கல்கி செய்த வரலாற்றுச் சிதைவு.. -தோழர் அருணன்

கல்கி செய்த வரலாற்றுச் சிதைவு.. -தோழர் அருணன்




மணிரத்னத்தின் "பொன்னியின் செல்வன்" கல்கியின் படைப்பை சிதைத்திடுமோ என்று பலரும் கவலைப்படுகிறார்கள்.

கல்கியின் படைப்பே வரலாற்றுச் சிதைவுதான்.

அந்த நாவலின் மையம் பட்டத்து இளவரசன் ஆதித்த கரிகாலனின் படுகொலை

அதைச் செய்தவர்கள் பற்றி உடையார் குடிக் கல்வெட்டு தெளிவாகக் கூறுகிறது. 

"அக் கொலைக்கு காரணமானோர் பிராமணர்கள் என்பதையும் அக்கல்வெட்டு சுட்டிக்காட்டுகிறது. அவர்கள் பின்வரும் நால்வராவார், சோமன், ரவிதாசனான பஞ்சவன் பிரமாதிராசன், பரமேசுவரனான இருமுடிச் சோழ பிரமாதிராசன், மலையனூரானான தேவதாசக் கிரமவித்தன்

இந்நால்வருள் இருவர் பஞ்சவன் பிரமாதிராசன், இருமுடிச்சோழ பிரமாதிராசன் என்னும் சிறந்த அரசியல் பட்டம் பெற்றோர் ஆவர். ஆதலின் அவர்கள் அரசாங்க உத்தியோகத்தில் உயர்நிலையில் இருந்தவர் என்பதில் ஐயமில்லை. அவ்வாறிருந்தும் ஏன் அரசிளங் குமாரரின் கொலைக்கு துணையாயினர் என்பது அறியக்கூடவில்லை" என்கிறார் சரித்திரப் பேராசிரியர் கே.கே.பிள்ளை. (தமிழக வரலாறு: மக்களும் பண்பாடும்)..


அந்தக் கல்வெட்டில் "பாண்டியனைத் தலைகொண்ட கரிகாலச் சோழனைக் கொன்று துரோகிகளான பிரமாணிமார்" என்று வருவதோடு "பாப்பனச் சேரி" என்றும் தெளிவாக வருகிறது..

இந்தக் கொலையாளிகளின் பெயர்களை அப்படியே தனது நாவலில் பயன்படுத்திய கல்கி அவர்கள் பிராமணர்கள், சோழ அரசில் உயர் பதவி வகித்தவர்கள் என்பதை மறைத்து, பாண்டியநாட்டு ஒற்றர்கள் என்று சித்தரித்திருக்கிறார்.

அதாவது உள்நாட்டு துரோகிகளை வெளிநாட்டு எதிரிகளாக மாற்றி வரலாற்றுக்கு துரோகம் செய்திருக்கிறார்.

கொலைக்கான காரணம் தெரியவில்லைதான்.

ஆனால் சோழ சாம் ராஜியத்தில் உயர் பதவிகளில் இருந்தவர்கள் அடுத்து பதவிக்கு வரப் போகிறவரைக் கொலை செய்ததில் சொந்தப் பகையைவிட அரசியல் பகை காரணமாக இருந்திருக்கவே வாய்ப்புகள் அதிகம்.

சுந்தர சோழன் பிராமணிய மதத்திடம் மட்டுமல்லாது சமண, புத்த மதங்களிடமும் தன்மையாக நடந்து கொண்டான். உலகபுரம் எனும் ஊரில் 'சுந்தர சோழப் பெரும் பள்ளி' எனும் புவுத்த வழிபாட்டுத்தலம் இருந்ததாக ஒரு கல்வெட்டு கூறுகிறது..

இவன் சமணத்தின்பால் மாச்சரியம் இல்லாமல் இருந்தான் என்கிறது வீரசோழிய உரைச் செய்யுட்கள்..

இவனது மூத்த மகனாம் ஆதித்த கரிகாலனும் அத்தகைய பரந்த மனப்பான்மை கொண்டவனாக இருந்திருக்கலாம்..

அது பிராமணிய மத பரவலுக்கு இடையூறானது என நினைத்து அந்த பிராமணர்கள் அவனைக் கொலை செய்திருக்கலாம்.

இப்படி ஊகிக்க வாய்ப்பு இருந்தும் அதற்கெல்லாம் இடம் கொடுக்காமல் பழியைத் தூக்கி பாண்டிய நாட்டுக்காரர்கள் மீது நாசூக்காகப் போட்டுவிட்டார் கல்கி.. கொலைகாரர்கள் பிராமணர்கள் எனும் உண்மையைச் சொன்னால் இந்த ஊகம் எழுந்துவிடும் என்பதால் அதை முழுமையாக மறைத்துவிட்டார்...

