“திராவிடம் யாருக்கு கசக்கும்”
ஆசிரியர் - பேரா. அ. கருணானந்தம்
திராவிடம் என்பது ஆரியம் அல்லாத ஆரியருக்கு முற்பட்ட ஒரு தொன்மையான நாகரீக மரபு என்பது ஆகும். சிந்து வெளி நாகரிகத்தை பார்க்கின்றோம், மொசபடோமிய நாகரிகத்தை பார்க்கின்றோம், இந்த நாகரிகங்களை படைத்தவர்கள் ‘இனக்கூறு’ வழியாக ‘உடற்கூறு’ அடிப்படையில் “திராவிடர்கள்” என்று வரலாற்று அறிஞர்கள் கூறுகின்றனர்.
திராவிடத்திற்கு பல மொழிகள் உண்டு. திராவிடம் என்பதற்கு பல பரிணாமங்கள் உண்டு. ஒற்றை பரிணாமத்தில் பார்த்து விட முடியாது.
திராவிடம் என்பது தமிழ் சொல்லா?! சங்ககாலத்தில் இருந்ததா?! என்ற கேள்வி எல்லாம் வருகிறது. சங்கம் என்ற சொல்லே சங்க நூல்களில் இல்லை, அதனால் இவை எல்லாம் சங்க நூல்கள் இல்லை என்று ஆகிவிடுமா?! சொல்லை வைத்து கொண்டு குழப்பத்தை உருவாக்க வேண்டிய அவசியம் சிலருக்கு உண்டு. அந்த சிலர், வெறுப்புணர்வையும் பரப்பும் ஆரிய கங்கானிகள்.
அந்த சிலர் யார் என்றால்:- ராஜராஜ சோழன் எங்கள் ஜாதி என்று ஒருவர் சொல்கிறார். நாங்கள் பல்லவன் வழி வந்தவர்கள் என்று ஒருவர் சொல்கிறார். நாங்கள் பாண்டியர்கள் வழி வந்தவர்கள் என்று ஒருவர் சொல்கிறார்.
மன்னர்களை எல்லாம் "எங்கள் சாதி, எங்கள் சாதி என்று அந்த சாதிய பாசத்தோடு பிணைக்க பார்க்கிறார்கள் அல்லவா; அவர்களுக்குதான் திராவிடம் கசக்கும்.
மன்னர்களின் வரலாற்றின் பெருமையை பேசுகிறேன் என்று, பார்பனர்களுக்கு கங்கானிகள் வேலை பார்க்கும் இவர்களுக்குத்தான் திராவிடம் கசக்கும், சமத்துவம் கசக்கும், சகோதரத்துவம் கசக்கும்..
பக்தி இயக்கம் காலம் பிறகு பேரரசுகள், தம் மக்களை எவ்வாறு நடத்தினார்கள் என்பதை எடுத்துக்காட்டாக கூறும் “இளையான்புத்தூர்” செப்பேடு உள்ளது
இளையான்புதூர் செப்பேடு:-
கம்பலை என்ற உரிமைக் குரல்.. காவேரிக்கரை சோமயாஜி என்ற பிராமணனுக்கு கயத்தாறு அருகிலுள்ள திருமங்கலக் குறிச்சியில் (செப்பேட்டில் இளையான்புதூர்.. ஆகவே இளையான்புதூர் செப்பேடு ) நிலதானம் ஒன்றை அறிவிக்கிறான் பாண்டியன் நின்ற சீர் நெடுமாறன்..
இந்த நிலதானத்தை எதிர்க்கிறார்கள் “கம்பலை”யின் தலைமையில் மக்கள் எதிர்கிறார்கள்.. எங்கள் நிலத்தை ஆரிய அந்நியர்களுக்கு கொடுப்பானே என்று வெகுண்டு எழுந்தான் கம்பல்... தங்கள் நிலங்களை வந்தேறி பார்ப்பனர்களுக்கு, தானம் கொடுத்ததை எதிர்த்தான்.. கல்வெட்டுகளையும், செப்பேடுகளையும் உடைத்து எறிந்தான்...எதிர்த்தால் விட்டுவிடுமா பார்ப்பனிய அரசதிகாரம்.. கம்பலை என்னும் மறக்குடித் தலைவனை அடித்துக் கொன்று மீண்டும் அந்த தானத்தை நிலை நிறுத்தினார்கள். இப்படியான பெருமை கூறும் செப்பேடுதான் இந்த இளையான்புதூர் செப்பேடு.
மறக்கேடு:-
மறக்குடி மக்கள் பிராமணகளுக்கு எதிராகக் கிளர்ந்தெழுந்து பிரமதேயங்களுக்குரிய அரச ஆவணங்களை அழிக்கிறார்கள். இந்தக்கிளர்ச்சி, “தளவாய்புரம்” செப்பேட்டில் “மறக்கேடு” என்று குறிப்பிடப்பெறுகிறது. இத்தகைய மறக்கேட்டினால் ஆவணங்களை இழந்தவர்கள் மீண்டும் உரிமை கோரி எழுதியதன் காரணமாகவே, அரசனின் ஆட்சிக்கு நூறாண்டுகள் கழித்து இந்த ஆவணம் எழுதப்பட்டுள்ளது.
பக்தி என்பதே பணிந்து செல் என்று அர்த்தம். அந்த பக்தியை வைத்து ஆரியத்திற்கு வேளை செய்யும் கங்கானிகள் என்னென்ன அடிமைதனம் தமிழ் மக்கள் மீது செய்தார்கள் என்பதை எவர் பேசுகிறாரோ என்று பாருங்கள்?!
"திராவிட மொழிக் குடும்பமே இல்லை”, என பார்ப்பனர்களும், பார்ப்பன கங்கானிகளும் பசப்புவதை நம்மால் எளிதில் புரிந்து கொள்ள முடியும்.
திராவிடம் என்பது சுயமரியாதை-சமூக நீதிக் கருத்தியல். இதில் ஒவ்வாமை இருப்பவர்களுக்கு திராவிடம் கசக்கத்தான் செய்யும்.
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
No comments:
Post a Comment