களப்பிரர் ஆட்சியில் தமிழகம் - மயிலை சீனி. வேங்கடசாமி

"களப்பிரர் ஆட்சியில் தமிழகம் " 
மயிலை சீனிவேங்கடசாமி 




களப்பிரரின் இருண்டகாலம் இந்நூலினால் ‘விடியற்காலம்’ ஆகிறதுகிட்டதட்ட கிபி 250-575 ஆண்டு வரை ஆண்ட களப்பிரர்கள்களப்பரர்கள் , களப்ராக்கள் என்றைழைக்கப்பட்டனர் மெல்ல வளர்ந்து தென்னகத்தை கிட்டதட்ட 300 ஆண்டுகள் ஆண்டு வந்துள்ளனர்அவர்கள் தமிழகத்துக்கு அருகில் இருந்த பகுதியில் வசித்த வடுகர் இனத்தவர்எனவே அவர்கள் திராவிட இனத்தவரேவடுகக் கருநாடராகிய களப்பிரர் தமிழகத்தைக் ஏழத்தாழ கி.பி. 250 - ல் அல்லது அதற்குச் சற்றுப் பின்னர் கைப்பற்றினார்கள்




களப்பிரர்கள் பற்றிய தகவல்கள் சென்ற நூற்றாண்டில்தான் கிடைத்திருக்கிறதுகளப்பிரர்கள் பற்றி நமக்கு அறிய உதவிய செப்பேடுகளில் முதன்மையானவை 

  1. வேள்விக்குடி செப்பேடு (இது கிபி 8 நூற்றாண்டை சேர்ந்த செப்பேடு - வரி 39 -46)
  2. தளவாய்புரச் செப்பேடு (வரி 39-40; 131-132) 
  3. பள்ளன் கோவில் செப்பேடு (சுலோகம் 4,5)
  4. வேலூர்ப்பாளையம் செப்பேடு (சுலோகம் 10)
  5. கூரம் செப்பேடு (வரி 15)
  6. புல்லூர் செப்பேடு மற்றும் பட்டத்தால் மங்கலம் செப்பேடு ( சுலோகம் 9)


(பூலாங்குறிச்சி கல்வெட்டு பற்றி இந்த புத்தகத்தில் கூறவில்லைஎன்றால் 1979 ஆம் ஆண்டுதான் பூலங்குறிச்சிகல்வெட்டு தமிழக தொல்லியல் துறையினரால் கண்டறியப்பட்டது.)


களப்பிரர்கள்மூவேந்தர்களுக்கு முன்பே பல்லவசளுக்கியர்களுக்கு இணையானவலுவான நிலையில் இங்கு ஆட்சி புரிந்துள்ளனர்அதாவதுசேர,சோழ,பாண்டியர்கள் குறுநில மன்னர்களாககளப்பிரர்கள் பெருங்குடையின் கீழ்அவர்களின் ஆட்சிக்குட்பட்டவர்களாககளப்பிர அரசர் தொண்டை நாட்டைத்தவிர சேரசோழபாண்டிய நாடுகளைவென்று அரசாண்டார்கள் என்பது உறுதியாகத் தெரிகிறது.


6ஆம் நூற்றாண்டு இறுதியில் பல்லவ சிம்மவிஷ்னு களப்பிரரை வென்று சோழ நாட்டைக் கைப்பற்றிக் கொண்டான்மேலும்பாண்டியன் கடுங்கோன் களப்பிரரை வென்று பாண்டி நாட்டை கைப்பற்றிக் கொண்டான்.


இப்படி பற்பல வரலாற்று தகவல்கள்சான்றுகள்

செப்பேடுகள் கொண்டும்சங்க கால இலக்கியங்களான அகநானூறு , குறுந்தொகைசிலப்பதிகாரம்சீவகசிந்தாமணிபதினென் கீழ்க்கணக்கு நூல்கள்பட்டினப்பாலைபரிபாடல்புறநானூறுபெரியபுராணம்பெருங்கதைமணிமேகலை உட்பட 130க்கும் மேலான தரவு நூல்களை கொண்டும் ஆய்ந்து எழுதப்பட்டிருக்கிறதுஇந்நூல்.


