பையம்பள்ளி - தமிழகத்தில் புதிய கற்காலம்
தமிழகத்தில் புதிய கற்காலம் என்பது கி.மு. 3000 வரை நிலவியது. குறிப்பாக தமிழகத்தின் வட ஆர்க்காடு பகுதியிலுள்ள பையம்பள்ளியில் இப்புதிய கற்காலச் சின்னங்கள் அதிகம் காணப்படுகின்றன
பையம்பள்ளியில் காணப்படும் புதிய கற்காலச் சமுதாயம் 2 விதத்தில் காணப்படுகின்றது
முதற்பிரிவு
இக்கால மக்கள் வெளுப்பு மிக்க சாம்பல் நிற மட்பாண்டங்கள், மெருகூட்டப்பட்ட சாம்பல் நிற மட்பாண்டங்கள், சிவப்பு நிற மட்பாண்டங்கள் ஆகியவற்றை பயன்படுத்தினர். பல வகைக் கற்களால் ஆன கற்கருவிகள், கற்கோடாரிகள், தானியங்களை அரைக்க, இடிக்க உதவும் கற்கருவிகள் ஆகியனவும் கிடைத்துள்ளன.
மேலும் இக்கால மக்கள் வாழ்ந்த பல்வேறு அளவுள்ள குழி வீடுகளில் குச்சி நடுகுழிகள் காணப்படுவதால் இவர்கள் கூரைகள் அமைந்த குடிசைகளில் வாழ்ந்ததாகத் தெரிகிறது.
இரண்டாம் பிரிவு
இதே புதிய கற்காலத்தைச் சேர்ந்த இரண்டாம் பிரிவு மக்கள் சாம்பல் மற்றும் சிவப்பு நிற மட்கலன்களையும் பயன்படுத்தினர். குறிப்பாக சக்கரத்தால் செய்யப்பட்ட பானைகள் இங்கு கிடைத்தனவற்றுள் சிறந்தனவாம்.
உணவு உற்பத்தி
கொள்ளு, பச்சைப்பயறு, ஆடு, மாடு, பன்றி, மான் போன்ற மிருகங்களையும் வளர்த்தனர். அதிலிருந்து வரும் பொருட்களை உணவிற்கு பயன்படுத்தினர்.
பரவல்
மேலும் இக்காலக் கருவிகள் தமிழகத்தில் பல இடங்களில் கண்டெடுக்கப்பட்டுள்ளன. அவற்றின் விவரம்,
வட ஆற்காடு பகுதிகள் - அப்புக்கல்லு, கல்லேரிமலை, சவ்வாது மலை, திருமலை, அம்பூர், சந்திராபுரம், கீழ்விளம்புச்சி, கொளுதம் பத்து, குத்ததூர், மலையம்பத்து, நெல்லிவாசல் நாடு, பழையதலூர், புதூர்நாடு, புலியூர், சோழிங்கூர், விண்ணமங்கலம்
தர்மபுரி மாவட்டம் - கொல்லப்பள்ளி, தொகரப்பள்ளி, பன்னிமடுவ, தயில்மலை, முள்ளிக்காடு, கப்பலாவடி, பர்கூர், கடத்தூர், மரிரெட்டிப்பள்ளி, மயிலாடும்பாறை, மோடூர், கொத்துக்குப்பம், வேடர் தத்தக்கல்
தமிழர் வரலாற்றில் துணி
அறுவை’ என்ற பெயரால் தமிழில் துணி குறிப்பிடப்பட்டுள்ளது. அழகர் மலையில் காணப் படும் கி.மு. 2 ஆம் நூற்றாண்டுக் காலத்திய தொல் தமிழ் (பிராமி) கல்வெட்டில் ‘அறுவை வணிகன்’ என்ற தொடர் இடம் பெற்றுள்ளது. தமிழகத்தில் துணி வணிகத்தின் தொன்மையை இக்கல்வெட்டால் அறிய முடிகிறது. இளவேட்டனார் என்ற சங்க காலக் கவிஞர் ‘அறுவை வணிகர்’ என்ற அடை மொழியினால் குறிப்பிடப்பட்டுள்ளார்.
வரலாற்றுக்கு முற்பட்ட காலத் தமிழகத்திலேயே துணியானது இடம்பெற்றுள்ளது என்று குறிப்பிடும் ஆசிரியர், இதற்குச் சான்றாக வட ஆற்காடு மாவட்டத்திலுள்ள பையம்பள்ளி என்ற இடத்தில் கிட்டிய தொல்லியல் பொருட்களில் நூற்கும் கருவி இடம் பெற்றுள்ளதைக் குறிப்பிடு கிறார்
தமிழ்நாட்டின் தொல்லியல் ஒப்பீட்டளவில் சென்னைக்கு அருகில் உள்ள பல்லாவரம் என்ற இடத்தில் பழங்கால கைக்கோடாரி கண்டுபிடிப்பு ஒரு தொடக்கமாக இருந்தது. ராபர்ட் புரூஸ் ஃபுட், தமிழ்நாட்டின் வடபகுதிகளில், குறிப்பாக பாலாறு மற்றும் கொற்றலையாற்றின் கரையில் ஆய்வு செய்து, அதிரம்பாக்கம் மற்றும் குடியம் ஆகிய இடங்களில் பலகற்கால கருவிகளைக் கண்டுபிடித்தார்.
அதன் தொன்மை இரண்டு லட்சம் ஆண்டுகள் பழமையானது என்றும் கூறினார். இந்த இடங்களைத் தவிர, சென்னைக்கு மிக அருகில் அமைந்துள்ள நெய்வேலி, பூண்டி மற்றும் வடமதுரை ஆகியவை பழைய கற்காலக்கருவிகள் பலவற்றைக் கொடுத்தன. இந்த இடங்கள் அனைத்தும் மெட்ராஸ் மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் அமைந்துள்ளதால், இந்த கலாச்சார மையம் "மெட்ராஸ் கை கோடாரி" தொழில் என்று அழைக்கப்பட்டது. இங்குதயாரிக்கப்பட்ட கருவிகளில் கை அச்சுகள், சாப்பர்கள், கூழாங்கற்கள், கத்திகள், ஸ்கிராப்பர்கள், புள்ளிகள், செதில்கள் மற்றும் டிஸ்காய்டு ஆகியவை அடங்கும்.
திருவள்ளூர் மாவட்டம் அத்திரம்பாக்கத்தில் கண்டெடுக்கப்பட்ட கைக் கோடாரி ஆப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டதைப் போன்றது.
http://ignca.nic.in/pdf_data/rockart_2012/rockart_2012_brochure.pdf
http://www.sciencedirect.com/science/article/pii/
http://www.samorini.it/doc1/alt_aut/ad/chinnian.pdf
http://www.asi.nic.in/nmma_reviews/Indian%20Archaeology%201967-68%20A%20Review.pdf
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