திருமதி. கோ.சசிகலா அவர்களின் “தாய்வழிச் சமூகம்: வாழ்வும், வழிபாடும்” புத்தத்தில் இருந்து சில குறிப்புகள்.
உலகம் முழுவதும் தாய்வழி சமூகமாக இருந்த பின் வீரயுகத்திலும், உபரி ஊற்பத்தியாலும், பிற சமய/நாகரிக தாக்கத்தினாலும், நிலவுடைமைச் சமூகத்தாலும், அரசு நிறுவனத்தாலும், ‘தந்தைவழி சமூகமாக’ மாற்றம் பெற்றதை இந்நூல் பல உதாரணத்துடன் விளக்கியுள்ளார்
| சிந்துச் சமவெளி முத்திரை - ஏழு பெண்கள் நின்ற நிலை |
| Venus of Hohle Fels -Germany - 35,000 years ago |
சிந்து சமவெளியில் பெண் தெய்வ உருவங்கள் மிகுதியாக கிடைத்துள்ளது. அதைபோல தமிழ் கூறும் நல்லுலகத்தில் தாய்-தெய்வத்தை (கொற்றவை) மக்கள் வணங்கிவந்துள்ளனர். அதாவது சமூகம் ஆண் தலைமைக்கு மாறுவதற்கு முன்பிருந்த நிலை. பின்பு, அக்கொற்றவையின் சிறுவன் தலைமையிடத்தைப் பிடித்துருக்க வேண்டும். “வெற்றி வெல்போர்க் கொற்றவை சிறுவ!” என்று முருகனை முதன்மைப்படுத்தி பாடுகிறது திருமுருகாற்றுப்படை. சிந்து சமவேளிக்கு பிந்தைய காலங்களில், வேதத்தின் தாக்கத்தாலும், அரசு உருவாக்கத்தாலும், ஆண் தெய்வங்களே அதிக அளவில் போற்றுகின்றன. தொல்காப்பிய திணைசார் தலைமை தெய்வங்கள் ஆண் தெய்வங்கையே கூறுகின்றது.
உழவுவேலையில் பெரிதும் பங்கேற்ற பெண்கள், மேய்ச்சல் தொழிலில் பெரிய பங்கில்லை. மாடுபிடிப்பூசலில் இறந்த வீர்ர்களுக்கு எடுக்கப்பட்ட நடுகல்லில் ஒன்று கூட பெண்ணுக்கு எழுப்பப்படவில்லை. இவ்வேளையில் தான் கற்பு கோட்பாடுகள் பெரும் விதியாக கடைபிடிக்கப்பட்டத்து என்று கூறலாம். மேலும் கி. மு 3ஆம் நூற்றாண்டுங்கு பிறகு, தமிழகத்தில் சமண சமயம் பெரும் வரவேற்பை பெற்றறு. ஆனால், சமண சமயத்தில் பெண் பிறப்பு இழிவாகக் கருதப்பட்டது என்பதை, “பெண்பிறவி தாழ்ந்த பிறவி என்பதும், பாவம் செய்தவர் பெண்ணாகப் பிறக்கிறார் என்பதும் சமண சமயக் கொள்கை. பெண்ணாகப் பிறந்தவர், வீடுபேறு (மோட்சம்) அடைய முடியாது என்பதும் சமண மதத் துணிபு ஆகும்.” மற்றும், ஆண் ஆதிக்க மனநிலை கொண்ட வேத/வைதிக மரபினரும் அவ்வாறே இருந்தனர். மெல்ல மெல்ல இந்த சமயங்களை பின்பற்றும் மக்களும் பெண்ணின் உரிமைகளை பறித்துக்கொண்டனர். கி.பி க்கு பிறகு வந்த அத்தனை மதங்களும் பெண்னின் உரிமைகளை கட்டுப்படுத்துவதில் கூறியாக இருந்துள்ளது. கிறிஸ்துவ சமயம்த்திலும் “ஆதாமின் விலா எலும்பில் இருந்து ஏவாள் தோன்றினாள்’ என்று சொல்லியது. மேலும் ஆண் தெய்வங்கள் பெண்களின் உதவியின்றி ஆண் தெய்வங்களைப் பெற்றதான புராணக் கதைகள் குறிப்பிட்ட காலகட்டத்தில் உலகெங்கும் தோன்றின. கிரேக்கத்தின் முழுமுதல் ஆண் கடவுளான ஜீயஸ் தன் தொடையில் இருந்து டயோனிஸஸ் என்ற புதிய ஆண் கடவுளைப் பிரசவித்தார். சிவன் நெற்றிக் கண்ணில் இருந்து கந்தனுக்கு உயிர் கொடுத்தார் – என்பவை பிரபலமான புராணக் கதைகள்.
வழக்கொழிக்கப்பட்ட சில பெண் தெய்வங்கள்: -
தவ்வை: தமிழ்ப் பண்பாட்டின் தனித்தன்மை உடைய பெண் தெய்வம். வேளாண்மை, மகப்பேறு, செல்வம், முதலிய வளமைக்காக வணங்கப்பட்டு வந்தது. காலபோக்கில், லட்சுமியின் தமக்கையாக “மூத்ததேவி” என்று வழிபட்டனர். பின்னர், மூத்ததேவியை மூதேவியாக இந்த வழிபாடு வழக்கொழிக்கப்பட்டது. இப்பொழுது சமஸ்கிரததில் ‘ஜேஷ்டாதேவி’ என்று வழங்கப்படுகிறது.
ஏழு கன்னிமார்கள்: இந்த வழிபாடு மிக பழமையானது. சிந்து சமவேளி நாகரிகத்துடன் தொடர்புடையது. இப்பொழுது கூறப்படும் ஏழு கன்னிமார்களின் கதைகள் பிற்காலத்தில் உருவாக்கப்பட்ட கதைகளே.
சிவன் வழிபாட்டைப் போற்றிய நாயன்மார்கள் காலத்திற்குப் பின், ஏழு கன்னி வழிபாடு பின்னடைவு பெற்றது.
தமிழ் கூறும் நல்லுலகத்தில் சைவ-வைணவ சமயங்களை ஏற்றுக்கொண்டாலும் தாய்-தெய்வ வழிபாட்டு முறையின் எச்சங்கள் இன்றும் நம் வழிபாடுகளில் வெளிப்படுகிறது. சுமார் 5500 ஆண்டுகளுக்கு முன்னர் (கி.மு.3500) துவங்கிய தாய்வழிச் சமூகத்தின் வீழ்ச்சி அடுத்த 2000 ஆண்டுகளில் பெரும்பான்மையான இடங்களில் தந்தைவழிச் சமூகத்தை உருவாக்கியது. பெருங்குடி மக்களும், குருமார்களும், மன்னரும் ஒன்றாக கைகோர்த்து பல கற்பனை கதைகளை இறைநம்பிக்கை என்ற போர்வையில் தொல்குடி மக்களை நம்பவைத்தனர்.
/*முற்றும்*/
மெய் தேடல் முடிவதில்லை…
தமிழ் வாழ்க
No comments:
Post a Comment