கோழி நடுகல்

காலம்:- கி.பி. 3-4 ஆம் நூற்றாண்டு

இடம்:- விழுப்புரம் பொதுப்பணித் துறை அலுவலகம்



  1. முகையூரு மேற்சே, 
  2. ரிகு யாடிக, 
  3. ருகிய கோழி

முகையூர் மேற்சேரிக்கு; யாடி கருகிய கோழி


விளக்கம்:- 

“முகையூரில் மேல் சேரி என்னும் இடத்தில், சண்டையிட்டு இறந்த கோழி”





ஆதியில் நம் வழிபாட்டு முறைகள் நடுகல்லில் இருந்தே தோன்றின என்கிறது வரலாறு. நடுகல், கந்து எனும் கல்தூண் தொடங்கிய நம் வழிபாடுகள். சிந்துச் சமவெளி நாகரிகத்தில் போர்ச் சேவல்களைச் சிறப்பிக்கும் சான்றுகள் உள்ளதுபோல் தமிழகத்திலும் பல சான்றுகள் உண்டு. அவற்றில் ஒன்று அரசலாபுரம் கோழி நடுகல்.


கி.பி. 3-4 ஆம் நூற்றாண்டு முதல், தமிழ் பிராமி எழுத்து முறையிலிருந்து பிரிந்து வட்டெழுத்து முறையாக மாறத்தொடங்கியது. இந்த காலகட்டத்தில் எழுதப்பட்ட கோழிக்கான நடுகல்.


                        🙏🙏🙏🙏🙏🙏🙏🙏



புத்தகம் :- “திருநிழலும் மண்ணுயிரும் - கொங்கு மண்ணின் தொல்லியல் நிகழ்வுகள்”


புத்தகம் :- “திருநிழலும் மண்ணுயிரும் - கொங்கு மண்ணின் தொல்லியல் நிகழ்வுகள்” 

  • பா. மீனாட்சி சுந்தரம்
  • நிமிர் வெளியீடு


திரு மீனாட்சி சுந்தரம் அவர்கள் நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் பணிபுரிந்த போது அவர் மேற்கொண்ட தொல்லியல் பயணத்தில் கண்ட விடயங்களை புத்தகமாக தொகுத்து வெளியிட்டுள்ளார்.


👉 கோவையில் மாநகரில் “புலிக்குத்தி வீரன் நடுகல்”. கோவை நகரின் மையப் பகுதியான உக்கடத்தில், வாலாங் குளம் என்ற சிறிய குளம் அருகில் புலிக்குத்தி வீரனுக்கான நடுகல் இருக்கிறது. இந்தப் பகுதி மிகுந்த அடர்ந்த வனப்பகுதியாக இருந்திருக்க வேண்டும். காடை அழித்து நாடை உருவாக்கும் பொழுது புலியுடன் போரிட்டு இருந்த வீரனுக்கான நினைவுகளே இந்த நடுகல். இப்பொழுது ஒரு மாநகரத்தின் மையப்பகுதியில் இந்த நடு கல் அமைந்துள்ளது. 





👉 ஆதாளி அம்மன். பொள்ளாச்சியில் ஆழியாறு அணை அருகே ஆதாளி அம்மனாக வழிபட்டு வரும் ஒரு பெண் தெய்வம், உண்மையில் சமணத்தில் 24-வது தீர்த்தங்கரமான மகாவீரர். 


  

                        🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏





உலகின் 'பழமையான' நகைகள்

தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் உலகின் 'பழமையான' நகைகளைக் கண்டுபிடித்துள்ளனர்.




தென்மேற்கு மொராக்கோவில் உள்ள பிஸ்மவுன் குகையில் (Bizmoune Cave - Morocco) பணிபுரியும் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் ஒரு ஆச்சரியமான கண்டுபிடிப்பை வெளியிட்டனர்: அவர்கள் உலகின் பழமையான நகைகள் என்று நம்பப்படுவதைக் கண்டுபிடித்தனர். 142,000 முதல் 150,000 ஆண்டுகள் பழமையான 33 ஷெல் மணிகளைக் (Shell Beads) கண்டறிந்தது.


மனித தலையீட்டால் உருவாக்கப்பட்ட ஷெல் மணிகளில் உள்ள துளைகளை நெருக்கமாக ஆய்வு செய்ததன் அடிப்படையில் அவை உண்மையில் நகைகள் என்று ஆராய்ச்சியாளர்களால் முடிவு செய்ய முடிந்தது. இதேபோன்ற பல மணிகள் முன்னர் இப்பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன, ஆனால் இது 130,000 ஆண்டுகளுக்கு மேல் பழமையானது என்று தேதியிடப்படவில்லை.


                 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