நற்றிணை Natrinai 88
ஆசிரியர்:- நல்லந்துவனார்
கி.மு. 2 ஆம் நூற்றாண்டுக்கு முந்தைய பாடல்
‘உப்பு’‘கடல்விளை அமுதம்’ என்று அழைத்து மகிழ்ந்துள்ளார் சங்கப் புலவர்.
தலைவியிடம் தோழி சொல்கிறாள்
யாம்செய் தொல்வினைக்கு எவன் பேதுற்றனை
வருந்தல் வாழி தோழி யாம் சென்று
உரைத்தனம் வருகம் எழுமதி புணர்திரைக்
கடல்விளை அமுதம் பெயற்கு ஏற்றாஅங்கு
உருகி உகுதல் அஞ்சுவல் உதுக்காண்
(நற். 88: 1-5)
தோழி! நாம் முன்னர்ச் செய்த வினை காரணமாக நீ துன்பப்படுகிறாய். இதனால் வருந்த வேண்டாம். நாம் படும் துன்பத்தைக் காதலனிடம் சென்று உரைப்போம். என் உடன் வருக. கடலிலே விளைந்த அமுதம் (உப்பு) மழை பெய்வதால் கரைந்து போவதுபோல உள்ளம் உருகி வருந்துகிறாய்’ என்று அந்தத் தோழி சொல்லிச் செல்கிறாள்.
நெய்தல் நிலத்தில் உப்பளங்களில் பாத்திகள் அமைத்துக் கடல் நீரைப் பாய்ச்சி விளைவித்துக் குவித்து வைத்திருக்கும் உப்புக் குவியலில் மழை பெய்தால் எப்படி கரைந்து உருகுமோ, அப்படி உருகியதாம் தலைவி உள்ளம். உப்பு விளையும் நெய்தல் நிலப் பகுதியில் நல்லந்துவனார் வாழ்ந்திருக்க வேண்டும். உப்புக் குவியல் மழையில் உருகும் காட்சியை காதலி உள்ளம் உருகுதலுக்கு உவமித்திருக்கிறார். உப்பை அமுதம் என்று அழைத்து மகிழ்ந்திருக்கிறார்.
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
No comments:
Post a Comment