எல்லார்க்கும் ஒவ்வொன்று எளிது!!!

“வான் குருவியின் கூடு வல் அரக்கு தொல் கரையான்

தேன் சிலம்பி யாவர்க்கும் செய் அரிதால்  - யாம் பெரிதும்

வல்லோமே என்று வலிமை சொல வேண்டாம் காண் !

எல்லார்க்கும் ஒவ்வொன்று எளிது !”

-



பொருளுரை:

வான் குருவி எனப்படும் தூக்கணாங் குருவிக்கூடு, அரக்கு எனப் படும் வலிமையான இயற்கைப் பசை,   தேன்அடை,  சிந்தனைச் சிக்கலை நம்முள் உருவாக்கிவிடும் சிலந்தி வலை இவற்றை மேலோட்டமாகப் பார்த்தால் புல்லிய  புலனங்களே  !  ஆனால்  இந்த  அறிவியல் உலகில் எந்த மேதையாலும் இவற்றை உருவாக்க இயலுமா? 


ஒவ்வொருவரிடமும் ஒரு சிறப்பு இருக்கிறது; சாதாரண பறவையான வான் குருவி கட்டுகின்ற (தூக்கணாங் குருவிக்) கூட்டை இந்தக் கணினி யுகத்தில் வேறு எவராலும் கட்டித் தொங்கவிட்டு அதில் அக் குருவிகளைக் குடி வைக்க முடியுமா? முடியவே முடியாது !


அதாவது இந்த உலகத்தில் ஆற்றிவு படைத்த மனிதர்களாலும் செய்ய முடியாத செயல்களும்  இருக்கவே  செய்கின்றன  என்பதை இடித்துக் காட்டி,  வாழ்வில் பிற மனிதர்களிடத்தும், பிற  உயிர்களிடத்தும் நாம் சமத்துவ   உணர்வு கொண்டிருக்க  வேண்டும்  என்பதை  எடுத்துக் காட்டுவதே இப்பாடலின் நோக்கம் !


‘யாம் பெரிய வல்லாளன்’ என்பதாய் எண்ணம் கொண்டு பிறரைத் தாழ்மையாக நினைத்து விடக் கூடாது’ என்ற எச்சரிக்கையை இப்பாடல் மூலம் நமக்கு அளிக்கிறார் ஔவையார் !

                 🙏🙏🙏🙏🙏🙏🙏


புறநானூறு - 112 - பாரி மகளிர் - கையறு நிலை

 புறநானூறு - 112




பாடியவர்பாரி மகளிர்

திணைபொதுவியல் 

துறைகையறு நிலை 


“அற்றைத் திங்கள் அவ் வெண் நிலவில்,

எந்தையும் உடையேம்எம் குன்றும் பிறர் கொளார்;

இற்றைத் திங்கள் இவ் வெண் நிலவில்,

வென்று எறி முரசின் வேந்தர் எம்

குன்றும் கொண்டார்யாம் எந்தையும் இலமே”


விளக்கம்:-


இன்று முழுநிலாஇது போன்ற கடந்த முழுநிலா நாளன்று எங்களுடன் தந்தை இருந்தார்இன்று இல்லைஎம்முடைய குன்றமும் எங்களுடையதாக இருந்ததுஎம் குன்றத்தையும் வென்ற வேந்தர்கள் கைப்பற்றிக் கொண்டனர்.


பாரிக்கு கிடைத்த புகழைக் கொண்டு பொறாமையடைந்த மூவேந்தர்கள் பாரியையும்பறம்ப நாட்டையும் முற்றுகையிட்டு அழித்து விட்டனர்தன் பெண்மக்கள் இருவரையும் தன் உற்ற நண்பரான கபிலரிடம் அடைக்கலமாக தந்து விட்டு பாரி உயிரை நீத்தார்.

நண்பரின் இழப்பை தாங்க முடியாத கபிலர் அந்த இரு பெண்களையும் திருக்கோயிலூர் மலையமான் திருமுடிக்காரியிடம் ஒப்படைத்து விட்டு ஒரு குன்றின் மீது உயிர்விட்டதாக திருக்கோயிலூர் வீரட்டானத்தில் உள்ள இராசராசன் கல்வெட்டு உறுதிப்படுத்துகிறது


வென்றெறி முரசின் வேந்தர்என்பது மூவேந்தர்களும் தங்கள் வீரத்தால் பாரியை வெல்லவில்லை என்பதைச் சுட்டிக்காட்டும் இகழ்ச்சிக் குறிப்பு

       

                          🙏🙏🙏🙏🙏🙏🙏🙏



மனித கால்தடம்


 10,000 ஆண்டுகளுக்கு முன்புஒரு பெண் அல்லது இளைஞன் குழந்தையை சுமந்து கொண்டுகுறைந்தபட்சம் பலமணி நேரங்களுக்குப் கழித்து 2 பயணங்களைச் செய்தான்



இப்போது நியூ மெக்சிகோவின் ஒயிட் சாண்ட்ஸ் தேசியப் பூங்காவில் (New Mexico’s White Sand National Park) உள்ள அவர்களின் பாதையில் 1.5 கிமீ நீளம் மற்றும் 400 க்கும் மேற்பட்ட மனித அச்சிட்டுகள் உள்ளன.




                  🙏🙏🙏🙏🙏🙏🙏