சைவ - வைணவம் (இந்துபண்பாடுகளைச் சாராதவர்களை அந்நியர்களாகவும் எதிரிகளாகவும் கட்டமைக்கும் வரலாற்றுச் சூழலில்தமிழின் தொன்மையையும்பன்முகத்தன்மையும்தமிழ் வழியில் சமயத்தை வளர்த்த சமணபௌத்தம் பற்றிய கருத்துக்களை எடுத்துரைக்கிறார் திருமயிலை சீனிவேங்கடசாமி அவர்கள்.


களப்பிரர் பற்றி இந்த நூல் மேலும் சில தகவல்கள்:-


👉 களவர் வேறு களப்பிரர் வேறு

👉 கருநாட தேசத்தில் இருந்த களப்பிர்ரின் களபப்பு இராச்சியம் மைசூர் நாட்டைச் சேர்ந்த கோலார் வரையிலும் பரவயிருந்ததுகோலார் நந்திமலை கலப்பிரர் மலை என்று கூறப்பட்டது

👉 “அச்சுதன்” என்பது களப்பிர அரசர்களின் பொதுப்பெயர் என்று தோன்றுகிறதுபாலி மொழியில் எழுதப்பட்ட ஒரு பௌத்தச் செய்யுள் ஒரு களப்பிர அரசரை அச்சுதன் என்று கூறுகிறது.

👉 கிபி 3 நூற்றாண்டு வரை இருந்த தமிழி என்ற வரி வடிவத்தை வட்டெழுத்தாக மாற்றியர்கள் களப்பிரர்கள்ஏன் இந்த எழுத்தை மாற்றினார்கள் என்றால் தமிழி என்ற எழுத்து கோடுகளை கொண்ட எழுத்துஓலை சுவடிகளில் எழுதினால் ஓலை சுவடிகள் கிழிந்து விடும்மேலும் அது நீண்ட காலத்துக்கு நிலைக்காது என்பதால் கோடுகளை கொண்ட எழுத்தை வட்டெழுத்தாத மாற்றினார்.

👉 தமிழில் புதிய பாக்களை உருவாக்கினர்களப்பிரர் தமிழகத்தை கைப்பற்றும் முன் தமிழில் நான்கு பாக்கள் இருந்தனஅவைகள்  01. ஆசிரியப்பா 02.வஞ்சிப்பா 03.வெண்பா 04.கலிப்பாகளப்பிரர்கள் மேலும் புதிய மூன்றுபாவினங்களை உருவாக்கினர்.  அவைகள் 01. தாழிசை 02. துறை பா 03. விருத்தப்பாபழைய நான்கு பாக்களும் புதிய மூன்று பாக்களும் கலந்து ( 4 x 3 ) புதிதாக பனிரெண்டு வகை செய்யுள்கள் உருவாக்கப்பட்டன.

👉 பல்லவ சிம்மவிஷ்னு களப்பிரரை வென்று சோழ நாட்டைக் கைப்பற்றிக் கொண்டான்.

👉 பாண்டியன் கடுங்கோன் களப்பிரரை வென்று பாண்டி நாட்டை கைப்பற்றிக் கொண்டான்

👉 தமிழ் நாட்டைக் களப்பிரர் அரசாண்ட காலத்தில் கொடும்பாளூர் வட்டாரத்தை இருக்குவேள் அரசர் அரசாண்டனர்சங்க காலத்தில் இருந்த “இருங்கோவேள்” வேறு “இருக்குவேள்” வேறு

👉 களப்பிரர் காலத்தில் சைவ-வைணவ சமயங்கள் மங்கி மறையும் நிலையில் இருந்ததற்குக் காரணம் பௌத்தசமண சமயங்கள் பிரசாரமே.காவச்சிர நந்தி திரமிளா (தமிழ/திராவிடன்என்ற சங்கத்தை கிபி 470 உருவாக்கினார்

👉 பதினென்கீழ்கணக்கு நூல்களில் 1. திருக்குறள் 2. களவழி நாற்பது 3. முதுமொழிக் காஞ்சி ஆகிய மூன்றுநூல்களும் கிபி 250க்கு முன்பு எழுதப்பட்டவைநாலடியார் என்னும் நூல் கிபி 7ஆம் நூற்றாண்டு களப்பிரர் ஆட்சிக்குபிறகு எழுதப்பட்டது

