புத்தகம்: தேசாந்திரி. ஆசிரியர்: எஸ். ராமகிருஷ்ணன்

புத்தகம்: தேசாந்திரி

ஆசிரியர்: எஸ். ராமகிருஷ்ணன்



உலகின் முதற்பயணி சூரியனே. அது முடிவில்லாமல் பயணித்துக் கொண்டேயிருக்கிறது. பயணமே மனிதர்களை மாற்றுகிறது. சைபீரியாவில் இருந்து பறந்து வரும் நாரைகள் வேடந்தாங்கலில் தங்கி இனத்தை விருத்தி செய்கின்றன. பறவைகள் தன் இனத்தை விருத்தி செய்யப் பறந்து வருவது போல நாம் அறிவையும் அனுபவத்தையும் விரிவு செய்யப் பயணம் செய்ய வேண்டும். 

பயணத்தில் நாம் புதிது புதிதாக அனுபவங்களைப் பெறுகிறோம். புதிய உணர்வுகள் தோன்றுகின்றன. உலகைப் பற்றி நாம் கொண்டிருந்த எண்ணங்கள் உருமாறத் துவங்குகின்றன. காணும் இடங்களை வியப்பதுடன் சிறகடித்து அகன்ற வானில் பறக்க துவங்குகிறோம். 

பயணம் என்பது வெறுமனே ஓரிடம் விட்டு ஒரிடம் செல்வதில்லை . நமக்குள் இருக்கும் ஆயிரம் கதவுகளை திறந்துவிடுவதே பயணம். 

எந்த வசதியும் இல்லாத காலத்திலே மனிதர்கள் நீண்ட தூரம் பயணித்திருக்கிறார்கள். கடல்வழிகளைக் கண்டறிந் திருக்கிறார்கள். நட்சத்திரங்களைத் துணையாகக் கொண்டு நடந்திருக்கிறார்கள். இன்று எல்லா வசதிகளும் வந்துவிட்டன. ஆனால் பயணம் போகிற மனநிலை பலருக்கும் வாய்க்கவில்லை. ஆசிரியர் எஸ். ராமகிருஷ்ணன் அவர்களின் பயணத்தில் கண்ட காட்சிகளை, மனிதர்களை அனுபவத்தையே இந்தக் கட்டுரைகளாக எழுதியிருக்கிறார். இந்த உலகத்தில் ரசிப்பதற்கும் , சுற்றி பார்ப்பதற்கும் என்ன இருக்கிறது ?? இயற்கை என்றால் என்ன?  பயணம் என்றால் என்ன போன்ற தேடல்களின் விடை தான் இப்புத்தகம். 

சூரியன் , மழை , குளிர் , மலை , கிணறு , ஆறு , அருவி , கல்லு , மண்ணு , பறவைகள் , பூக்கள் , மரங்கள் , மேகம் , கடல் , உப்பு என்று நாம் கண்டு கொள்ளாத , கருத்தில் கொள்ளாத , ரசிக்க மறந்த அத்துனை இயற்கை அம்சங்களை பற்றியும் தனிதனியாக விவரிக்கிறார் . 

படிக்க படிக்க , ஆசிரியர் எஸ். ராமகிருஷ்ணன் நம் கையை பிடித்து அவருடன் நம்மையும் கூட்டி செல்வது போல் ஓர் உணர்வு. இந்த தேசாந்திரியை கையில் எடுத்ததால் சிறிது நேரம் நாமும் மாறி விடுகிறோம் தேசாந்திரியாய் ❤️🎉🎊

                 🙏🙏🙏🙏🙏🙏🙏


No comments:

Post a Comment