கல்கி அந்தக் காலத்து மதவிவகாரங்கள் எல்லாம் தெரியாதவர் அல்ல..

இதே நாவலில் சைவ, வைணவ போட்டி வந்திருக்கிறது. 'சிவகாமியின் சபதம்' நாவலிலோ புத்த பிட்சுவையே பிரதான வில்லனாகச் சித்தரித்திருக்கிறார்..

ஆதித்த கரிகாலன் விவகாரத்தில் மட்டும் கொலையாளிகளின் சாதி, மத பின்புலத்தை மறைத்து சரித்திர ஓட்டத்தை லாவகமாக திசை திருப்பிவிட்டார்..

பொன்னியின் செல்வன் சரித்திரக் கதைதான்..

அதில் சரித்திரம் எவ்வளவு, கதை எவ்வளவு என்பது கவனமான ஆய்வுக்குரியது. இதை அப்படியே தமிழரின் சரித்திரமாக நம்பி ஏமாந்து போகக் கூடாது.

நாவலுக்கே இந்த எச்சரிக்கை தேவைப்படுகிறது என்றால் படத்திற்கு எவ்வளவு எச்சரிக்கை தேவை என்பதை நேயர்கள் உணர்ந்து கொள்ளட்டும்..


                   🙏🙏🙏🙏🙏🙏🙏🙏


சிந்துச் சமவெளி நாகரிகம் வேத நாகரிகம் அல்ல – மரபணு ஆய்வு முடிவுகள்

சிந்துச் சமவெளி நாகரிகம் வேத நாகரிகம் அல்ல – மரபணு ஆய்வு முடிவுகள் !


ரப்பா நாகரிகம் என்றழைக்கப்படும் சிந்துச் சமவெளி நாகரிக (Indus Valley Civilisation – IVC) மக்களின் மரபு வழிஅடையாளம் குறித்த மர்மம் மற்றும் சர்ச்சைகளுக்கு கடந்த வியாழனன்று (05-09-2019) வெளியிடப்பட்ட இரண்டு மரபணு ஆய்வுகள் மறுக்கவியலாத பதிலை அளித்துள்ளன


ஹரியானா மாநிலத்தின் ராக்கிகர்ஹி என்ற இடத்தில் வளர்ச்சியடைந்த ஹரப்பா நாகரிக கால நகரம் இருந்துள்ளதுஅவ்விடத்தில் தொல்பொருள் அகழ்வாய்வில் ஈடுபட்ட ஆய்வாளர்கள் சிந்துச் சமவெளி நாகரிக காலத்தைச் சேர்ந்த இடுகாட்டில் ஆண்பெண் இருவரின் எலும்புக்கூடுகளை கண்டுபிடித்தனர்அதில் பெண்ணின் எலும்பை மரபணுஆய்வுக்கு உட்படுத்தியுள்ளனர்இவ்வாய்வறிக்கை செல்(Cell) என்ற அறிவியல் ஆய்விதழில் வெளியாகியுள்ளது.


👉 சிந்துச் சமவெளி நாகரிகத்தில் வசித்தவர்களிடம் ஸ்டெப்பி புல்வெளி மற்றும் பண்டைய ஈரானிய வேளாண்குடிகளின் மரபணு இல்லை

👉 பழங்கால தென்னிந்திய வேட்டைச் சமூகம் மற்றும் பழங்கால விவசாயத்திற்கு முந்தைய (புதிய கற்காலஈரானிய சமூகம் ஆகிய கலப்பின மரபணுவைக் கொண்டிருப்பதை இவ்விரு ஆய்வு முடிவுகளும் தெரிவிக்கின்றன.

👉 சிந்துச் சமவெளி மக்களிடம் ஈரானிய வேளாண்குடிகளின் மரபணு இல்லை

👉 சிந்துச் சமவெளி நாகரிகத்திற்கு முற்பட்ட காலத்திலேயே ஈரானில் இருந்து வந்து இந்திய மூதாதையினருடன்கலந்தனர் என்றும்இவர்களே பின்னர் வேளாண்மையில் ஈடுபட்டு சிந்துச்சமவெளி நாகரிகமாக வளர்ச்சியடைந்தனர் 


சிந்துச்சமவெளி நாகரிகம் வேத (ஆரியநாகரிகம் அல்ல என்பதும் உறுதியாகிவிட்டது


👉 “தற்கால வட இந்தியர்களிடம் குறிப்பாக இந்தோ-ஐரோப்பிய மொழிக் குடும்பங்களை பயன்படுத்தும் இந்தியபுரோகித சமூகங்களில் (குறிப்பாக பார்ப்பனபனியா மேல்சாதியினர்இந்த ஸ்டெப்பி வம்சாவளி மரபணு மிகஅதிகமாகக் காணக்கிடைக்கிறது” என்கிறது science இதழில் வெளியான ஆய்வு


👉 இன்றைய நவீன இந்தியர்கள் அனைவருமே வடஇந்திய மூதாதையர் (Ancestral Noth Indians – ANI)  மற்றும்  தென்னிந்திய மூதாதையர் (Ancestral South Indians – ASI) ஆகிய இரு வம்சாவளியின் வழித்தோன்றல்களேஇவ்விரு வம்சாவளியினரும் சிந்துச் சமவெளி நாகரிகத்தின் அழிவிற்குப் பின்னரே தோன்றினர் என்பதும் தற்போது உறுதியாகியுள்ளது.