பிற பதினான்கு நூல்களும் களப்பிரர் ஆட்சி காலத்தில் கிபி 3-6ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்டவைபெரும்பான்மையானவை ஒழுக்க நெறிகளை போதித்தவை

👉 பக்தி இயக்கம் தேன்றி இறைவனை நினைத்தாலே முக்தி என்று பிரச்சாரம் செய்து சைவ-வைணமும் பக்திசெய்தால் பேரின்பமாகிய மோட்சம் (வீடு பேறுபெறலாம் என்றது


களப்பிரர் பற்றி மேலும் பல நூல்கள்:- 

  1. திரு   அறவாணன் அவர்கள் எழுதிய “களப்பிர காலம் பொற்காலம்” என்ற நூல்
  2. பேராசிரியர்  பத்மாவதி அவர்கள் எழுதிய “களப்பிரர் கால மொழி எழுத்து கலை சமயம்” என்ற நூல்

                     🙏🙏🙏🙏🙏🙏🙏



ஓரை (தமிழ்) மற்றும் ஹோராவும் (கிரேக்க- சமஸ்கிருதம்) ஒன்றா?

 ஓரை (தமிழ்) மற்றும் ஹோராவும் (கிரேக்கசமஸ்கிருதம்)



ஓரையும் ஹோராவும் ஒன்றா? ஒலி வடிவில் ஒன்றுபோலத் தோன்றுகிற இரண்டு சொற்களும் ஒன்றுதானாகி.மு.நூற்றாண்டுக்கு முன்பு இருந்த தொல்காப்பியர்கி.பி.5ஆம் நூற்றாண்டில் சமஸ்கிருதத்தில் வழங்கிய ஹோராவைஎப்படி எடுத்திருக்க முடியும்ஹோராதான் ஓரை ஆயிற்றாஓரை என்பது வேறுஹோரா என்பது வேறு அல்லவாகுதிரைக்குக் குர்ரம் என்றால் ஆனைக்கு அர்ரம் என்று கூறினானாமே ஒரு மேதைஅது போன்றல்லவா இருக்கிறது இது!


ஓரை என்னும் தமிழ்ச் சொல் வேறுஹோரா என்னும் கிரேக்கசமஸ்கிருதச் சொல் வேறுஒலி வடிவில் இரண்டும் ஒரே சொல்லைப் போலக் காணபட்டாலும் இரண்டுக்கும் பொருள் வெவ்வேறுஹோரா என்னும் கிரேக்கச் சொல்லுக்குஇராசி அல்லது முகுத்தம் என்று வான நூலில் பொருள் கூறப்படுகிறதுஓரை என்னும் தமிழ்ச் சொல்லுக்கு மகளிர்கூட்டம் (ஆயம்என்பது பொருள்பழைய சொற்கள் சிலவற்றின் பொருள் மறைந்து போய்விட்டது போல ஓரையின் பொருளும் பிற்காலத்தில் மறைந்து போயிற்றுமிகப் பிற்காலத்தவரான உரையாசிரியர்கள் இச்சொல்லின் பழைய பொருளை (கருத்தைஅறியாமல்இதை ஹோராவின் திரிபு என்று கருதித் தவறான உரையை எழுதிவிட்டனர்.


மறைத்த ஒழுக்கத்து ஓரையும் நாளும்
துறந்த ஒழுக்கம் கிழவோர்க் கில்லை

(தொல்.பொருள் 135)

என்னும் தொல்காப்பியச் சூத்திரத்தில் வருகிற ஓரை என்பதற்குப் பிற்காலத்தவரான உரையாசிரியர்கள் எழுதிய பிழையான உரைகளைக் காண்கஉரையாசிரியர்கள் காட்டிய தவறான வழியில் சென்ற சிவராசரும் வையாபுரியாரும் இவ்வாறு தவறான கருத்துக் கொண்டதில் வியப்பொன்றும் இல்லைஇதற்குப் பேராசிரியர் சோமசுந்தர பாரதியார் அவர்கள் எழுதியுள்ள நேரான உரை காண்க (சோமசுந்தர பாரதியார்,‘தொல்காப்பிய ஆராய்ச்சி’, அண்ணாமலைப்பல்கலைக்கழக இதழ்ஆறாம் தொகுதிபக். 142 143. இதே கருத்தை அவர் ஆங்கிலத்தில் எழுதியுள்ளகட்டுரையிலும் காணலாம்: (Journal of the Annamalai University, Vol. VI, p. 138). ஓரை என்னும் சொல்லுக்குப் பேராசிரியர் பாரதியார் அவர்கள் கூறும் விளக்கம் வருமாறு:-


