வாழ்வதற்கு உரிய நல்ல இடம்??!!



நாடா கொன்றோ ; காடா கொன்றோ;

அவலா கொன்றோ ; மிசையா கொன்றோ;

எவ்வழி நல்லவர் ஆடவர்,

அவ்வழி நல்லை ; வாழிய நிலனே!


புறநானூறு - 187

பாடியவர்அவ்வையார்

திணைபொதுவியல் 

துறைபொருண்மொழிக் காஞ்சி


விளக்கம்:-

நாடாய் இருந்தால் என்னகாடாய் இருந்தால் என்னபள்ளமாய் இருந்தால் என்னமேடாய் இருந்தால் என்னஎங்கே மக்கள் நல்லவர்களாக இருக்கிறார்களோ அந்த நிலம் வாழ்வதற்கு உரிய நல்ல இடம்.


                                               🙏🙏🙏🙏🙏🙏🙏


சிஃபர் (Sifar - Tassili n'Ajjer) அல்ஜீரியா குகை ஓவியங்கள்




சிஃபர் (Sifar) என்பது அல்ஜீரிய புதிர்களின் நகரம்தொலைந்து போன நகரம்இது உலகின் எட்டாவது அதிசயம் என்று கூறலாம்மேலும் இது தெற்கு அல்ஜீரியாவில் உள்ள டிஜானெட்டில் உள்ள டாசிலி நாஜரில் (Tassili Najer) அமைந்துள்ளது.


இதில் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுவரோவியங்கள் மற்றும் கல்வெட்டுகள் உள்ளன.

யுனெஸ்கோ இதை உலக பாரம்பரிய பட்டியலில் வகைப்படுத்தியதுமேலும் அதன் பகுதி ஜோர்டானின் அளவைப் போன்றதுஇது உலகின் மிகப்பெரிய குகை நகரம் ஆகும்இது எகிப்திய பிரமிடுகளை விட பழமையானது.

இதில் உள்ள சில சுவரோவியங்கள் 12,000 ஆண்டுகள் பழமையானவை என்று கருதப்படுகிறது







                               🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏




அனுபவமே சிறந்தது


திருப்புலம்பல்


உற்றாரை யான் வேண்டேன்ஊர் வேண்டேன்பேர் வேண்டேன்;

கற்றாரை யான் வேண்டேன்கற்பனவும் இனி அமையும்

குற்றாலத்து அமர்ந்து உறையும் கூத்தாஉன் குரை கழற்கே,

கற்றாவின் மனம் போலகசிந்துஉருக வேண்டுவனே


நூல்திருவாசகம் (திருப் புலம்பல்)

பாடியவர்மாணிக்கவாசகர்





பதப்பொருள் : 

குற்றாலத்து அமர்ந்து உறையும் -திருக்குற்றாலத்தில் விரும்பி வீற்றிருக்கின்ற

கூத்தா - கூத்தப்பெருமானே

உற்றாரை யான் வேண்டேன் - உறவினரை யான் விரும்புவேனல்லேன்

ஊர் வேண்டேன் - வாழ்வதற்கு ஊரை விரும்புவேன் அல்லேன்

பேர் வேண்டேன் - புகழை விரும்புவேன் அல்லேன்

கற்றாரை யான் வேண்டேன் - கல்வியை மட்டும் கற்றவரை யான் விரும்பமாட்டேன்

கற்பனவும் இனி அமையும் கற்க வேண்டிய கல்விகளும் இனி எனக்குப் போதும்

உன் குரைகழற்கே - உனது ஒலிக்கின்ற கழலையுடைய திருவடிக்கே

கற்றாவின் மனம் போல கன்றையுடைய பசுவினது மனத்தைப் போல

கசிந்து உருக வேண்டுவன் - கனிந்து உருகுவதை யான் உன்பால் விரும்புகின்றேன்.


                                                🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