுக்கும் தலைவியிடம் தோழி மூலம் நான் மடலேறி விடுவேன் என்ற காமம் மிகுந்த தலைவன் சொல்வது உண்டுகாமம் மிகுந்த ஆடவர்க்கு மட்டுமே மடலேறுதல் உண்டுபெண்கள் மடலேறியதாய் சங்கப்பாடல்கள் இல்லைஎன்ன நிலை சேர்ந்தாலும் பெண் இந்த வழக்கத்தை மேற்கொள்வது இல்லை.  


திருக்குறளில்:- 

அதிகாரம்நாணுத்துறவு உரைத்தல் 

குறள் எண்:1137

கடலன்ன காமம் உழந்தும் மடல்ஏறாப் 

பெண்ணின் பெருந்தக்கது இல்


சாலமன் பாப்பையா விளக்கம்:

கடல் போலக் கரையில்லாத காதல் நோயை அவளும் அனுபவித்தாலும் மடல் ஊராது பொறுத்திருக்கும் பெண்பிறவியைப் போலப் பெருமையான பிறவி இவ்வுலகத்தில் வேறு இல்லை.


குறள் எண்:1132

நோனா உடம்பும் உயிரும் மடலேறும்
நாணினை நீக்கி நிறுத்து.”


சாலமன் பாப்பையா விளக்கம்:

காதலை நிறைவேற்ற முடியாது வருந்தும் இந்த உடலும் உயிரும் வெட்கத்தை விட்டுவிட்டு மடல் ஏற எண்ணுகின்றன.


குறள் எண்:1133

நாணொடு நல்லாண்மை பண்டுடையேன் இன்றுடையேன்
காமுற்றார் ஏறும் மடல்


சாலமன் பாப்பையா விளக்கம்:

நாணமும் ஆண்மையும் முன்பு பெற்றிருந்தேன்இன்றோ காதலர் ஏறும் மடலைப் பெற்றிருகிறேன்.


                                                   🙏🙏🙏🙏🙏🙏🙏🙏



No comments:

Post a Comment