வடஇந்திய மூதாதையர் (Ancestral Noth Indians – ANI):- சிந்துச்சமவெளி நாகரிகத்தின் வீழ்ச்சிக்குப் பிறகுஅம்மக்கள் வடமேற்கில் இருந்த இனக்குழுக்களுடனும் மற்றும் ஸ்டெப்பி வம்சாவளியுடனும் கலந்து ‘வடஇந்தியமூதாதையர்’ உருவாகினர்.



தென்இந்திய மூதாதையர் (Ancestral South Indians – ASI):- சிந்துச்சமவெளி நாகரிகத்தின் வீழ்ச்சிக்குப் பிறகுஅம்மக்கள் தென்னிந்திய மூதாதைகளான வேட்டை சமூக குழுக்களுடன் (AASI) கலந்து ‘தென்இந்திய மூதாதையர்’  உருவாகினர்





👉 தெற்காசியாவில் இரண்டாவது மிகப் பெரிய மொழிக் குழுமமான திராவிட மொழிக் குழுமத்தின் தோற்றம் பற்றிய கேள்விக்கும் இந்த ஆய்வு விடையளித்துள்ளதுதென்னிந்திய மூதாதையருக்கும் (ASI) தற்போதைய திராவிடமொழிகளுக்கும் இடையில் உள்ள இணையுறவை வைத்துப் பார்க்கும்போது தென்னிந்திய மூதாதையர் என்பவர்கள்சிந்துச் சமவெளி நாகரிகம் (IVC) மறையத் துவங்கியபோது கிழக்கிலும் தெற்கிலும் பரவிமிக ஆதிகால தென்னிந்தியமூதாதைகளான வேட்டை சமூக குழுக்களுடன் (AASI) கலந்தனர்இவர்கள்ஆரம்பகால திராவிட மொழிகளைப்பேசியிருக்கக்கூடும்” என்கிறது Science இதழில் வெளியான ஆய்வறிக்கை


                       🙏🙏🙏🙏🙏🙏🙏🙏


நன்றி :- https://www.vinavu.com/2019/09/10/indus-valley-civilization-new-dna-evidence-clears-that-aryans-are-migrants/




ஸ்வீடனில் உள்ள டானுமில் (Tanum) வரலாற்றுக்கு முந்தைய பாறை ஓவியங்கள்

ஸ்வீடனில் உள்ள டானுமில் (Tanum) வரலாற்றுக்கு முந்தைய பாறை ஓவியங்கள்


ஸ்வீடனின் போஹுஸ்லான் பகுதியில் டானும் (Tanum) அருகே உள்ள வெண்கல கால (Bronze Age) பாறை ஓவியங்கள் உள்ளது. இது யுனெஸ்கோவின் உலக கலாச்சார பாரம்பரியம் ஆகும்







டானும் உள்ள பாறை ஓவியங்கள் பெரும்பாலும் வெண்கலக் காலத்திலும் இரும்புக் காலத்தின் ஆரம்ப காலத்திலும் செய்யப்பட்டவை - இவ்வாறு கிமு 1700 மற்றும் கிமு 200 க்கு இடையில்


படகுகள் மற்றும் ஆயுதங்களின் வெவ்வேறு மாதிரிகள்அதே போல் விலங்குகளின் தோற்றம் ஆகியவை படைப்புகளை தேதியிட உதவுகின்றன


'டானம் பாறை ஓவியங்கள்'600 க்கும் மேற்பட்ட பாறைகளில் 1000 படங்களை பிரதிநிதித்துவப்படுத்துகிறதுஇது 25 கிமீ நீளத்தில் வெவ்வேறு பகுதிகளில் குவிந்துள்ளது.






சுமார் 4,000 கி.முதெற்கு ஸ்காண்டிநேவியாவில் ஒரு புதிய கலாச்சார காலம் எழுந்தது - புதிய கற்காலம் என்று அழைக்கப்படுகிறதுஇந்த காலகட்டத்தில்தான் மத்திய கிழக்கிலிருந்து ஸ்காண்டிநேவியப் பகுதிக்கு விவசாயம்முதன்முதலில் வரத் தொடங்கியது.


                       🙏🙏🙏🙏🙏🙏🙏🙏