பின்னணி: தனக்கு வயதாகியும் நரையின்றி வாழ்வதின் காரணங்களை இப்பாடலில் பிசிராந்தையார் கூறுகின்றார்.
புறநானூறு 191, பாடியவர் – பிசிராந்தையார், திணை – பொதுவியல், துறை – பொருண்மொழிக் காஞ்சி
யாண்டு பலவாக, நரையில ஆகுதல்
யாங்கு ஆகியர் என வினவுதிர் ஆயின்,
மாண்ட என் மனைவியோடு மக்களும் நிரம்பினர்,
யான் கண்ட அனையர், இளையரும், வேந்தனும்
அல்லவை செய்யான், காக்க அதன்தலை
ஆன்று அவிந்து அடங்கிய கொள்கைச்
சான்றோர் பலர், யான் வாழும் ஊரே.
பொருளுரை:
ஆண்டுகள் பல ஆகியும் தலையில் நரை இல்லாதபடி எப்படி இவ்வாறு இருக்கின்றீர்கள் என்று நீங்கள் என்னைக் கேட்டால், சிறந்த என் மனைவியும், அறிவு நிறைந்த பிள்ளைகளும், நான் எண்ணுவது போல் எண்ணும் என்னிடம் பணிபுரிவோரும், தீமைகளைச் செய்யாத மன்னனும், மேலும், பணிவும் அடக்கமும் கொண்ட உயர்ந்த கொள்கைகளின்படி வாழும் சான்றோர்கள் பலரும் நான் வாழும் ஊரில் இருப்பதாலும் தான்
No comments:
Post a Comment