உடன்போக்கில் தலைவனும் தலைவியும் போன பின் தலைவியின் தாய் (நற்றாய்) சொன்னது

#படித்ததில் பிடித்தது

தலைவியின் தாய் சொன்னது 

நற்றிணை 66 -  இனிசந்த நாகனார்

பாலைத் திணை

உகாய் மரம்

மிளகு பெய்தனைய சுவைய புன் காய்
உலறுதலை உகாஅய்ச் சிதர் சிதர்ந்து உண்ட
புலம்பு கொள் நெடுஞ்சினை ஏறி, நினைந்து, தன்
பொறி கிளர் எருத்தம் வெறி பட மறுகிப்,
புன் புறா உயவும் வெந்துகள் இயவின்,  5
நயந்த காதலற் புணர்ந்தனள் ஆயினும்,
சிவந்து ஒளி மழுங்கி அமர்த்தன கொல்லோ,
கோதை மயங்கினும் குறுந்தொடி நெகிழினும்,
காழ் பெயல் அல்குல் காசு முறை திரியினும்,
மாண் நலம் கையறக் கலுழும் என்  10
மாயக் குறுமகள் மலர் ஏர் கண்ணே?


My lovely daughter left to be with her lover,
on a hot, dusty path, where a pigeon chases
away bees and eats small, ukā berries that
taste like pepper, feels confused and afraid,
sits on a tall tree branch and shakes its bright,
spotted neck in pain, regretting what it did.

Even though she’s with him,
her waist ornament with strands of gold
coins twisted, her garland losing its shape,
her small bangles slipping down, her great
beauty lost,
will her flower-like, beautiful eyes redden,
loose their luster, cry and become confused?

Notes:  

உடன்போக்கில் தலைவனும் தலைவியும் போன பின் தலைவியின் தாய் (நற்றாய்) சொன்னது. புறா உகாய்க் காயைத் தின்று வருந்தியது போல தன்மகள் ஏதிலாளனின் மாய இன்பம் நல்லதெனக் கொண்டு சென்று வருந்துவாளோ என்று கருத்துப்பட நின்றது.

Meanings:  

  • மிளகு பெய்தனைய – appearing like placed pepper, 
  • சுவைய – with taste,  
  • புன் காய் – dry berries, small fruits
  • உலறு தலை உகாஅய் – ukā trees with dried tops, Toothbrush Tree, Salvadora persica (உகாஅய் – இசைநிறை அளபெடை)
  • சிதர் – honeybees, 
  • சிதர்ந்து – chased away
  • உண்ட – ate
  • புலம்பு கொள் – with sorrow
  • நெடுஞ்சினை – tall branch
  • ஏறி – climbed
  • நினைந்து தன் – thinking about what it did
  • பொறி கிளர் எருத்தம் – spotted bright neck
  • வெறி பட – with fear
  • மறுகி – becoming confused
  • புன் புறா – dull colored pigeon/dove
  • உயவும் – become sad
  • வெந்துகள் இயவின் – on the hot dusty path
  • நயந்த காதலற் புணர்ந்தனள் ஆயினும் – even if she has joined her desired lover
  • சிவந்து – reddened
  • ஒளி மழுங்கி – become dull
  • அமர்த்தன கொல்லோ – will they be confused (கொல் – ஐயப்பொருட்டு, ஓ – அசைநிலை, an expletive)
  • கோதை மயங்கினும் – if her garland is twisted
  • குறுந்தொடி நெகிழினும் – if her small bangles get loose
  • காழ் – strands
  • பெயல் – hanging
  • அல்குல் – waist/loins
  • காசு – gold coins
  • முறை திரியினும் – if it is twisted in form, if it is disarranged
  • மாண் நலம் கையற – if her esteemed beauty is lost
  • கலுழும் – they will cry
  • என் மாயக் குறுமகள் – my beautiful daughter
  • மலர் ஏர் கண்ணே – beautiful flower-like eyes


அல்குல் காசு: தமிழ் இலக்கியத்தில் அல்குல் எனும் சொல் விரிவாக(200 பாடலுக்கு மேல்) பாவை அழகை வர்னிக்கும் சொல்லாக பயன் படுத்த பெற்றுள்ளது.சில பாடல்களிள் இறைவியை புகழும் சொல்லாகவும் கையாலப் பட்டுள்ளது.





                      🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
தமிழ் வாழ்க

No comments:

Post a Comment