எட்கர் தர்ஸ்டன் (Edgar Thurston,1855-1935)

 எட்கர் தர்ஸ்டன் (Edgar Thurston,1855-1935)





👌 எட்கர் தர்ஸ்டன் -1885 இல் சென்னை அருங்காட்சியகக் கண்காணிப்பாளராகப் பணியேற்று கால்நூற்றாண்டுக் காலம் அப்பணியை செவ்வனே மேற்கொண்டவர்இப்பொறுப்புடன் 1901இல் தென்னிந்திய இனவியல்(Ethnology) ஆய்வுப் பொறுப்பும் ஆங்கில அரசால் இவரிடம் கொடுக்கப்பட்டதுவங்காளத்தில் உள்ள ஆசியக்கழகத்தினரிடம் இருந்து மனித உடற்கூற்றினை அளக்க உதவும் கருவிகளைப் பெற்று அவர் இந்த ஆய்வினை முன்னெடுத்தார்.


👌👉 தர்ஸ்டன் தனது ஆய்வை ‘Castes and Tribes of South India’ என்ற தலைப்பில் 7 தொகுதிகளாக 1909இல்வெளியிட்டார்மத்திய இந்தியாவின் கோண்ட் பழங்குடியினர் உட்பட 300க்கும் மேற்பட்ட குலங்களையும் குடிகளையும் கொண்ட தகவல் களஞ்சியம் இந்த நூல்கள்இவை வரலாற்றியல்சமூகவியல்இனவியல் நோக்கில் குடிகளையும் குலங்களையும் அறிய உதவும் தகவல்கள் நிரம்பியவை.சி.கந்தையா பிள்ளை இவற்றின் சிலபகுதிகளைச் சுருக்கி முன்னர் தமிழில் வெளியிட்டுள்ளார்.


👌👉 மானிடவியல் ஆய்வாளர்களுக்கு மிக இன்றியமையாததும்அடிப்படையுமான ஆய்வு நூல் என்பதால் தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகம் 7 தொகுதிகள் கொண்ட இந்த ஆய்வு நூல் தொகுப்பை முனைவர் ரத்னம் அவர்களின் மொழி பெயர்ப்பில் 1986 முதல் 2005 வரை வெளியிட்டுள்ளதுதனி ஒரு மனிதராக மொழிபெயர்ப்பைக் கையாண்டு எளிதில் எவரும் புரிந்து கொள்ளும் வகையில் 7 தொகுதிகளையும் தமிழாக்கம் செய்தது ரத்னம் அவர்களின் பாராட்டிற்குரிய செயல் என்று சொல்வது மிகையல்லபடிப்பவருக்கு அவரது பணியின் சிறப்பு விளங்கும்.





👌👉 தொகுதி – 1. அபிசேகர் முதல் பயகர வரை

தொகுதி – 2. கஞ்சி முதல் ஜுங்கு வரை

தொகுதி – 3. கப்பேரர் முதல் குறவர் வரை

தொகுதி – 4. கோரி முதல் மரக்காலு வரை

தொகுதி – 5.மரக்காயர் முதல் பள்ளெ வரை

தொகுதி – 6. பள்ளி முதல் சிரியன் கிறிஸ்துவர் வரை

தொகுதி – 7. தாபேலு முதல் சொன்னல வரை


👌👉 “திராவிடக் குடும்பத்திற்குரிய பண்டைய பெயர் ‘தமிழ்’ என்பதனை மனதிற் கொள்ளவேண்டும்திராவிடம் என்ற சொல்லாட்சியினைக் கால்டுவெல் பயன்படுத்தியதற்குக் காரணம் தமிழ் என்ற சொல்லாட்சி தமிழ் மொழிக்கு உரியவர்களின் மொழிக்காகத் தனித்து ஒதுக்கப்பட வேண்டும் என்ற கருத்தினாலேயே ஆம்” என்பது தர்ஸ்டன் தரும் விளக்கம்.


