2021ஆம் ஆண்டு பல முக்கிய தொல்லியல் கண்டுபிடிப்புகளில் மிகவும் வியப்பாக இருப்பதுவும், உலகின் முதல் கலைத்திறனை வெளிப்படுத்துகிற பதிவுகள் (Worlds First Artist).
திபெத்தியன் பீடபூமியில் 169,000 - 226,000 ஆண்டுகள் முன்னர் இயற்கையாக படிமமாக்கப்பட்டது கைரேகைகள் மற்றும் கால்தடங்கள்.
யூசங் வெப்ப நீரூற்று (Quesang Hot Spring) என்ற இடத்தில் இந்த ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது.
7 மற்றும் 12 வயது இளைஞர்களின் தடயங்கள் இவை. இந்த தடங்கள் நியாண்டெர்தல் (Neanderthal) மற்றும் டெனிசோவன் (Denisovan) இனத்தை சேர்ந்தது.
ரஷ்யாவின் குகை ஒன்றில் இருவேறு இனங்கள் ஜோடி சேர்ந்து வாழ்ந்ததற்கான தடயங்கள் கிடைத்திருக்கின்றன. இப்பொழுது திபெத்திலும் நியாண்டெர்தல் மற்றும் டெனிசோவன் இனத்தை சேர்ந்த குழந்தைகளின் தடயங்கள் கிடைத்திருப்பது முக்கியமான ஒன்று.
ஆஃபிரிக்கர்களை தவிர, வேறு சில நாடுகளில் வசிப்பவர்களும், டெனிசோவன் இனத்தை சேர்ந்தவர்களின் (ஆசிய மக்களின்) மரபணுவின் ஒரு பகுதியைக் கொண்டுள்ளனர்.
நமது பரிணாம வரலாற்றில் மனிதர்கள் எப்போதுமே வெவ்வேறு இனங்களின் கலப்பாக இருப்பதை நாம் அறியலாம்
No comments:
Post a Comment