எகிப்து பயண குறிப்புகள்

 இரா (Ra), இரண்டாம் ராமேசஸ் மற்றும் செக்மெத் பற்றிய குறிப்பிகள்


On the right is “Ptah”

Center is “Ramesses II”

On the left is “Sekhmet”


இரா (Ra):- தலையில் கதிரவ தகடும் வல்லூற்றின் தலையும் கொண்ட இரா எனும் சூரியக் கடவுள்.






மேலும் இரா எனும் சூரியக் கடவுளுடன் அமூன் (Amun) கடவுளை இணைத்து அமூன்-ரா (Amun-Ra) எனும் புதிய கடவுள் வழிபாடு தொடங்கியது.


கிமு 16 முதல் 11-ஆம் நூற்றாண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் பண்டைய எகிப்தில் சுயம்புவாகத் தோன்றிய அமூன் - இரா கடவுள் வணக்க முறை செழித்தோங்கியது. பிரபஞ்சத்தின் படைப்புப் கடவுளான அமூன் - இரா வழிபாட்டை எகிப்தியர்கள் பயபக்தியுடன் மேற்கொண்டனர்.


செக்மெத் (Sekhmet):- இது ஒரு பெண் தெய்வம். இவர் கதிரவக் கடவுள் இராவின் மகள் ஆவார். போர் மற்றும் மருத்துவம் சார்ந்த தெய்வம். இத்தெய்வம் எகிப்திய பார்வோன்களின் பாதுகாவலராகவும், போரில் அவர்களை வழிநடத்திச் செல்பவராகவும் கருதப்படுகிற போர்க் கடவுள்


தாவ் அல்லது பிதா (Ptah) பண்டைய எகிப்தின் சமயத்தில் கூறப்படும் படைப்புக் கடவுள் ஆவர். இவர் பெரும்பாலும் பச்சை நிறத் தோல் மற்றும் தாடியுடன் மூன்று சின்னங்கள் பொருந்திய செங்கோலை கையில் ஏந்தியபடி காட்சியளிக்கிறார். மூன்று சின்னங்களில் 1. சக்தி 2. வாழ்வு 3. நிலைத்தன்மை குறிக்கிறது.



Ramesses 2





இரண்டாம் ராமேசஸ் கிமு 1279–1213 புது எகிப்திய இராச்சியத்தை ஆண்ட 19வது வம்சத்தின் முன்றாவது பார்வோன் ஆவார். மொத்தம் 66 ஆண்டுகள் இரண்டு மாதங்கள் எகிப்தின் மன்னராக ஆட்சிபுரிந்தார். இவரது தந்தை முதலாம் சேத்தி (Sethos I) அவர். 


இரண்டாம் ராமேசஸின் மனைவின் பெயர் நெபர்தரி (Nefertari). Valley of Queens (ராணிகளின் சமவெளியில்) இவரது பெரிய கல்லறை மிகவும் அழகிய முறையில் நிறுவப்பட்டுள்ளது. 


இரண்டாம் ராமேசஸ் பண்டைய எகிப்தின் மிகவும் வெற்றிகரமான பாரோக்களில் ஒருவராக பரவலாகக் கருதப்படுகிறார், 15 க்கும் பேற்ப்பட்ட போர்களை வழிநடத்தினார். இவை அனைத்தும் வெற்றிகளுக்கு வழிவகுத்தன, கடேஷ் போரைத் (Battle of Kadesh) தவிர, இது பொதுவாக வெற்றி தோல்வி இல்லாம் முடிந்ததாக கருதப்படுகிறது.


தன் அட்சிகாலத்தில் மொத்தம் 14 சேத் திருவிழாக்களை கொண்டடிய பெருமை இவருக்கு உண்டு. 


சேத் திருவிழா (Sed festival) பார்வோனின் 30 ஆண்டு ஆட்சிக் கால நிறைவிற்காகவும், பின்னர் ஒவ்வொரு 3 அல்லது 4 ஆண்டுகளுக்கு ஒரு முறையும் மன்னரின் ஆட்சிக் காலத்தைப் போற்றும் வகையிலும், மன்னருக்கு நல்ல உடல் நலத்தையும் வேண்டியும் அமூன் மற்றும் இரா கடவுளர்களுக்கு படையல் விருந்து மற்றும் ஊர்வலத்துடன் சிறப்பிக்க கொண்டாடப்பட்டது. பண்டைய எகிப்தியர்களின் ஓநாய்க் கடவுளான சேத் பெயரால் இத்திருவிழா பெயர் பெற்றது





அவரது மரணத்திற்குப் பிறகு, அவர் Valley of Kings (கிங்ஸ் பள்ளத்தாக்கில்) உள்ள ஒரு கல்லறையில் (KV7) அடக்கம் செய்யப்பட்டார். அங்கு 1881 இல் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டது. ராமேசஸின் மம்மி இப்போது கெய்ரோ நகரில் அமைந்துள்ள எகிப்திய நாகரிகத்தின் தேசிய அருங்காட்சியகத்தில் (National Museum of Egyptian Civilization(NMEC)) காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.