👌👉 இன்று தென்னிந்தியாவிலும் இலங்கையிலும் என்ற அளவில் குறுகிவிட்ட திராவிட இனம்முன்னர் இந்தியா முழுவதிலும் அதற்கு அப்பாலும் கூடப் பரவியிருந்ததாகத் தெரிகிறது


Castes and Tribes of South India: Edgar Thurston

தென்னிந்தியக் குலங்களும் குடிகளும்எட்கர் தர்ஸ்டன்

(தமிழாக்கம்முனைவர் ரத்னம்)

வரலாறு படிப்பவனிடம் ஒரு தொழிலாளியின் கேள்விகள் - பெர்தோல் பிரெக்ட்

வரலாறு படிப்பவனிடம் ஒரு தொழிலாளியின் கேள்விகள் - பெர்தோல் பிரெக்ட்


 

தேப்ஸின் ஏழு வாயிகளைக் கட்டியது யார்,

அரசர்களின் பெயர்களை நீங்கள் புத்தகங்களில் வாசிப்பீர்கள்,

அரசர்களா மலைகளிலிருந்து கற்களைச் சுமந்து வந்தார்கள்

பாபிலோன் பலமுறை இடித்து நொறுக்கப்பட்டது

யார் அதை மீண்டும் மீண்டும் கட்டியெழுப்பியது?

பொன்னைப் போல் மின்னும் தங்களின்

வீடுகளைக் கட்டியவர்கள் வாழ்கிறார்களா?

சீனப் பெருஞ்சுவர் கட்டிமுடிக்கப்பட்ட மாலையிலேயே

கட்டியவர்கள் சென்றுவிட்டார்களா?

மாபெரும் ரோமாபுரியில் நிறைந்துள்ள வெற்றிவளைவுகளை

கட்டியவர்கள் யார்?

சீசரின் வெற்றி யாரால் நிகழ்ந்தது?

பைசாண்டிய நகரம்எண்ணற்ற பாடல்களால்

மாளிகைவாசிகளால் மட்டுமா புகழப்பட்டது?

அட்லாண்டிஸ் கட்டுக்கதையில் கூட 

ஒரே இரவில் அட்லாண்டிஸ் கடலில் மூழ்கியது!

மூழ்கியவர்கள் இப்போதும் தங்கள் 

அடிமைகளுக்காக அழுகிறார்கள்.

இளைஞனான அலெக்சாண்டர்

இந்தியாவை வென்றது தனியாகவா

கால்சை தோற்கடித்த சீசரோடு

அவனது படையில் ஒரு சமயற்காரன் கூட இல்லையா?

ஸ்பெயின் அரசன் தனது கப்பற்படை

மூழ்கடிக்கப்பட்டு அழிக்கப்பட்டபோது அழுதானாம்

அழுதது அவன் மட்டும்தானா?

இரண்டாம் பிரெடிரிக் ஏழாண்டு போரை வென்றானாம்

அந்த வெற்றியில் வேறு யாரும் இல்லையா?

ஒவ்வொரு பக்கமும் வெற்றி

வெற்றியாளர்களுக்காக யார் விருந்து சமைத்தார்கள்?

ஒவ்வொரு பத்தாண்டிற்கும்

ஒரு சிறந்த மனிதன்

அதற்கு விலைகொடுத்தது யார்?

எண்ணற்ற குற்றச்சாட்டுகள்!.

என்ணற்ற கேள்விகள்!..

 

தமிழில்ஜோசப் ராஜா ]


A Worker Reads History - Bertolt Brecht


Who built the seven gates of Thebes?
The books are filled with names of kings.
Was it the kings who hauled the craggy blocks of stone?
And Babylon, so many times destroyed.
Who built the city up each time? In which of Lima's houses,
That city glittering with gold, lived those who built it?
In the evening when the Chinese wall was finished
Where did the masons go? Imperial Rome
Is full of arcs of triumph. Who reared them up? Over whom
Did the Caesars triumph? Byzantium lives in song.
Were all her dwellings palaces? And even in Atlantis of the legend
The night the seas rushed in,
The drowning men still bellowed for their slaves.

