திருப்புலம்பல்
உற்றாரை யான் வேண்டேன்; ஊர் வேண்டேன்; பேர் வேண்டேன்;
கற்றாரை யான் வேண்டேன்; கற்பனவும் இனி அமையும்;
குற்றாலத்து அமர்ந்து உறையும் கூத்தா! உன் குரை கழற்கே,
கற்றாவின் மனம் போல, கசிந்து, உருக வேண்டுவனே
நூல்: திருவாசகம் (திருப் புலம்பல்)
பாடியவர்: மாணிக்கவாசகர்
பதப்பொருள் :
குற்றாலத்து அமர்ந்து உறையும் -திருக்குற்றாலத்தில் விரும்பி வீற்றிருக்கின்ற
கூத்தா - கூத்தப்பெருமானே
உற்றாரை யான் வேண்டேன் - உறவினரை யான் விரும்புவேனல்லேன்
ஊர் வேண்டேன் - வாழ்வதற்கு ஊரை விரும்புவேன் அல்லேன்
பேர் வேண்டேன் - புகழை விரும்புவேன் அல்லேன்
கற்றாரை யான் வேண்டேன் - கல்வியை மட்டும் கற்றவரை யான் விரும்பமாட்டேன்
கற்பனவும் இனி அமையும் - கற்க வேண்டிய கல்விகளும் இனி எனக்குப் போதும்
உன் குரைகழற்கே - உனது ஒலிக்கின்ற கழலையுடைய திருவடிக்கே
கற்றாவின் மனம் போல - கன்றையுடைய பசுவினது மனத்தைப் போல
கசிந்து உருக வேண்டுவன் - கனிந்து உருகுவதை யான் உன்பால் விரும்புகின்றேன்.
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
No comments:
Post a Comment