குறுந்தொகைப் பாடல் எண்: 40


யாயும் ஞாயும் யார் ஆகியரோ

எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்

யானும் நீயும் எவ்வழி யறிதும்

செம்புலப் பெயனீர் போல

அன்புடை நெஞ்சம் தாங்கலந் தனவே.



குறுந்தொகைப் பாடல்  எண்40 (நாற்பது)

ஆசிரியர்: செம்புலப் பெயனீரார்.

திணை - குறிஞ்சி 

என்னுடைய தாயும் நின் தாயும் ஒருவருக்கொருவர் எத்தகைய உறவின் முறையினராவர்என் தந்தையும் நின்தந்தையும் எந்த முறையில் உறவினர்இப்பொழுது பிரிவின்றியிருக்கும் யானும் நீயும் ஒருவரையொருவர் எவ்வாறு முன்பு அறிந்தோம்இம்மூன்றும் இல்லையாகவும் செம்மண் நிலத்தின் பெய்த மழைநீர் அம்மண்ணோடு கலந்து அதன் தன்மையை யடைதல் போல அன்புடைய நம் நெஞ்சம் தாமாகவே ஒன்றுபட்டன.

வாழ்வதற்கு உரிய நல்ல இடம்??!!



நாடா கொன்றோ ; காடா கொன்றோ;

அவலா கொன்றோ ; மிசையா கொன்றோ;

எவ்வழி நல்லவர் ஆடவர்,

அவ்வழி நல்லை ; வாழிய நிலனே!


புறநானூறு - 187

பாடியவர்அவ்வையார்

திணைபொதுவியல் 

துறைபொருண்மொழிக் காஞ்சி


விளக்கம்:-

நாடாய் இருந்தால் என்னகாடாய் இருந்தால் என்னபள்ளமாய் இருந்தால் என்னமேடாய் இருந்தால் என்னஎங்கே மக்கள் நல்லவர்களாக இருக்கிறார்களோ அந்த நிலம் வாழ்வதற்கு உரிய நல்ல இடம்.


                                               🙏🙏🙏🙏🙏🙏🙏


சிஃபர் (Sifar - Tassili n'Ajjer) அல்ஜீரியா குகை ஓவியங்கள்




சிஃபர் (Sifar) என்பது அல்ஜீரிய புதிர்களின் நகரம்தொலைந்து போன நகரம்இது உலகின் எட்டாவது அதிசயம் என்று கூறலாம்மேலும் இது தெற்கு அல்ஜீரியாவில் உள்ள டிஜானெட்டில் உள்ள டாசிலி நாஜரில் (Tassili Najer) அமைந்துள்ளது.


இதில் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுவரோவியங்கள் மற்றும் கல்வெட்டுகள் உள்ளன.

யுனெஸ்கோ இதை உலக பாரம்பரிய பட்டியலில் வகைப்படுத்தியதுமேலும் அதன் பகுதி ஜோர்டானின் அளவைப் போன்றதுஇது உலகின் மிகப்பெரிய குகை நகரம் ஆகும்இது எகிப்திய பிரமிடுகளை விட பழமையானது.

இதில் உள்ள சில சுவரோவியங்கள் 12,000 ஆண்டுகள் பழமையானவை என்று கருதப்படுகிறது







                               🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