Young Alexander conquered India.
He alone?
Caesar beat the Gauls.
Was there not even a cook in his army?
Phillip of Spain wept as his fleet
was sunk and destroyed. Were there no other tears?
Frederick the Great triumphed in the Seven Years War.
Who triumphed with him?

Each page a victory
At whose expense the victory ball?
Every ten years a great man,
Who paid the piper?

So many particulars.
So many questions.


                  🙏🙏🙏🙏🙏🙏🙏🙏


யார் அரசாண்டது என்பது மட்டுமே சரித்திரம் இல்லை. வரலாற்றில் சாமான்யர்களின் பங்கு எப்பொழுதும் இரட்டடிப்பு செய்யப்பட்டுவிடுகிறது. 


வரலாறு கல்வெட்டுகளில் மட்டும் எழுதப்படுவதில்லைஒவ்வொரு மனிதனும் ஒரு கல்வெட்டு தான்சரித்திர சாட்சிதான்


உண்மையில் சமையலறைப் பொருட்களை ஆராய்ந்தால் பல சரித்திர உண்மைகள் வெளிப்படும்பாத்திரங்கள் துவங்கி உணவு பொருட்கள் காய்கறிகள் சமைக்கும் முறை என்று ஒவ்வொன்றிலும் ஒரு தேசத்தின் ஊடுருவல்கலப்பு உள்ளது.


                🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏



நற்றிணை 88 - உப்பு

 நற்றிணை Natrinai 88 

ஆசிரியர்:- நல்லந்துவனார் 


கி.மு. 2 ஆம் நூற்றாண்டுக்கு முந்தைய பாடல் 


உப்பு’‘கடல்விளை அமுதம்’ என்று அழைத்து மகிழ்ந்துள்ளார் சங்கப் புலவர்.





தலைவியிடம் தோழி சொல்கிறாள் 


யாம்செய் தொல்வினைக்கு எவன் பேதுற்றனை

வருந்தல் வாழி தோழி யாம் சென்று

உரைத்தனம் வருகம் எழுமதி புணர்திரைக்

கடல்விளை அமுதம் பெயற்கு ஏற்றாஅங்கு

உருகி உகுதல் அஞ்சுவல் உதுக்காண்

(நற். 88: 1-5)


தோழிநாம் முன்னர்ச் செய்த வினை காரணமாக நீ துன்பப்படுகிறாய்இதனால் வருந்த வேண்டாம்நாம் படும் துன்பத்தைக் காதலனிடம் சென்று உரைப்போம்என் உடன் வருககடலிலே விளைந்த அமுதம் (உப்புமழை பெய்வதால் கரைந்து போவதுபோல உள்ளம் உருகி வருந்துகிறாய்’ என்று அந்தத் தோழி சொல்லிச் செல்கிறாள்

நெய்தல் நிலத்தில் உப்பளங்களில் பாத்திகள் அமைத்துக் கடல் நீரைப் பாய்ச்சி விளைவித்துக் குவித்து வைத்திருக்கும் உப்புக் குவியலில் மழை பெய்தால் எப்படி கரைந்து உருகுமோஅப்படி உருகியதாம் தலைவி உள்ளம்உப்பு விளையும் நெய்தல் நிலப் பகுதியில் நல்லந்துவனார் வாழ்ந்திருக்க வேண்டும்உப்புக் குவியல் மழையில் உருகும் காட்சியை காதலி உள்ளம் உருகுதலுக்கு உவமித்திருக்கிறார்உப்பை அமுதம் என்று அழைத்து மகிழ்ந்திருக்கிறார்.


                    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