இடித்து கட்டுவது இவர்களுக்கு ஒன்றும் புதிதல்ல
குறிப்பு: மகேந்திரவர்மன்- மயிலை சீனி வேங்கடசாமி
கிபி 7ஆம் நூற்றாண்டில் படலிபுரத்திலிருந்து சமணப் பள்ளியை இடித்து, அந்த கற்களை கொண்டு திருவதிகைச் சிவன் கோயிலை ‘குணதரவீச்சரம்’ கட்டினான் என்று பெரியபுராணம் கூறுகிறது.
"வீடறியாச் சமணர்மொழி,பொய்யென்று மெய்யுணர்ந்த
காடவனும் திருவதிகை நகரின்கட் கண்ணுதற்குப் பாடலிபுத்திரத்தில் அமண் பள்ளியொடு பாழிகளும்
கூட இடித்துக்கொணர்ந்து குணதரவீச்சரம் எடுத்தான்”
இந்த பாடலிபுரத்தின் சம்மணப் பள்ளியில் தான் திருநாவுக்கரசர் என்று அழைக்கப்படுகிற 'மரூணிக்கியார்' என்ற இயற்பெயர் கொண்ட 'தர்மசேனர்' என்ற சமண சமயமத குருவாக வாழ்ந்து வந்தார். தனது 55 வது வயதில் சூலைநோய் காரணமாக; அது குணம் அடைய வேண்டும் என்ற காரணத்திற்காக சைவ மதம் மாறினார் இந்த சமண மதகுரு. சமண மதத்தை ஏற்று ஆட்சி செய்த "மகேந்திரவர்மனை" சைவ மதத்திற்கு மாற்றியதும் இந்த மரூணிக்கியார்/தர்மசேனர் என்ற திருநாவுக்கரசர்தான். சைவ மதம் மாறிய பிறகு என்னன்ன செய்தார்கள் என்பதை மேலே கூறப்பட்ட பெரியபுராண செய்யுள் கூறுகிறது.
பெரியபுராணச் செய்யுளில் சேக்கிழார் ‘குணதரவீச்சரம்’ என்றே கூறியுள்ளார். குணதரன் என்னும் அரசன் கட்டிய கோயில் என்பதே இதன் பொருள். குணதரன் என்னும் பெயர் குணபரன் என்ற பெயரின் மரூஉ என்றும், ஆகவே குணபரன்,குணதரன் என்னும் இரண்டு சொற்களூம் ஒரே அரசனைக் குறிக்கின்றன.
‘குணபரன்’ மகேந்திரவர்மனின் சிறப்பு பெயர்களில் ஒன்று ஆகும்.
பாடலிபுரம் என்பது தென்னார்க்காடு மாவட்டத்தில் இருந்தது. அக்காலத்தில் பேர் போன சமணப்பள்ளி இந்த பாடலிபுரத்தில் இருந்தது. இந்த சமணப் பள்ளி தான் "லோகவிவாகம்" என்னும் நூலை "சர்வநந்தி" என்பவர் கிபி 458 ல் சிம்மவர்மன் என்னும் பல்லவ மன்னன் காஞ்சிபுரம் ஆட்சி செய்தபோது எழுதப்பட்டது.
இந்த சமணப்பள்ளியை இடித்து அதன் கற்களை கொண்டு திருவதிகைச் சிவன் கோயிலை கட்டினார்கள்.
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
No comments:
Post a Comment