சிந்துச் சமவெளி நாகரிகம் வேத நாகரிகம் அல்ல – மரபணு ஆய்வு முடிவுகள் !
ஹரப்பா நாகரிகம் என்றழைக்கப்படும் சிந்துச் சமவெளி நாகரிக (Indus Valley Civilisation – IVC) மக்களின் மரபு வழிஅடையாளம் குறித்த மர்மம் மற்றும் சர்ச்சைகளுக்கு கடந்த வியாழனன்று (05-09-2019) வெளியிடப்பட்ட இரண்டு மரபணு ஆய்வுகள் மறுக்கவியலாத பதிலை அளித்துள்ளன.
ஹரியானா மாநிலத்தின் ராக்கிகர்ஹி என்ற இடத்தில் வளர்ச்சியடைந்த ஹரப்பா நாகரிக கால நகரம் இருந்துள்ளது. அவ்விடத்தில் தொல்பொருள் அகழ்வாய்வில் ஈடுபட்ட ஆய்வாளர்கள் சிந்துச் சமவெளி நாகரிக காலத்தைச் சேர்ந்த இடுகாட்டில் ஆண், பெண் இருவரின் எலும்புக்கூடுகளை கண்டுபிடித்தனர். அதில் பெண்ணின் எலும்பை மரபணுஆய்வுக்கு உட்படுத்தியுள்ளனர். இவ்வாய்வறிக்கை செல்(Cell) என்ற அறிவியல் ஆய்விதழில் வெளியாகியுள்ளது.
👉 சிந்துச் சமவெளி நாகரிகத்தில் வசித்தவர்களிடம் ஸ்டெப்பி புல்வெளி மற்றும் பண்டைய ஈரானிய வேளாண்குடிகளின் மரபணு இல்லை.
👉 பழங்கால தென்னிந்திய வேட்டைச் சமூகம் மற்றும் பழங்கால விவசாயத்திற்கு முந்தைய (புதிய கற்கால) ஈரானிய சமூகம் ஆகிய கலப்பின மரபணுவைக் கொண்டிருப்பதை இவ்விரு ஆய்வு முடிவுகளும் தெரிவிக்கின்றன.
👉 சிந்துச் சமவெளி மக்களிடம் ஈரானிய வேளாண்குடிகளின் மரபணு இல்லை
👉 சிந்துச் சமவெளி நாகரிகத்திற்கு முற்பட்ட காலத்திலேயே ஈரானில் இருந்து வந்து இந்திய மூதாதையினருடன்கலந்தனர் என்றும், இவர்களே பின்னர் வேளாண்மையில் ஈடுபட்டு சிந்துச்சமவெளி நாகரிகமாக வளர்ச்சியடைந்தனர்
“சிந்துச்சமவெளி நாகரிகம் வேத (ஆரிய) நாகரிகம் அல்ல என்பதும் உறுதியாகிவிட்டது”
👉 “தற்கால வட இந்தியர்களிடம் குறிப்பாக இந்தோ-ஐரோப்பிய மொழிக் குடும்பங்களை பயன்படுத்தும் இந்தியபுரோகித சமூகங்களில் (குறிப்பாக பார்ப்பன, பனியா மேல்சாதியினர்) இந்த ஸ்டெப்பி வம்சாவளி மரபணு மிகஅதிகமாகக் காணக்கிடைக்கிறது” என்கிறது science இதழில் வெளியான ஆய்வு
👉 இன்றைய நவீன இந்தியர்கள் அனைவருமே வடஇந்திய மூதாதையர் (Ancestral Noth Indians – ANI) மற்றும் தென்னிந்திய மூதாதையர் (Ancestral South Indians – ASI) ஆகிய இரு வம்சாவளியின் வழித்தோன்றல்களே. இவ்விரு வம்சாவளியினரும் சிந்துச் சமவெளி நாகரிகத்தின் அழிவிற்குப் பின்னரே தோன்றினர் என்பதும் தற்போது உறுதியாகியுள்ளது.
வடஇந்திய மூதாதையர் (Ancestral Noth Indians – ANI):- சிந்துச்சமவெளி நாகரிகத்தின் வீழ்ச்சிக்குப் பிறகு, அம்மக்கள் வடமேற்கில் இருந்த இனக்குழுக்களுடனும் மற்றும் ஸ்டெப்பி வம்சாவளியுடனும் கலந்து ‘வடஇந்தியமூதாதையர்’ உருவாகினர்.
தென்இந்திய மூதாதையர் (Ancestral South Indians – ASI):- சிந்துச்சமவெளி நாகரிகத்தின் வீழ்ச்சிக்குப் பிறகு, அம்மக்கள் தென்னிந்திய மூதாதைகளான வேட்டை சமூக குழுக்களுடன் (AASI) கலந்து ‘தென்இந்திய மூதாதையர்’ உருவாகினர்
👉 தெற்காசியாவில் இரண்டாவது மிகப் பெரிய மொழிக் குழுமமான திராவிட மொழிக் குழுமத்தின் தோற்றம் பற்றிய கேள்விக்கும் இந்த ஆய்வு விடையளித்துள்ளது. தென்னிந்திய மூதாதையருக்கும் (ASI) தற்போதைய திராவிடமொழிகளுக்கும் இடையில் உள்ள இணையுறவை வைத்துப் பார்க்கும்போது தென்னிந்திய மூதாதையர் என்பவர்கள், சிந்துச் சமவெளி நாகரிகம் (IVC) மறையத் துவங்கியபோது கிழக்கிலும் தெற்கிலும் பரவி, மிக ஆதிகால தென்னிந்தியமூதாதைகளான வேட்டை சமூக குழுக்களுடன் (AASI) கலந்தனர். இவர்கள், ஆரம்பகால திராவிட மொழிகளைப்பேசியிருக்கக்கூடும்” என்கிறது Science இதழில் வெளியான ஆய்வறிக்கை
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