மகாஸ்தங்கர் கல்வெட்டு (Mahasthangarh)
1928-29 வங்காளத்தில் உள்ள மகாஸ்தங்கர் என்னும் கிராமத்தில் அகழ்வாராய்ச்சி செய்யப்பட்டது. அப்பொழுது சுண்ணாம்பு கற்பலகை கல்வெட்டு மற்றும் பல கலைப்பொருட்கள் கிடைத்தது. இந்த கல்வெட்டு இப்பொழுது இந்திய அருங்காட்சியகம் (Indian Museum) கொல்கத்தாவில் உள்ளது. கல்வெட்டு மௌரிய காலத்தை (கிமு 260) சேர்ந்த பிராம்மியில் எழுதப்பட்ட 6 வரிகள் கொண்டது. இக்கல்வெட்டில், மகாஸ்தங்கர் கிராம விளைநிலங்கள் தானமாக வழங்கப்பட்ட விவரம் உள்ளது. மௌரிய காலத்தை சேர்ந்திருந்தாலும் அசோகரை பற்றியோ அல்லது வேறு மௌரிய அரசரை பற்றியே இந்த கல்வெட்டில் எந்த தகவலும் இல்லை. தொல்லியல் அகழாய்வில் கிடைத்த பொருட்களை ஆய்வு செய்த அறிஞர்கள் இந்த இடம் மௌரிய காலத்திற்கு முன்பிருந்து மக்கள் இங்கு வாழ்ந்திருக்கலாம் என்று கூறுகின்றனர்.
English translation by Jean-Francois Salles
To Goberdhana of Samvamgiyas [ethnic or religious group] was granted by order sesamum and mustard seeds. The Sumatra [group of people] will cause it to be carried out from the prosperous city of Pundranagara. [And likewise] will cause paddy to be granted to the Samvamgiyas. In order to tide over the outbreak of distress caused by flood [or fire, or superhuman agency] and insects [parrots?] in the city, this granary and treasury will have to be replenished with paddy and Gandaka coins.
No comments:
Post a Comment