மேலும் தொடரும்…


 

கூர்வாய் எறியுளி

 கூர்வாய் எறியுளி:-



தஞ்சாவூர் மாவட்டம் பட்டீஸ்வரம் சிவாலயத்தின் சுற்றும் மண்டபத்தில் காணப்படும் தஞ்சை நாயகர்கள் கால ஓவியத் தொகுப்பில் மீனவர்கள் மீன் பிடிக்கும் காட்சி இடம் பெற்றுள்ளது.


இக்காட்சி ஓவியத்தில் இரு மீனவர்கள் உள்ளனர். அதில் ஒருவர் படகினை செலுத்த மற்றொருவர் கையில் எறிஉளி ஏந்தி மீன் ஒன்றினை தாக்க முற்பட்ட கோளத்தில் திகழ்கிறான். இம்மீனவன் முன்னர் எறிந்த எறிஉளியால் தாக்கிய மீன் ஒன்று, தன் உடலை தொலைத்த அந்த எறிஉளியோடு நீரில் நீந்துகிறது. மீன் உடலை தொலைத்து மறுபுறம் வெளிவந்த எறிஉளி என்னும் ஈட்டியானது மூங்கில் கழியில் சேர்க்கப்பட்டுள்ளது. இம்மூங்கிலில் கழியுடன் இணைக்கப்பட்ட கயிறு படகில் கட்டப்பட்டுள்ளது.


இந்த ஓவியத்தில் காணப்பெறும் ஒவ்வொரு கூறும் அகநானூறு, நற்றிணை, குறுந்தொகை பாடல்களில் குறிப்பிடப் பெற்றுள்ள செய்திகளை காட்டி நிற்பவனாக உள்ளன.


       “குறியிறைக் குரம்பைக் கொலை வெம் பரதவர்

        எறிஉளி பொருத ஏமுறு பெரு மீன்

         புண் உமிழ் குருதி புலவுக் கடல் மறுப்பட..”

        (அகம்:210;1-3)


மேலும், 

உழவன் ஒருவன் விடியற்காலத்தே எழுந்து “விரால் மீனைப்” பிடித்து துண்டு துண்டாக வெட்டி மணக்கும் குழம்பு வைப்பதையும், அந்தக் குழம்புக்கு ஏற்றப்படி அரிசியால் செய்த சோற்றினைச் சேர்த்து உண்டு மகிழ்ந்ததையும்,


      “கருங்கண் வராஅல் பெருந்தடி மளிர்வையொடு

        புகர்வை அரிசிப் பொம்மற் பெருஞ் சோறு” 

        (நற்றி.60:4-6)


மீன் பிடித்துக் கொண்டிருக்கும் தன் தந்தைக்கு, மூரலாகிய வெண்சோற்றை ஆக்கி அதனோடு அயிலை மீனின் குழம்பு வைத்து கொழுமீன் கருவாட்டுடன் கொண்டு சென்றாள் பரதவப் பெண் என்பதை,


“உப்பு நொடைநெல்லின் மூரல் வெண்சோறு

அயிலை துழந்த அம்புளிச் சோறு

கொழுமீன் தடியொடு குறுமகள் கொடுக்கும்”

(அகம்.60:4-6)


      🙏🙏🙏🙏🙏🙏🙏



ஊரும் பேரும்

 ஊரும் பேரும்




குறிஞ்சி நில ஊர்கள்:

  • மலையின் அருகே உள்ள ஊர்களுக்கு நாகமலை, ஆனைமலை, சிறுமலை, திருவண்ணாமலை, விராலிமலை, வள்ளிமலை எனப் பெயர்கள் உள்ளன.
  • ஓங்கியுயர்ந்த நிலபகுதி - மலை
  • மலையின் உயரத்தில் குறைந்தது - குன்று
  • குன்றின் உயரத்தில் குறைந்தது - கரடு, பாறை
  • குன்றை அடுத்துள்ள ஊர்கள் குன்றூர், குன்றத்தூர், குன்றக்குடி என வழங்கப்பெற்றன.
  • மலையைக் குறிக்கும் வடசொல், "கிரி" என்பதாகும். சிவகிரி, கிருஷ்ணகிரி, நீலகிரி, கோத்தகிரி என்பன மலையையொட்டி எழுந்த ஊர்பெயர்கள்.
  • குறிச்சி, ஆழ்வார்க்குறிச்சி, கல்லிடைக்குறிச்சி, கள்ளக்குறிச்சி என்ற பெயர்கள் எல்லாம் குறிஞ்சி நில ஊர்களே, குறிஞ்சி என்னும் சொல்லே மருவிக் குறிச்சி ஆயிற்று.