“ஓரை - விளையாட்டென்பதுசங்க இலக்கியம் முழுவதும் அச் சொல்லுக்கு அப்பொருளாட்சியுண்மையால் விளங்கும்ஓரைக்கு இராசி அல்லது முகூர்த்தம் எனும் பொருளுண்மைக்குத் தொல் காப்பியத்திலேனும் சங்க இலக்கியம் எதிலேனும் சான்று காணுதலரிதுமிகவகன்ற பிற்காலப் புலவர் சிலர் முகூர்த்தம் (அதாவது ஒரு நாளினுள் நன்மை தீமைகளுக்குரியதாகப் பிரித்துக் கொள்ளப்படும் உட்பிரிவுஎன்ற பொருளில் இச்சொல்லைப் பிரயோகிக்கலானார்அக்கொள்கைக்கே சான்றில்லாத சங்க இலக்கியத்தில், ‘ஓரை’ என்னுந் தனித் தமிழ்ச் சொல்லுக்குஅக்காலத்திலக்கியங்களால் அதற்குரிய பொருளாகக் காணப்பெறும் விளையாட்டையே அச்சொல் குறிப்பதாகக்கொள் ளுவதே முறையாகும்அதை விட்டுப் பிற்கால ஆசிரியர் கொள்கையான இராசி அல்லது முகூர்த்தம் எனும்பொருளை இத்தமிழ்ச் சொல்லுக்கு ஏற்றுவதே தவறாகும்அதற்கு மேல் அச்சொல்லைக் கொண்டு தொல்காப்பியம்அடையப் பிற்காலத்து நூலென்று வாதிப்பது அறிவுக்கும் ஆராய்ச்சியறத்திற்கும் பொருந்தாது.”


ஓரை என்னும் தமிழ்ச் சொல்லுக்குப் பேராசிரியர் சோமசுந்தர பாரதியாரவர்கள் விளையாட்டு என்று பொருள்கூறியுள்ளார்இது அச்சொல்லுக்கு மிக அண்மையான பொருளேஇதற்குச் சரியான பொருள் சிறுவர் சிறுமியர் வாழும்இடம் என்று தோன்றுகிறதுபழங்காலத்துத் திராவிட இனத்தார் தாங்கள் வாழ்ந்த கிராமத்திலுள்ள சிறுவர்கூட்டத்தையும் சிறுமியர் கூட்டத்தையும் வெவ்வேறாகப் பிரித்து அவர்களைத் தனித்தனியே வெவ்வேறு இடங்களில்வைத்து வளர்த்தார்கள்வடஇந்தியாவில் வாழ்ந்த திராவிடர்களும் இவ்வாறு சிறுவர் சிறுமியரை வெவ்வேறாகப் பிரித்து வைத்துள்ள இடத்துக்கு ஓரை என்று பெயர் கூறினார்கள் என்று தெரிகிறது.

