தமிழகத்தில் இரும்புக்காலம் தொல்லியல் பொருட்கள்

மாங்காடு மற்றும் தெலுங்கனூர்



தமிழகத்தில் இரும்புக்காலம் எனப்படும் பெருங்கற்கால பண்பாடு பரவலாக அத்தனை மாவட்டங்களிலும் காணப்படுகின்றனஅண்மையில் சேலம் மாவட்டம் மேட்டூர் வட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட கள ஆய்வில் பெருங்கற்கால ஈமச்சின்னத்தில் இருந்து ஒரு எஃகு (Steel) வாள் கண்டெடுக்கப்பட்டதுஇவ்வாளினை அறிவியல் முறையில் கால கணிப்பு செய்ததில் இதனுடைய காலம் கி.மு 13 ஆம் நூற்றாண்டு என கண்டறியப்பட்டுள்ளதுஇதனால் தமிழகத்தில் இரும்பின் பயன்பாட்டானது கி.மு. 13 ஆம் நூற்றாண்டில் இருந்துள்ளதனை உறுதிசெய்யப்படுகிறது.




தெலுங்கனூரில் காணப்படும் ஒவ்வொரு கல்வட்டமும் ஒன்று முதல் ஆறு மீட்டர் இடைவெளியில் 2 முதல் 4 மீட்டர்விட்டம் கொண்டதாக கொணப்படுகின்றன. 500 க்கும் மேற்பட்ட இக்கல்வட்டங்களை உள்ளூர் மக்கள் பாண்டியன் திட்டு என்று அழைக்கின்றனர்.


 மேட்டூருக்கு அருகில் மாங்காடு என்னும் இடத்தில் உள்ள ஈமச் சின்னத்தில் எடுக்கப்பட்ட இரும்புத் துண்டு கி மு 1604 -1416 என அறியமுடிகிறது.

 சேலம் மாவட்டம், மேட்டூர் வட்டத்தில் அமைந்துள்ள தெலுங்கனூர். தெலுங்கனூர் என்னும் இடத்தில் எடுக்கப்பட்ட எஃகு வாளின் முனை கி மு 1435-1233 என்று அறிய முடிகிறது.

 இதனொல் தமிழ்நாட்டை பொறுத்தவரை இரும்புகாலம் என்பது மேலும் பின்னோக்கிச் செல்கிறது.

கி மு 13 ஆம் நூற்றாண்டை முன்னர் இரும்புத் தாதுவிலிருந்து எஃகு தயாரிக்கும் முறையினை தமிழர்கள் அறிந்திருந்தனர் என்பது தெளியாகிறது.

No comments:

Post a Comment