முல்லை நில ஊர்கள்: (காடு, புரம், பட்டி, பாடி)

  • அத்தி(ஆர்) மரங்கள் சூழ்ந்த ஊர் "ஆர்க்காடு" எனவும், ஆல மரங்கள் நிறைந்த ஊர் "ஆலங்காடு" எனவும், களாச்செடிகள் நிறைந்த ஊர் "களாக்காடு" எனவும் பெயரிட்டனர்.
  • காட்டின் நடுவில் வாழ்ந்த மக்கள், அங்குத் திரியும் விலங்குகளால் தமக்கும், தம் கால்நடைகளுக்கும் ஊறு நேராவண்ணம் வேலி கட்டிப் பாதுகாத்தனர். அவ்வூர்கள் "பட்டி, பாடி" என அழைக்கப்பட்டன. (காளிப்பட்டி, கோவில்பட்டி, சிறுகூடல்பட்டி)

மருத நில ஊர்கள்: (ஊர், குடி, சோலை, பட்டி, குளம், ஏரி, ஊரணி)

  • நிலவளம், நீர்வளமும் பயிர்வளமும் செறிந்த மருதநிலக் குடியிருப்பும் "ஊர்" என வழங்கப்பட்டது.
  • ஆறுகள் பாய்ந்த இடங்களில் ஆற்றூர் என வழங்கப்பட்ட பெயர்கள் காலபோக்கில் "ஆத்தூர்" என மருவியது.
  • மரங்கள் சூழ்ந்த பகுதிகளில் மரங்களின் பெயரோடு ஊர் பெயரை சேர்த்து வழங்கினர். (கடம்பூர், கடம்பத்தூர், புளியங்குடி, புளியஞ்சோலை, புளியம்பட்டி).
  • குளம், ஏரி, ஊருணி ஆகியற்றுடன் ஊர் பெயர்களில் இணைத்து வழங்கினர். (புளியங்குளம், வேப்பேரி, பேராவூரணி)

நெய்தல் நில ஊர்கள்: (பட்டினம், பாக்கம், கரை, குப்பம்)

  • கடற்கரை பேரூர்கள் "பட்டினம்" எனவும், சிற்றூர்கள் "பாக்கம்" எனவும் பெயர் பெற்றிருந்தன.
  • பரதவர் வாழ்ந்த ஊர்கள் "கீழக்கரை, கோடியக்கரை, நீலாங்கரை" எனப் பெயர் ரெற்றிருந்தன.
  • மீனவர்கள் வாழும் இடங்கள் "குப்பம்" என்று அழைக்கப்படுகிறது.

திசையும் ஊர்கள்: (ஊர், பழஞ்சி)

  •  நாற்றிசைப் பெயர்களும் ஊர்களுடன் குறிக்கப்பெற்றன. ஊருக்கு கிழக்கே இருந்த பகுதியை "கீழுர்" எனவும், மேற்கே இருந்த பகுதியை "மேலூர்" எனவும் பெயரிட்டனர்.

நாயக்க மன்னர்கள்:

  • நாயக்க மன்னர்கள் தமிழகத்தை 72 பாளையங்களாக பிரித்து ஆட்சி செய்தனர்.
  • அவர்கள் ஊர்ப்பெயருடன் பாளையத்தை சேர்த்து வழங்கினர். (ஆரப்பாளையம், மதிகோன்பாளையம், குமாரப்பாளையம், மேட்டுப்பாளையம்)

ஊர் பெயர்கள் மாறுதல்:

  • கல்வெட்டுகளில் காணப்படும் "மதிரை" மருதையாகி இன்று "மதுரை"யாக மாறியுள்ளது.
  • கோவன்புத்தூர் என்னும் பெயர் "கோயமுத்தூர்" ஆகி, இன்று "கோவை" ஆக மருவியுள்ளது.
                  🙏🙏🙏🙏🙏🙏🙏🙏