வடஇந்தியாவிலும் ஆதிகாலத்தில் திராவிட இனமக்கள் வெவ்வேறு இடங்களில் வாழ்ந்தார்கள்அந்தத் திராவிடர் இக்காலத்தில் ஆரியரோடு கலந்து மொழிகலைபண்பாடுகளில் மாறிப் போனார்கள்அவர்களில் சில இனத்தார் இன்றும் உள்ளனர்அவர்கள் தங்கள் பழைய இடங்களிலிருந்து துரத்தப்பட்டு வேறு இடங்களில் போய் வாழ்கிறார்கள்அவர்களில் முண்டா என்னும் திராவிட இனத்தார் சோட்டா நாகப்பூரில் இருக்கிறார்கள்அவர்களுடைய திராவிட மொழியில் இக்காலத்தில் மைதிலிவங்காளிஇந்தி முதலான மொழிகளின் சொற்களும் கலந்துவிட்டனஆனாலும்பழைய திராவிட இனத்தவரின முண்டாரி மொழியில் ஓரை என்னும் சொல் இன்றும் வழங்குகிறதுஇது ஹோரா என்னும் சொல்லின் திரிபு அன்றுபழைய திராவிடச் சொல்லாகும்முண்டா இனத்து மணமாகாத இளைஞர்களும் மணமாகாத இளம் பெண்களும் தங்கள் வீடுகளில் படுத்து உறங்குவதில்லைஅவர்களுக்கென்று தனித்தனியே பெரியகொட்டகை அமைக்கப்பட்டு அந்தக் கொட்டகையில் போய்ப் படுத்து உறங்குகிறார்கள்இந்தக் கொட்டகைகளுக்கு கிதிஓரா என்று அவர்கள் பெயர் கூறுகிறார்கள்ஆண் மக்களுக்குத் தனியாகக் கிதிஓராவும் இருக்கின்றனமுண்டாரிமொழியின் கிதிஓராவுடன் தமிழ் மொழியின் ஓரையை ஒப்பிட்டு நோக்குககிதிஓரா என்பதில் கிதி என்பதன் பொருள் தெரியவில்லைஓரா என்பது ஓரை என்பதில் சற்றும் ஐயமில்லை. எனவேஓரை என்பது திராவிட இனமொழிச் சொல் என்பது தெளிவாகத் தெரிகிறதுதொல்காப்பியர் இந்த ஓரையைத்தான் கூறியுள்ளார்இந்த ஓரை கிரேக்க - சமஸ்கிருத ஓரை அன்று.

மிகப் பழங்காலத்திலேயே திராவிட இனமக்கள் வாழ்ந்த ஊர்களில் சிறுவர்களுக்குத் தனியாகவும் சிறுமிகளுக்குத்தனியாகவும் ஓரா (ஓரைஎன்னும் பெரிய கொட்டகைகளை அமைத்திருந்தனர் என்பது தெரிகிறதுஇக்காலத்தில் பழங்குடி மக்களைப் பற்றி ஆராய்ச்சி செய்கிறவர்கள் இதுபற்றியும் ஆராய்ந்தால் உண்மை கிடைக்கும்தொல்காப்பியர் காலத்திலும் தமிழ்த் திராவிடர்கள் தங்கள் இளைஞர் களுக்கும் மகளிர்க்கும் தனித்தனி ஓரைகளைக்கட்டி வைத்திருந்தனர் என்பதைத் தொல்காப்பியர் கூறுகிற ஓரை என்னுஞ் சொல்லிலிருந்து ஊகிக்கலாம்சங்கச்செய்யுட்களில் ஓரை (ஓராஎன்னுஞ் சொல் காணப் படுகிறதுசங்கப் புலவரான உலோச்சனாரும் ஓரை என்னுஞ்சொல்லை ஆள்கிறார். “ ஓரை மகளிரும் ஊரெய்தினரே” (நற்றிணை 398: 5) என்று அவர் கூறுவது காண்கஆகவேசிவராசபிள்ளையும் வையாபுரிப்பிள்ளையும் மற்றவர்களும் தவறாகக் கருதுகிறபடி ஓரை என்னுஞ் சொல் கிரேக்க - சமஸ்கிருதச் சொல் அன்றுஅது தூய திராவிட மொழிச் சொல் என்பதை அறிகிறோம்ஓரை என்னும் திராவிடச்சொல்லின் பழமையை அறியாத சிவராசர்களும் வையாபுரியார்களும் ஓரையைக் கூறுகிற தொல்காப்பியரை மிகமிகப்பிற்காலத்து வச்சிரநந்தி சங்கத்தில் இருந்தவர் என்று கூறுவது வரலாறு அறியாத போலிவாதம் ஆகும்திராவிடஇனத்து மக்கள் பழங்காலத்தில் வழங்கிவந்த ஓரா ஓரையைக் கூறுகிற தொல்காப்பியர் மிகமிகப் பழங்காலத்தில்இருந்தவர் என்பது இதிலிருந்து நன்றாகத் தெரிகிறது


நன்றி:- மயிலை சீனி வேங்கடசாமி 


https://www.tamilvu.org/slet/ln00101/ln00101pag.jsp?bookid=295&pno=139



                     🙏🙏🙏🙏🙏🙏🙏🙏